Wednesday 5 March 2014

58 What do the Veda and sastras say?

Verse 58
வேதம் என்ற ஆகமங்கள் ஆறு சாத்திரம்
வெவ்வேறு மதபேதம் சமய பேதம்
காதம் என்ற சிவகீதம் அரிகீத மென்றுங்
கவுத்தமாய் உலகோரை மயக்கங் காட்டி
கீதம் என்ற சிவகீதம் அரிகீத மென்றுங்
கிருபையுடன் வெவ்வேறாய் விரித்துக் காட்டி
பாதம் என்று சாவதுவே நிஜந்தான் என்று
பாடினான் சாத்திரத்தைப் பாடினானே

Translation:
Veda, Agama, six sāstras
Different religions, different philosophies
udgatam (or udgita, the musical part of Veda) as music for Siva and for Hari
Showing them as different and thus confusing the world
Showing that music for Siva and Hari
Are different- with mercy,
He sang them as chapters and sang that death is true
He sang the sāstras so.

Commentary:
Agatthiyar describes the Vedas, Agama and sāstras.  Vedas have six limbs- siksha (phonetics), kalpa (ritual), vyaakarana (grammar), nirukta (etymology), chandas (meter) and jyotisha (astronomy).  The six philosophies are sankhya, yoga, nyaya, vaisheshika, uttara mimamsa and poorva mimamsa.  The six schools of divinities are saivam, vaishnavam, sauram, kaumaram, ganapathyam and saktam.  There are also different types of agama such as saiva agama, vaishnava agama, sakta agama, bauddha agama, etc.  Agatthiyar says that the scriptures were classified into so many subdivisions and in the end it was concluded that death is definite.  They never described the deathless state, the state attained by Siddhas.


வேதம், ஆகமம், சாஸ்திரம் என்றால் என்ன என்று அகத்தியர் கூறுகிறார்.  சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் என்று வேதம் ஆறு அங்கங்களைக் கொண்டது.  சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், உத்தர மீமாம்சம், பூர்வ மீமாம்சம் என்று தத்துவங்கள் ஆறு வகைப்படும். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் என்று மதங்கள் ஆறு வகைப்படும்.  ஆகமங்களும் சைவ வைணவ சாக்த என்று பலவகைப்படும்.  வேத மந்திரங்களில் சில சிவனுக்கு என்றும் சில விஷ்ணுவுக்கு என்றும் பல வகைப் பிரிவுகள் உள்ளன.  இவ்வாறு அனைத்திலும் பிரிவினையை ஏற்படுத்தி இறப்பு ஒன்றுதான் நிச்சயமானது என்றும் அவர்கள் நிர்ணயித்துள்ளனர் என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment