Verse
72
தானான
மந்திரமும் அவர்க்கே சித்தி
சாம்பவியாம்
அம்பலமும் அவர்க்கே வீடு
தேனான
சிலம்பொலியே பானம் பானம்
சிவசிவா
பூரணமோ தெகிட்டாத பானம்
கோனான
குருமணியே அவர்க்கு நாட்டம்
குருநம
சிவாய சிவ கொங்கணாதி
பானான
ஞானமொடு வாதக் காடு
பரப்பினார்
நவமணிகள் பரப்பினாரே
Translation:
A brahma yogi will attain mantra siddhi.
The
arena, Sambhavi, is his locus/residence,
The
sweet honey-like sound of the anklet is his drink
Siva
sivā the state of being fully complete is unsatiating drink
His
aim is the gurumani, the king,
Guru
namacivaya, Siva, Konkana etc
The
wisdom and the forest of alchemy
They
spread it, the nine gems, spread it.
Commentary:
This verse is a continuation of the previous
verse on the mystical accomplishments of a brahma yogin. Here Agatthiyar
says that such a yogin attains mantra siddhi. He will experience the Sambhavi
yoga siddhi. He will hear the various sounds an example of which is the
tinkling of the anklets which is heard when the kundalini passes through the
svadhishtana cakra. He will enjoy the experience of the gurumani- the
experiences that occur at the ajna cakra, he will attain wisdom and success in
alchemy. The Guru namacivaya, Siva and Konkana are highly accomplished
Siddhas. Gurunamacivaya also refers to Siva. The term 'nava mani'
may be interpreted as the 'new gems' or the 'nine jewels'. Agatthiyar may
be referring to the nine siddhas he starts listing from Guru namacivaya, Siva
and Konkana who spread the Siva yogam.
Interestingly, the nath sampradhaya has nine important siddhas or nava
natha siddhas starting from Goraknath.
The nine jewels has an interesting
connotation. In a later verse we will see the relation between the cakras and
the nine planets. These planets not only
control the external world, the macrocosm, they also control the human body,
its physical as well as mental states.
The nine gems or navaratna stones that Ayurveda recommends for various
diseases correspond to the nine planets as follows. It has become a general practice to wear all
of them strong together as a chain or placed in gold as a ring. From the ayurvedic book by Dr. Vasantha Lad,
we find that this is not correct. Each
gemstone as a specific effect and some combinations are even detrimental. One has to consult an astrologer or an
ayurvedic doctor before wearing these stones.
The Brhat Jataka mentions as follows: "Top quality and flawless ruby is the gem
for the Sun, natural pearl for the Moon, red coral for Mars, emerald for
Mercury yellow sapphire for Jupiter, diamond for Venus, blue sapphire for
Saturn, hessonite for Rahu (ascending lunar node), and cat's eye for Ketu
(descending lunar node).
The ruby (sun) pacifies vatta and kapha and elevates pittha, it gives
longevity and kindles the agni thus improving digestion.
Pearl (moon)-
tridoshic, pacifies all the three doshas, reduces pittha, should be worn on the
index finger, brings mental peace and tranquility.
Red coral
(Mars) calms down pittha, used when there is low liver spleen and pericardial
energy protects from Mar's energy.
Emerald (for
Mercury) removes nervousness, grants vak siddhi,
Diamond
(Sukran or Venus) governs reproductive system, arts, music etc,
Neelam or
blue sapphire- brings good effects of Saturn the yoga kaarakan, worn in the
right middle finger. Never wear blue sapphire and diamond together!
Pushkarajam-
represents Jupiter, calms vata and pittha and increases kapha, topaz or yellow
sapphire brings down the negative effective of moon or Mars.
Gomedhakam-
for rahu, strengthens spleen and solar plexus, should be worn in ring finger,
cures mental disorders
Vaidurya or
cat's eye- for ketu, good for diabetes and arthrities.
(Refer to
Vasant Lad's book Secrets of the Pulse www.scribd.com).
These
gemstones work towards physical wellbeing as well as spiritual evolution.
