Verse
94
தேறுதற்கு
வகையேது என்று கேட்கில்
சிறந்த
ருத்திரன் ருத்திரியைத் தியானத்தோடு
வீரவே
ரேசக பூரகமும் செய்து
வெகுவாக்கு
மடித்து ஊதும்போது
மீறவே
இருவரிட தெரிசனமே காணும்
விளங்கவே
அவர் பதத்தைப் பற்றிக் கொண்டு
ஊறவே
அமிர்தகனி உண்டாயானால்
ஒயிலான
ருத்திரன் தன் பூசையாமே
Translation:
If
questioning the method to become an expert,
Contemplating
the Rudra and Rudri
Valorously,
along with inhalation and exhalation,
Folding
the tongue and blowing
When
it (consciousness) exceeds (its limits), their divine vision is seen
Holding
on to their sacred feet
When
the secretion occurs, if you consume the nectar fruit
This
is the gracious worship of Rudran.
Commentary:
Agatthiyar
explains how to worship the Rudra and Rudri in the anahata cakra. Holding them in the mind if an aspirant
breathes in and out while folding the tongue to retain the breath inside, that
is holding the khechari mudra, then he will be granted the divine vision of
Rudra and Rudri. Holding on to their
sacred feet the nectar will start oozing.
Agatthiyar says that performing this breathing technique and consuming
the nectar that flows is worship of Rudra.
இப்பாடலில்
ருத்திர பூஜை என்றால் என்ன என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார். அனாஹத சக்கரத்தின் அதிதேவதைகளான ருத்திரனையும்
ருத்திரியையும் மனதுள் நினைத்து நாக்கை மடித்து கேசரி முத்திரையில் வைத்துக்கொண்டு
மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் அந்த யோகியின் விழிப்புணர்வு அதன் எல்லையைக்
கடக்கிறது. அப்போது ருத்திரன் ருத்திரியின்
தரிசனம் கிட்டுகிறது. அப்போது சஹாஸ்ராரத்திலிருந்து
அமுது ஊறுகின்றது. இதைப் பருகுவதே ருத்திர
பூஜை என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment