Saturday 15 March 2014

79. Glory of the five letters

Verse 79
ஏறென்றால் என்குருவே வேத வாழ்வே
இன்பரசத் தெள்ளமுர்த்த தெவிட்டாத் தேனே
கூறென்றீர் சின்மணியே அருளே ஞானக்
கோவி சுடர் காந்தி கொண்டத் தியாகி
ஆரென்று சொல்வேன் நான் இடமோ காணேன்
அஞ்செழுத்ததின் பெருமைதனை விரித்து நன்றாய்
வேறென்றீர் இந்நூலே சொல்லக் காணேன்
மெய்யாக விளங்க இங்கே வெளிச் சொல்வீரே

Translation:
If telling me to climb, My Preceptor, the one who lives according to the Vedas!
The sweet, honey-like, nectar!
You told me to say it,  The Supreme Jewel! Grace!
The philanthrophist with the effulgence of flame of wisdom!
Who can I point out?  I do not see the place either,
The glory of the five letters- in detail,
You said it was different. I do not see it explained in this book,
You may please tell us so that we will understand the truth.

Commentary:
Pulatthiyar is requesting Agatthiyar to explain the esoteric philosophy behind the five letters, the mantra namacivaya.  In the passage above this request, Pulatthiyar is praising Agatthiyar in various ways.  He calls him a ‘tyagi’, one who sacrifices.  Here Agatthiyar is sacrificing his knowledge, he is sharing it with Pulatthiyar without expecting anything in return. 


இப்பாடலில் புலத்தியர் அகத்தியரிடம் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்குமாறு கூறுகிறார்.  அதற்கு முன் அவர் அகத்தியரைப் பல விதங்களில் புகழுகிறார்.  அவர் அகத்தியரைத் தியாகி என்கிறார்.  அகத்தியர் செய்வது ஒரு நூதனத் தியாகம்.  அவர்தனது ஞானத்தை எவ்வித பலனும் எதிர்பாராமல் தனது சீடனுக்குத் தியாகம் செய்கிறார்.  அத்தியாகத்தால் அவரது ஞானம் குறையாது ஆனால் புலத்தியரது ஞானம் அதிகரிக்கிறது.

2 comments:

  1. அன்பரே அகத்தியரை வணங்குவது எப்படி. என் ஜென்ம குருவை இதுவரை சந்திக்கவில்லை. நான் அகத்தியரை மனதில் குருவாக ஏற்று அவருடைய படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் ஒரு முறை பூஜிக்கிறேன்.

    ஆனால் சிலர் அகத்தியர் மிகவும் கண்டிப்பானவர். தவறு செய்தால் தண்டனை பலமாக இருக்கும் என்றும். எனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபடலாம் என்றும் சொல்லுகின்றனர்.

    எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை செல்வம் இல்லை. குழந்தை வேண்டி அகிதியரை பூஜிக்குறேன்.

    நான் செல்வது சரியான வழியா. அகத்தியர் படைத்துள்ள மந்திரங்களை சொல்லி பயிற்சி தியானம் செய்யலாமா

    ReplyDelete
  2. அகத்தியர் அன்பே உருவானவர், அவர் தண்டனை கொடுப்பார் என்று கூறுவதை நம்பவேண்டாம். உண்மையான சுத்தமான மனம் படைத்தவருக்கு அவர் தாயாய் தந்தையாய் குருவாய் ஆசானாய் இருப்பவர். தாயின் அன்புடனும் தந்தையின் கவனிப்புடனும் அவர் நம்மை வழி நடத்துபவர். இதை எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன். அகத்தியரை படமாக வைத்துப் பூஜிப்பதில் தவறில்லை. இதைப் பற்றி தவயோகி தங்கராஜன் அடிகளிடம் கேட்டால் அவர் உங்களுக்கு சரியான வழியைக் காட்டுவார். அவரது முகவரியும் தொலைபேசி எண்ணும் www.agathiyarvanam.blogspot.in என்னும் வலைத்தளத்தில் உள்ளது. அதைப் பெறுவதில் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும், நாம் அதைப் பெற்றுத் தருகிறோம். தாங்களாகவே மந்திரங்களைச் சொல்லி தியானம் செய்வதைவிட ஒரு குருவின் மூலமாக அதைப் பெற்று பயிற்சி செய்வதே முறையானது. அவர் உங்களுக்கு ஏற்ற மந்திரத்தைத் தனது சக்தியுடன் கூட்டித் தருவார். தகுந்த குருவையும் வழியையும் காட்டுமாறு அகத்தியரை மனமுருகிப் பிரார்த்தியுங்கள் அவர் உங்களுக்கு தவறாமல் வழிகாட்டுவார். உங்கள் பிரார்த்தனை நிறைவேற நாமும் அகத்தியரைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete