Tuesday, 25 March 2014

103. Status of a supreme Yogi, a Siddha

Verse 103
அணுப்போல பொறி சிதறி உலகம் தானாய்
அண்டரண்ட புவனமெல்லாம் தானாய் நின்றார்
கணுக்கான கண்ணுக்குத் தெரியாமேலும்
கருத்து வைத்தால் பிரகஸ்பதி போல் மணிவாய் நின்று
துணுக்காக அந்த மணிக்குள்ளே மைந்தா
சுத்தவான் நின்றபடி யாரும் காணார்
சிணப்போது யுகங்கள் பல கோடி கோடி
தெளிவிப்போம் இது அறிந்தோன் யோகி ரா(நா)யன்

Translation:
With the spark splitting like atom, becoming as the world
He remained as the worlds and universes
Without being visible for the eye
Placing the attention at the jewel, like Bruhaspathi
As a speck within that jewel, Son,
He will whirl, without being visible to anyone
For millions and millions of eons
I will clarify this, The one who knows this is the supreme yogi.

Commentary:
This verse talks about a kundalini yogi who raises his consciousness past the ajna.  At the ajna the yogi experiences the atma or Self which appears as a “mani’.  Yogins calls this as a six faced gemstone.  Past the ajna there are two other important cakras before the sahasrara.  They are the indu cakra and the guru cakra.  The guru cakra is at the entrance of the sahasrara.  Here Agatthiyar is talking about the guru cakra.  Traditionally, Bruhaspathi is the guru of the Devas.  Devas represent refined consciousness while asuras represent consciousness in the lower cakras.  The yogin will have his consciousness whirl up to the guru cakra and return back.  Otherwise, he will go beyond the body and will not be able to return.  This consciousness is the spark which splits into millions of specks and remains as the universes.  It is not perceivable by the eye or the senses.  Thus, Agatthiyar is talking about the nature of consciousness, that the world is a manifestation of this consciousness and a kundalini yogi does not go beyond the guru cakra if he wishes to come back to the body. Agatthiyar says that the yogi whirls like this for eons.  Time is closely tied with the breath.  We will see the relationship between the number of breaths and the division of time elsewhere.  Suffice to say that days, months, eons and all other classifications of time depend on our breath.  A yogin who can remain performing kundalini yoga is thus living for eons as he has controlled his breath and prolonged it. 


இப்பாடல் தனது விழிப்புணர்வை ஆக்ஞா சக்கரத்தையும் தாண்டி உயர்த்தும் ஒரு யோகியைப் பற்றிப் பேசுகிறது.  ஆக்ஞையைக் கடந்து இந்து சக்கரம் அல்லது சோம சக்கரம் மற்றும் குரு சக்கரம் என்று இரு சக்கரங்கள் உள்ளன.  குரு சக்கரம் சஹாஸ்ராரத்தின் வாயிலில் உள்ளதுதனது உடலை விட்டுவிட விரும்பாத குண்டலினி யோகி தனது விழிப்புணர்வை இந்த சக்கரம் வரை உயர்த்துகிறார்.  இவ்வாறு சக்கரங்களில் தனது விழிப்புணர்வை உயர்த்தியும் இறக்கியும் அந்த யோகி காலத்தின் கட்டுப்பாட்டை தனதாக்குகிறார்.  காலம் என்பது நமது சுவாசத்தினால் வரையறுக்கப்படுகிறது.  அது நமது சுவாசத்துடன் நெருங்கிய தொடர்பை உடையது.  அதனால் அகத்தியர் இந்த யோகி பல கோடிக்கணக்கான வருடங்கள் இவ்வாறு வாழ்கிறார் என்கிறார்.  மேலும் அவர் விழிப்புணர்வின் தன்மையை விளக்குகிறார்.  விழிப்புணர்வின் பொறி எண்ணற்ற துகள்களாக விழுந்து இந்த உலகமும் பலகோடி அண்டங்களாகவும் இருக்கிறது.  அதாவது, இந்த உலகம் விழிப்புணர்வின் வெளிப்பாடுதான்.  இதையே அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார். இந்த விழிப்புணர்வைப் புலன்களால் உணர முடியாது.  

No comments:

Post a Comment