Saturday 29 March 2014

114. Need to wait for the right time

Verse 114
பாரப்பா கனகசபை நடன மேவிப்
பார்த்தோர்க்குத் தோணுமிந்த பலக்கு நன்றாய்
சாரப்பா சமையுமுன்னே பிள்ளையாமோ
சமத்தில்லாள் சபை ஏறி ஆடப்போமோ
காரப்பா தந்தி இல்லா வீணையாமோ
காதில்லா சங்கீதம் பலிதம் ஆமோ
சீரப்பா வித்தென்றால் விளைந்து போச்சோ
சிவசிவா ஞானி அறிவான் சொல்லோ

Translation:
See son, those who saw the dance in
The golden arena, will realize this.
Associate with it.  Can one bear a child before attaining physical maturity?
Can an incapable dancer go to the stage attempting to dance?
See son, is there a veena without the string?
Will the music be effective if there are no ears to hear?
See son, will the mere utterance, “seed” make it a mature plant?
Siva Siva!  The wise one will not say.

Commentary:
Dance in the golden arena or kanakasabha means the dance of consciousness at the pinnacle, the zone beyond the sahasrara.  This is the principle behind the dancing form of Siva in Chidambaram.  However, one has to wait for the right time for this to happen.  Agatthiyar says that one cannot become pregnant until one attains the right physical maturity.  An untrained dance cannot go to the arena trying to dance when she is not ready for it.  A veena without a string cannot be played to create music.  The string here are the nadi, the music from the veena are the sounds that kundalini produces upon its arousal.  One needs “ears” to enjoy this music, the right faculty to experience the Divine.  Mere verbal utterance or explanation will not make one experience the Divine.  It is exclusively an experience.  Mere utterance of the word seed will not make it become a mature plant.  The conditions have to be right. Sufficient patience is needed to wait for it to happen.  Experience of the divine is also something that needs the qualification and the patience.   Agatthiyar concludes this exposition saying that the wise will not try to verbalise what a divine experience is.  They will not utter any words trying to explain it.


கனக சபையில் நடனம் என்பது சஹாஸ்ராரத்தைக் கடந்த பரவெளியில் விழிப்புணர்வின் நடனமாகும்.  இதைத்தான் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் என்று ஆன்றோர் குறிப்பிடுகின்றனர்.  ஆனால் இந்த நடனத்தைக் காண்பதற்கு ஒருவர் தகுந்த காலம் வரும்வரை பொறுக்க வேண்டும்.  இதை அகத்தியர், ஒருவர் உடலளவில் தகுந்த பக்குவத்தை அடைந்தால்தான் சூல் கொள்ள முடியும், தகுந்த தேர்ச்சி பெற்ற ஒரு நடனமாதுதான் அரங்கத்தினுள் நடனமாட நுழைய முடியும், தந்தி இருந்தால்தான் வீணையில் நாதத்தை எழுப்ப முடியும் என்று சுட்டிக் காட்டுகிறார்.  ஒருவர் தகுந்த தேர்ச்சியையும் பக்குவத்தையும் பெற்றிருந்தால் சரியான சமயத்தில் இறையுணர்வை அனுபவிக்கலாம்.  தந்தி என்பது நாடிகளைக் குறிக்கும்.  சரியான நாடியில், சுழுமுனையில் குண்டலினி சக்தி பாய்ந்தால்தான் நாதம் எழுகிறது.  அந்த நாதத்தைக் கேட்க ஒருவருக்கு “காது” புலன்களைக் கடந்த கேட்கும் தன்மை தேவைப்படுகிறது.  மேலும் அகத்தியர் விதை என்று வாயால் கூறினால் அதுவே வளர்ந்த பயிராக முடியுமா என்று கேட்கிறார்.  அதாவது வெறும் வார்த்தை ஞானம் இறையுணர்வைத் தராது.  அது தகுந்த பருவத்தில் ஏற்படும் ஒரு அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.  அதற்குப் பெரும் பொறுமை தேவை.  இதனை அறிந்த ஞானிகள் இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிப்பதில்லை.  அதாவது புலத்தியருக்கு அகத்தியர் தான் அதை வார்த்தைகளால் விளக்க முடியாது புலத்தியர் அதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்கிறார்.  

No comments:

Post a Comment