Sunday 16 March 2014

86. If stove is stoked rice should be cooked

Verse 86
உலகத்தோர் பூசை என்ன எழுத்தைந்தாகும்
உயிரெழுத்தை அறியார்கள் உடலே சொல்வார்
கலகத்தே மனம் இருக்க தவசு செய்வார்
கனிந்த குருச் சொல்லாத பாவத்தாலே
சிலையொத்த திரோதையின் மயக்கத்தாலே
சீவனத்துக்கிரை தேடி அழுதிட்டார்கள்
உலையிலே இட்டால் அரிசியிட்டு வடிக்க வேணும்
ஓஓஓ அரிசியடா சோறுமாச்சு

Translation:
What is worship by the worldly?  It is only the five letters
Those who do not know the vowels (soul) will say the consonants (body)
With rebellion in their mind they will perform tapas
As a mature guru has not advised them, due to lack of that attitude
Due to the enchantment over a statue-like lady
They cry searching food for their livelihood
If the stove is stoked, rice should be cooked
O!O!O! the rice became cooked food.

Commentary:
The first line can be interpreted in two ways.  Agatthiyar may be meaning that the worldly people should eulogise the true principle behind the five letters, namacivaya.  Instead they are worshipping the worldly things, also represented by the five letters.  We already saw how the five letters represent the five elements that constitute everything in this universe. 
He adds further that those who do not know the ‘uyir’ will say ‘the body’.  The vowels are called uyir ezhutthu or the soul letters with which are created the consonants or the ‘mei ezhutthu’.  The Lord is the soul, the vowels and the body or the manifested, the Jiva are created from Him.  Those who do not realize that the Lord is the soul within, will say that only the body exists and is acting independently, not under the control of the Lord.  Such ignorant worldly people will perform austerities with their minds clouded with deceit and trickery.  They will desire worldly pleasures, represented by woman, and will spend all their time seeking them, the food for their lives.   Agatthiyar says that if the rice is sought it should be made into food, that is, if the worldly pleasures are sought then one should be prepared to face the consequences also.  Alternately, if one seeks liberation one should "cook" these desires.


இப்பாடலின் முதல் வரிக்கு இருவிதமாகப் பொருள் கூறலாம்.  உலக மக்கள் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து பூஜை செய்யவேண்டும் ஆனால் அவ்வாறில்லாமல் அவர்கள் ஐந்தெழுத்தால் குறிக்கப்படும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள உலகப்பொருட்களையே பூஜிக்கின்றனர்.  இவ்வாறு பொருட்களின் உள்ளே உயிராக இருக்கும் இறைவனை உணராதவர்கள், எழுத்துக்களினுள்ளே இருக்கும் உயிரெழுத்துக்களை உணராதவர்கள், மெய், அதாவது உடல் மாத்திரம், மெய் எழுத்துக்கள் மாத்திரம் உள்ளன என்று கூறுவார்.  உயிர் இல்லாவிட்டால் மெய் இல்லை!  இது மெய்யெழுத்துக்களுக்கும் மெய்யான உடலுக்கும் பொருந்தும்.  இதை உணராமல் மக்கள் கலகத்தைக் கொண்ட மனத்தோடு தவங்கள் செய்கின்றனர்.  உண்மையான குரு கூறிய மன நிலையைக் கொள்ளாமல் பெண்ணிடம் மோகம் கொள்கின்றனர்.  அதாவது, உலகப்பொருட்களை விரும்புகின்றனர்.  உலையை இட்டால் சோறு பொங்கித்தான் ஆகவேண்டும் என்பது போல இவ்வித ஆசைகளைக் கொண்டால் அதன் பலன்களையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment