Wednesday 26 March 2014

105. House of visuddhi

Verse 105

விசுத்தி வீடு
தானாக விசுத்தியறு கோணந்தன்னில்
சமுசயங்கள் ஒன்றுமில்லை அகார வித்தை
ஊனாக மயேஸ்வரனும் மயேச்வரியு மாக
உற்று நின்ற கண்டமது சுழினை நாடி
தோணாக இது சூக்ஷம் ஸ்தூலம் கேளு
சொல்லுகிறேன் கழுத்துள்ளே பிடரிக் கண்டம்
ஆனாகத் தூலம் அதில் ஏறிப் பாரு
அரகரா அந்தமது ஆறும் பாரே

Translation:
As itself, in the six angled visuddhi
There are no doubts, akāra vidya
As body, as Maheswavara and Maheswari
This is the neck, where they remained together, seeking the whorl
This is subtle, listen about the gross,
I will tell you.  Within the neck the nape
This is the gross, climb to it and see
Arahara, see the terminal six.

Commentary:
This verse seems to be in the wrong place.  It should have been verse 102 for continuity.   This verse is about visuddhi cakra and the minor cakra, the bindu cakra.  Agatthiyar talks about the deities of the vishuddhi cakra, Maheswara and Maheswari, and describes that one should climb to the bindu cakra to see the terminal of the six cakras.

Let us see what Agatthiyar says about this cakra in the Soumya Sagaram
“The visuddhi is above the anahata.  Drawing six angles you will add sixteen petals.  In the middle you will draw the bindu and as the akshara here is vang you will draw vang kili yang.  Adorning it with flowers you will chant vang, kili, yang hundred times.  You will get feeling of air flowing fast within your body.  You will get a drunken feeling.  This yoga is the sivabodham.  The siva bodham occurs due to the three flames ending (that of sun, moon and agni mandala).  If one sees the end of the flame one will see that it is the flame from the muladhara.  The fire of vaamam (kundalini is also called vaamai) grew from muladhara upto the shatkona.  When you see this carefully you will see the terminus of sound, the Maheswara.”

Now let us see a little about the bindu cakra.  The vishuddhi is the last cakra attached to the spinal chord.  Thereafter the spine connects to the rear part of the brain known as cerebellum.  The ajna cakra located between the eyebrows has its operative part at the back of the head where the cerebellum joins the cerebrum near the occipital lobe.  The ajna cakra is called the command center.  The point that activates the ajna is the bindu cakra in the back of the skull.  Brahmins adorn a tuft to indicate this point.  During Srividya upasana, one of the rituals is to tie this tuft tightly.  This is to ensure that the focus is at this point.  Now the significance of the tuft is lost and it has become a mere symbol.  Hence, Agatthiyar calls this yoga as the yoga of the nape as the kundalini sakti travels through the back of the neck.  Thus, the bindu cakra and the ajna cakra show all the other six cakras.

The most important cakra after the muladhara and the anahata is the bindu cakra which is also called the alta major cakra.  In ancient Egypt initiations were given to people through the alta major cakra or the bindu cakra.  It is through this cakra that the cosmic consciousness enters the body.  Many Egyptian paintings depic a High Priest standing behind the initiate aiming a copper rod at this cakra. This rod transmits sound through this cakra which opens high conscious waves.  The alta major is the portal to concentrate high frequence beams of light that unite the alta major and the pineal gland.  When the cosmic consciousness enters this point and reaches the part of the brain where the optic nerves are connected, it manifests as pressure on the eyeballs. 

