Verse 95
பூசை
என்று தென்பொதிகை தன்னில் என்னைப்
புதல்வன்
எனப் பெற்றெடுத்த குருவே போற்றி
ஆசை
என்ற ருத்திரன் மேல் ஆசை வைத்தால்
அமிர்தமெனும்
கருநெல்லி உண்ணலாமோ
பாசம்
வைத்தால் நிஷ்டையது நிலைக்க லாமோ
பசி
வந்தால் உயிர் உலகில் நிற்குமோதான்
வாசமுடன்
இருப்பதற்கு வகையேதையா
வஞ்சனையில்
லாமல் மனம் மகிழுவீரே
Translation:
Praise to the Guru
who had me
As a son, in the
south pothigai.
If one loves Rudra
who is love
Can the black
gooseberry, the nectar, be consumed?
If one places
attachment will the nishtai last?
Will the life
remain in this world when hunger arises?
What is the way to
remain with fragrance/ with residence?
You will become
happy without any deceit.
Commentary:
This is verse
contains a few questions from Pulatthiyar to Agatthiyar. He praises Agatthiyar’s magnificience as he
considered Pulatthiyar as his son.
Pulatthiyar asks Agatthiyar whether by cultivating love towards Rudra,
the god of anāhata cakra can one enjoy the divine nectar that flows down,
whether such an attachment will grant one the nishtai, whether the huger for
realizing the truth will still keep the soul in this world and what is the way
to remain with fragrance/residence, that is live eternally. He requests Agatthiyar to explain this
wholeheartedly and freely.
இப்பாடலில்
புலத்தியர் அகத்தியரிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். முதலில் அவர் அகத்தியர் தன்னைப் புதல்வனாகக்
கருதுவதற்கு நன்றி செலுத்துகிறார். அதன் பின் அவர் இதுவரை அகத்தியர் கூறிய
விவரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்.
இதயப் பகுதியில் உள்ள அனாஹத சக்கரம் அன்பைக் குறிக்கும். இதற்கு அதிபதி ருத்திரன். இந்த அன்பே உருவான ருத்திரனிடம் அன்பு
செலுத்தினால் ஒருவரால் சஹாஸ்ராரத்திலிருந்து ஊறும் அமுதத்தைப் புசிக்க முடியுமா
என்று புலத்தியர் முதலில் கேட்கிறார்.
அத்தகைய பற்றை ஒருவர் தன்னிடம் நிலைநிறுத்திக் கொண்டால் நிஷ்டை நிலைக்குமா,
இறைவனை உணரவேண்டும் என்ற பசி வந்தால் அந்த உயிர் இவ்வுலகில் இனியும் தங்குமா,
எவ்வாறு இந்த நிலையில் வசிப்பது, என்பது போன்ற கேள்விகளை புலத்தியர் அகத்தியரிடம்
எழுப்பி அவற்றிற்கான பதிலை அகத்தியர் மகிழ்வுடன் அளிக்கவேண்டும் என்று
வேண்டுகிறார்.
No comments:
Post a Comment