Saturday 1 March 2014

52. Procedure for attaining Siva bodham

Verse 52
காலான வாசிதனைக்  கருத்துள் ஞானி
கனக கும்ப கிரிமேவி மௌனத்தோங்கி
பாலான முப்பாலைப் பொசித்து மைந்தா
பக்குவத்தோடே இருந்து பரத்தை நாடி
மேலான சுழிநாடி விழியை நாடி
மெய்ஞ்ஞான போதகத்தில் விருப்பம் பூண்டு
கோலான உகாரம் என்ற கம்பத்தோங்கி
குறித்துப்பார் மெய்ப்போதை எழுப்புந்தானே

Translation:
The wise- having attention on the vital air (kaal)
Reaching the golden pinnacle of the mountain, with abounding silence,
Consuming the triple milk/three types, Son!
Remaining with maturity, seeking the Supreme
Seeking the supreme nadi/sushumna, the supreme eye/wakefulness
With interest in true wisdom,
Ascending the column, the stick of ukara
See with focus.  This will raise the real intoxication, see!

Commentary:
Agatthiyar explains the procedure for attaining Siva bodham.  Vasi is the vital breath or universal energy that comes into the body through the breath.  He says that a wise soul (jnani) will reach the "kanaka kumbagiri" and have the silence abound.  Kanaka kumbagiri corresponds to the ajna.  Kumbam here is kumbaka or cessation of breath.  The yogi has to have silence of mind and body.  This state of silence is the state of nadha which precedes vak or manifested form of nadha.  
The yogin consumes muppāl (karma pāl, kāmappāl and vāmappāl?, that is eradicates all kids of desires. remains with discrimination seeking the Param or the Divine in a state that precedes distinctions as Siva and Sakti.  The eye is focused at the ajna.  This is the shambavi mudra.  The yogin does not seek minor benefits, he desires only true wisdom.  The column of ukara is sushumna nadi.  Agatthiyar responds to Pulathiyar's question whether bodham is toddy or cannabis and says that the procedure described above gives true intoxication. 

சிவ போதத்தை எவ்வாறு அடைவது என்று அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார்.  வாசி என்றால்சி பிரபஞ்ச பிராண சக்தி.  அது மூச்சைத்வ தனது வாகனமாகக் கொண்டு உடலினுள் வருகிறது.  அந்த வாசியைக் கருத்தில் கொண்டு மௌனமாக இருக்கிறார் ஒரு ஞானி.  கனக கும்பகிரி என்பது ஆக்ஞையைக் குறிக்கும்.  கும்பம் என்பது கும்பகம் அல்லது மூச்சற்ற நிலையைக் குறிக்கும்.  மௌனம் என்பது வாயால் பேசாமல் மனத்தால் சிந்திக்காமல் இருக்கும் நிலை.  இந்த நிலை நாத நிலை.  வாக் எனப்படும் வெளிப்பாடு நிலைக்கு முற்பட்டது.  
அந்த யோகி கானல்பால், காமப்பால், வாமப்பால் என்ற முப்பால்களைஉண்கிறார் என்று கூறுகிறார் அகத்தியர்.  அதாவது, எல்லா விருப்புக்களையும் கடந்துவிடுகிறார்.  அவ்வாறு கடந்து அவர் பரம் எனப்படும் சிவசக்தி நிலைக்கு முற்பட்ட நிலையை அடைய முயல்கிறார்.  அவர் விரும்புவது அற்ப பலன்கள் அல்ல, சித்திகள் அல்ல, அவர் தேடுவது மெய்ஞ்ஞானம் மட்டுமே.  அவ்வாறு அவர் உகாரம் எனப்படும் சுழுமுனை நாடியில் உணர்வை ஏற்றுகிறார்.  இது அளிப்பதே உண்மையான போதை என்று முந்திய பாடலில் புலத்தியர் போதம் என்றால் கள்ளா கஞ்சாவா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் அகத்தியர்.  


No comments:

Post a Comment