Monday, 24 March 2014

98. Kundalini yoga at the vishuddhi cakra

Verse 98
நெருப்பிட்டு வாசியை நீ மாட்டி ஊது
 நேரான தூப வொளி கண்ணில் தோன்றும்
வெறுப்பித்துக் கொள்ளாதே அப்பா கேளு
வீண் வாயை மெல்லாதே விழலாகாதே
ஒரு பத்து வாயுதனைக் கதலொட்டாமல்
உள்ளடக்கி ஏரியிலே உயருவாய் நீ
கருப்பத்தில் வந்த உரு காணப் போமோ
கண்மணி உந்தனுக்குக் காட்டினேனே

Translation:
Starting the fire, you blow the vāsi hooking it
The light of the smoke will become visible 
Do not get frustrated , son, listen
Do not chew an empty mouth (useless talk), do not become a weed
Controlling the ten vital airs to remain within
You will rise to the lake
Will the form that occurred in the womb leave perceptibly?
Jewel of my eye!  I showed it to you.

Commentary:
This is a continuation of the previous verse on vasi yoga.  Agatthiyar says that when the vital air is made to rise inside, after kindling the fire, the fire of kundalini, the light of the smoke will be visible.  This smoke is our soul that moves from the anahata cakra to the ajna cakra through visuddhi.  Agatthiyar tells Pulatthiyar to not waste himself in empty arguments but to control the ten vital breaths within and ascend through the sushumna.  He says that Pulathiyar will then reach the lake.  The lake Manasa soravar in the Himalayas represents this state in yoga.  It is the lake of the mind.  So the yogin transcends all the senses and reaches the state where only the mind is left over for him to deal with. He also says that the aspirant will transcend his material form that occurred during his stay in the womb.  That is, he will attain spiritual powers that go beyond the body.  One has to go to the ajna cakra only through the visuddhi cakra.

I have posted an article on different bodies mentioned in the Siddha marga from Dr. T.N.Ganapathy’s book Tamizh Siddha Marabu. 

இப்பாடல் வாசி யோகத்தை விளக்குகிறது.  அகத்தீயை மூட்டி பிராணனை விசுத்திக்கு ஏற்றினால் தூபத்தின் ஒளி கண்ணில் தென்படும் என்கிறார் அகத்தியர்.  இந்த தூபம் அல்லது புகை ஆத்மாவைக் குறிக்கும்.  அது அனாஹத சக்கரத்திலிருந்து ஆக்ஞைக்கு விசுத்தியின் வழியே ஏறுகிறது.  அகத்தியர் புலத்தியரை நேரத்தை வீணாக்காமல் பத்துவித வாயுக்களை உடலினுள் கட்டுப்படுத்தி சுழுமுனையின் ஊடே ஏறச் சொல்கிறார்.  அப்போது கருவறையில் ஏற்பட்ட உருவம் போய்விடும். என்கிறார். 

முனைவர் டாக்டர் கணபதி அவர்களது தமிழ் சித்தர்கள் மரபு என்ற நூலிலிருந்து சித்தர் மார்க்கத்தில் பேசப்படும் பலவிதமான உடல்களைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையைப் (ஆங்கிலத்தில்) பதித்துள்ளேன்.  உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.  

No comments:

Post a Comment