Verse
78
ஐயனே
புலத்தியனே சொல்லக் கேளு
அரைச்
சொல்லுக் கிரைச் சொல்லு திருத்திச் சொன்னாய்
மெய்யனே
கொங்கணர்தன் ஞானச் செய்கை
விள்ளுகிறேன்
மனதடங்கி மனதில் காரு
பையனே
முப்பாலும் பொசித்துக் கொண்டார்
பருதி
என்னும் சின்மயமே வியங்க மார்க்கம்
துய்யனே
புலத்தியனே பற்றற்றோனே
சூக்ஷமிது
சூக்ஷமிது சொக்கி ஏறே
Translation:
Sir,
Pulatthiya! Listen to me say it
You
said it correctly
The
truthful one! I will tell you about
Konkana’s
Action. With control of the mind save this in your
heart
Son!
He consumed the three pāl
The
chinmaya, the Sun, is the path of the sky
The
Pure One! Pulatthiya! The one free of
attachments!
This
is subtle, subtle, climb with enchantment.
Commentary:
Agatthiyar
adds to his previous instructions on Kundalini yoga here. He says that the path of the sun is the path
to choose. Ramayana says that Agatthiyar taught Rama the Aditya hrudayam or a prayer for Surya. One wonders whether Agatthiyar taught Rama this path.
Agatthiyar tells Pulatthiyar that
Konkanar enjoyed the desire for worldly things transmuted into the desire for
the divine and the downpour of the nectar or the somapāl. He points two important characteristics that
an aspirant should possess. They are
purity and detachment. Purity should be
that of words, thoughts and action. All the
actions should be performed without any attachment. Agatthiyar tells Pulatthiyar that this
knowledge and practice are very subtle and that he should raise his prana
through this method with enchantment.
இப்பாடலில் அகத்தியர் குண்டலினி
யோகத்தின் மற்றொரு முக்கிய அம்சத்தைக் கூறுகிறார். ஞானத்துக்கான மார்க்கம் பரிதி
மார்க்கம் அல்லது சூரியனின் பாதை என்கிறார்.
இராமாயணத்தில் அகத்தியர் இராமருக்கு ஆதித்திய ஹ்ருதயம் என்னும் சூரிய
வழிபாட்டுத் தோத்திரத்தைக் கற்றுக்கொடுத்தார் என்று கூறப்படுகிறது. அகத்தியர்
இராமருக்கு இந்த சூரிய மார்க்கத்தைக் கற்றுக்கொடுத்தாரோ என்று நம்மை இந்தப் பாடல்
வரி எண்ணச் செய்கிறது. அவர் மேலும்
கொங்கணர் முப்பாலையும் அனுபவித்தார் என்று புலத்தியருக்குக் கூறி புலத்தியரைத்
தூய்மையானவரே பற்றற்றவரே என்று அழைக்கிறார்.
இவ்விரு குணங்களும் ஞானம் பெறுவதற்கு அவசியம் என்று இதன்மூலம் அகத்தியர்
நமக்குக் காட்டுகிறார். இந்த வழிகள்
அனைத்தும் மிகச் சூட்சுமமானவை என்றும் புலத்தியரை இதன் மூலம் அவரது குண்டலினி
சக்தியை சுழுமுனை நாடியின் மூலம் மேலே ஏற்றும்படியும் அவர் கூறுகிறார்.
Marvellous ..!
ReplyDeleteMany a knowledge gained through these.."Pearls of Wisdom".
Thank you.
ReplyDelete