ஒரு பிரம்ம யோகி பெரும்
சித்திகளை அகத்தியர் இப்பாடலிலும் கூறுகிறார். ஒரு பிரம்ம
யோகி மந்திர சித்தி, சாம்பவி யோக சித்தி- மனமழிந்த நிலை,
பல்வேறு சப்தங்களைக் கேட்டல்- குண்டலினி சுவாதிஷ்டானத்தைக்
கடக்கும்போது சிலம்பொலி கேட்டல், ஞானம், குருமணி அனுபவம்– ஆக்ஞையில் ஏற்படும் அனுபவங்கள்,
ரசவாதம் ஆகியவற்றில் சித்தி முதலியவற்றைப் பெறுகிறார்.
ரசவாதத்தையும்
குண்டலினி யோகத்தையும் குருநமசிவாயர், சிவன், கொங்கணர் முதலிய நவமணிகள் உலகில்
பரப்பினர் என்று அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார். இங்கு நவமணிகள் என்பது முக்கியமான ஒன்பது
சித்தர்களைக் குறிக்கிறது. கோரகரைக்
குருவாகப் பெற்ற நாத சம்பிரதாயத்தில் ஒன்பது முக்கிய குருக்கள் நவநாதர்கள் என்று
அழைக்கப்படுவதை இங்கு நினைவுகூரவும்.
நவமணிகள்
என்பது ஒன்பது கற்களான நவரத்தினங்களைக் குறிக்கின்றன என்று கொண்டால் அவற்றிற்கும்
ஒன்பது கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு மனிதனின் உடல் நலத்தையும் மன நலத்தையும்
ஆன்மீக வளர்ச்சியையும் அவை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதையும் பார்க்கலாம்.
பிருகத்
ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பைக்
கீழ்காணும் விதமாகக் கூறுகிறது
மாணிக்கம்-
சூரியனுக்கு உகந்தது. வாத கபத்தை சமன்படுத்தி
பித்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளை அளிக்கிறது.உடலில் உள்ள அக்னியைத் தூண்டி
ஜீரணசக்தியை அதிகரிக்கிறது.
முத்து-
சந்திரனுடன் தொடர்பு கொண்டது, எல்லா தோஷங்களையும் சமன்படுத்துகிறது. வலது ஆள்காட்டி விரலில் அணிந்துகொள்ள வேண்டும்.
மனத்துக்கு அமைதியையும் சாந்தத்தையும் அளிக்கவல்லது.
புஷ்பராகம்-
குருவுக்கு ஏற்றது, வாத பித்தத்தை சமன்படுத்தி கபத்தை அதிகரிக்கிறது. செவ்வாயின்
தீமையைக் குறைக்கிறது.
பவளம்-
செவ்வாய்க்கு ஏற்றது, பித்தத்தைக் குறைக்கிறது,
எமரால்டு-
புதனுக்கு ஏற்றது, படபடப்பைக் குறைக்கிறது பேச்சுத்திறன், எழுத்துத் திறனை
அதிகரிக்கிறது.
நீலம்-
சனிக்கு ஏற்றது, வலது கைநடுவிரலில் அணியவேண்டும்.
நீலத்தையும் வைரத்தையும் சேர்த்து அணியக்கூடாது!
வைரம்-
சுக்கிரனுக்கு ஏற்றது, கலைகளில் திறமையை அளிப்பது, குடும்ப விருத்திக்கு உதவுவது.
கோமேதகம்-
ராகுவுக்கு ஏற்றது,கவனமின்மையை விலக்குவது, மனம் சார்ந்த நோய்களுக்கு ஏற்றது.
வைடூர்யம்-
கேது- சர்க்கரை நோய் மூட்டுவலிக்கு ஏற்றது.
நவரத்தினங்களை
மோதிரமாகவோ மாலையாகவோ அணியும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இந்த கற்களை தகுந்த ஜோதிடரைக் கேட்ட பிறகோ, குருவைக்
கேட்ட பிறகோதான் அணியவேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நம்
உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பைப்
பின் வரும் ஒரு பாடலில் காணலாம். இந்த நவரத்தினங்கள்
நமது சக்தி மையங்களின் மீதும் தமது ஆற்றலைச் செலுத்தி நமது ஆன்மீக முன்னேற்றைத்தையும்
கட்டுப்படுத்தக் கூடியவை.
இவற்றைப்
பற்றிய விவரங்களை டாக்டர் வசந்த் லாட் என்பவரது நாடிகளைப் பற்றிய மேலே
குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் காணலாம்.
No comments:
Post a Comment