Saturday 15 March 2014

80. The great knowledge of Advaita!

Verse 80
வெளியான புலத்தியனே மெய்யுள்ளோனே
மெய்யேது பொய்யேது இரண்டும் ஒன்று
அளியான அளிஏது அளியா தேது
ஆண் ஏது பெண் ஏது இரண்டும் ஒன்று
ஒளியான ஒளியேது சுடர்தான் ஏது
ஒன்றேது இரண்டேது இரண்டும் ஒன்று
பளியான பளிஏது பாழ்தான் ஏது
பாழ்நரகம் சொர்க்கம் என்ற இரண்டும் ஒன்றே

Translation:
Pulatthiya who is the supreme space!  The one who harbors the truth!
What is truth? What is a lie?  Both are the same
What is desire? What is lack of it?/which is destructible what is not?
What is a man? What is a woman?  Both are the same
The brilliance, the effulgence what is it? what is the flame?
What is one? What is two?  Both are the same
What is purity? what is void (supreme space/destruction)
The ignominious hell and the heaven, both are the same.

Commentary:
Agatthiyar is conferring the great knowledge of advaita to Pulatthiyar.  All the dualities seen in the world are only due to our faulty perception, a perception influenced by our karma and previous conditioning.   It is only the singularity, the advaita which is  truly existing.  Agatthiyar emphasizes this by stating that the common dualities such as gender, emotions and lack of them, the concept of heaven and hell are erroneous perceptions.  They are all really the same.   Man and woman are nothing but the soul that has no gender.  Heaven and hell are only perceptions.  What seems like hell today may appear as heaven tomorrow!  It is only our mind that makes them appear as the two poles.

Agatthiyar and Tirumular talk about muppaazh.  Paazh does not mean destruction.  It is a creative space.  Three such spaces are mayappaazh, bodhappaazh and upasaanthappaazh, the space of creation due to maya, the space of creation due to limited consciousness and the supreme space of creation the final place of merging.  

இப்பாடலில் அகத்தியர் மிக உயர்ந்த தத்துவமான அத்வைதத்தை புலத்தியருக்குப் புகட்டுகிறார்.  நாம் உலகில் காணும் எதிர் துருவங்களான இன்ப துன்பங்கள், ஆண் பெண் என்னும் பேதங்கள், சுவர்க்கம் நரகம் என்ற வித்தியாசங்கள் அனைத்தும் உண்மையில் எதிர் துருவங்கள் அல்ல.  அவை அனைத்தும் ஒன்றுதான் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  ஆண் என்பதும் பெண் என்பதும் ஆத்மாதான்.  அதற்கு ஒரு திணை கிடையாது.  இன்பம் துன்பம் என்று நாம் கருதுபவை நமது கர்மத்தையும் சம்ஸ்காரங்களையும் பொறுத்தவை.  சுவர்க்கம் நரகம் என்று நாம் கருதுபவை நாளை நமது நோக்கு மாறும்போது மாறிவிடலாம்!  அதனால் இவையனைத்திலும் காணும் இருமை உண்மையல்ல அவை அனைத்துமே ஒன்றுதான் என்று அகத்தியர் கூறுகிறார். 

அகத்தியரும் திருமூலரும் பாழ் என்பதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளனர்.  இங்கு பாழ் என்பது நாசம் என்பதற்கு நாசம் என்று பொருளல்ல.  முப்பாழ்கள் மாயப் பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ்.  மாயையால் ஏற்படுத்தப்படும் சிருஷ்டி இடம், போதம் அல்லது அளவுக்குட்பட்ட விழிப்புணர்வினால் ஏற்படுத்தப்படும் இடம், எல்லையற்ற பரவுணர்வு, அனைத்தும் லயமடையும் இடம் என்று அவை முறையே பொருள்படும்.  திருமூலரின் திருமந்திரத்தில் இவற்றிற்கான விளக்கங்களைக் காண்க. 

2 comments:

  1. Beautiful..
    In your post 61, also you have beautiful translated , how Agatthiyar had strongly opposed any form of Differentiation and Segregation.

    ReplyDelete
  2. yes, from this verse on Agatthiyar is leading to the explanation of namacivaya.

    ReplyDelete