இப்பாடல் ஓலைச்சுவடியில் இடம் மாறி இருப்பதைப் போலத் தோன்றுகிறது.  இது பாடல் 102 ஆக இருந்திருக்கவேண்டும்.  விசுத்தி சக்கரத்தைப் பற்றி உள்ள இப்பாடலில் அகத்தியர் இந்த சக்கரத்தின் அதிதேவதைகளான மகேஸ்வரன்மகேஸ்வரியைப் பற்றிக் கூறுகிறார்.  ஒருவர் இந்த சக்கரத்தை அடைந்தால் அவர்களது தரிசனம் கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர் இந்த சக்கரத்தைப் பற்றி சௌமிய சாகரத்தில் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
“அநாகதத்துக்கு மேலுள்ள விசுத்தியில் ஆறு கோணங்களை இட்டு அதனைச் சுற்றி பதினாறு இதழ்களை இடவேண்டும்.  அந்த நடுவில் பிந்துவை இட்டு நடுவில் வங் கிலி யங் என்று எழுத வேண்டும்.  மலர்களைச் சாற்றி நூறு முறை வங் கலி யங் என்று உருப்போட வேண்டும்.  அப்போது உடலில் வாயு வேகமாகச் செல்வதைப் போன்ற உணர்வும் ஒரு மயக்கமும் ஏற்படும்.  இதுவே சிவ போதமாகும்.  இந்த சிவபோதம் முச்சுடர்களின் அந்தத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.  ஒருவர் அவ்வாறு அந்த சுடர்களின் அந்தத்தைப் பார்க்கும்போது அது மூலாதாரத்திலிருந்து எழுந்த தீ தான் என்பதை உணருவார்.  அந்த வாமத்தீ மூலாதாரத்திலிருந்து விசுத்தி வரை வளர்ந்திருப்பதைக் கண்பார்.  அப்போது அவருக்கு நாதந்தமான மகேஸ்வரனின் தரிசனம் கிட்டும்.” என்கிறார் அகத்தியர்.

இப்பொழுது நாம் பிந்து சக்கரம் அல்லது இந்து சக்கரம் எனப்படும் ஒரு சிறிய சக்கரத்தைப் பற்றிப் பார்ப்போம்.  சக்கரங்களில் விசுத்திதான் தண்டுவடத்துடன் இணைந்த கடைசி சக்கரம்.  அதன் பிறகு தண்டுவடம் சிறு மூளை பெருமூளையைச் சேரும் இடத்தை அடைகிறது.  இந்த இடத்தில் இருப்பதே பிந்து சக்கரம். விசுத்திக்கு மேலே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தை இயக்கும் புள்ளி கபாலத்தின் பின்னே உள்ள பிந்து சக்கரமே ஆகும்.  ஆக்ஞா சக்கரத்தை எல்லா சக்கரங்களின் மீதும் அதிகாரம் செலுத்தும் சக்கரம் என்று கூறினால் மிகையாகாது.  இந்த பிந்து சக்கரத்தைக் குறிக்கவே பிராமணர்கள் பின் தலையில் குடுமியை வைத்துக்கொள்கின்றனர்.  ஸ்ரீ சக்கர பூஜையின்போது இந்த குடுமியை இறுக்க முடிந்துகொள்வது ஒரு சடங்காகும். இதனால் அந்தப் புள்ளியில் மனத்தைக் குவிக்க ஏதுவாகிறது.  இப்பொழுது குடுமியின் காரணம் மறந்து அது ஒரு அடையாளமாக மாறிவிட்டது.  அதனால்தான் அகத்தியர் இந்த யோகத்தைப் பிடரி யோகம் என்கிறார்.  பிந்து சக்கரமும் ஆக்ஞா சக்கரமும் இவ்வாறு மற்ற ஆறு சக்கரங்களையும் காட்டுகின்றன.


மூலாதாரம், அனாஹதம் ஆகிய சக்கரங்களை அடுத்து மிக முக்கியமான சக்கரம் பிந்து சக்கரமாகும்.  இதை ஆல்டா மேஜர் என்றும் ஒரு பெயர் உள்ளது.  பழமையான எகிப்திய ஓவியங்களில் ஒரு சீடனுக்கு தீட்சை கொடுக்கும்போது, குரு அவனுக்குப் பின்னே இந்த சக்கரத்தைப் பார்த்தபடி கையில் ஒரு இரும்புக் கோலைக் கையில் பிடித்தபடி நிற்பதுபோல தீட்டப்பட்டுள்ளன.  இந்தக்  கோலின் மூலம் ஒரு குறிப்பிட்ட சப்தம் அந்த சீடனுக்குள் செலுத்தப்பட்டது.  இந்த பிந்து சக்கரத்தின் மூலம்தான் உயருணர்வு உடலுள் புகுகிறது என்று சில யோக நூல்கள் கூறுகின்றன.  இதன் அதிக அலைஎண் கொண்ட ஒளிக்கீற்றை உடலுள்ளும் பைனியல் நாளமிலாச் சுரப்பியினுள்ளும் செலுத்தலாம்.  பரவுணர்வு இந்த சக்கரத்தின் மூலம் மூளையினுள் புகும்போது அது கண்ணின் நரம்புகள் முடியும் இடத்தை அடைவதால் தீட்சை பெற்ற ஒருவர் கண்களின் மீது அதிக அழுத்தமாக உணருவர். 

2 comments: