Verse 119
பெரியோரைக்
கெடுத்தவன்
எடுத்தானே
இன்னொருவன் சொல்வதென்ன
இப்படியும்
இருப்பாரோ பெரியோர் ஐய்யா
அடுத்தாலும்
சுழிநாட்டம் நிலைக்க மாட்டான்
அவன்
புத்திக் கியன்றபடி நடக்கச் சொல்வான்
தொடுத்தாலும்
சுழி நாட்டம் நிலைக்க மாட்டான்
சொல்பம்
இது வேறுண்டு பெரிதே என்பான்
கெடுத்தானே
பெரியோர் தன் மதியைக் கூட
கேள்வி
கண்டால் அகலப்போம் இன்னங் கேளே
Translation:
The one who took
up. Another one, what to say!
Will great souls be
like this, Sir?
Even if he is interested in the whorl, he will not have sustained interest.
He will say, “Do as
you mind tells you"
Even if directed he
will not have lasting interest in sushumna
“This is
insignificant, there is something greater than this,” he will say
He will ruin the
minds of even great souls
When they
question. Go away from him, hear more.
Commentary:
Agatthiyar talks
about another type of charlatan here. This
person will start out with interest in the whorl, however he will not have mental focus to remain there longer, to sustain his interest longer. He will advise others to do as they please. He will suggest
whatever comes to his mind as sadhana.
One is reminded of modern age gurus (the numbers are plenty, one need
not mention their names here) who prescribe all kinds of bizarre practices that
have no basis or value as sadhana. Such
a person will ridicule kundalini yoga and say that there is something bigger
than this. He is so convincing that he
will even corrupt the minds of great souls who question him. It defies logic when we see so many learned
men and women falling for such gurus in these times. Agatthiyar tells
Pulatthiyar to go away from such people as they are very bad influence.
இப்பாடலில்
அகத்தியர் மற்றொரு பொய் குருவைப் பற்றிப் பேசுகிறார். இந்த குரு தான் ஒரு பெரிய ஞானி என்று
அறிவித்துக்கொள்வார். அவருக்கு கொஞ்சம் கூட
குண்டலினி யோகத்தில் விருப்பம் இருப்பதில்லை.
தன் மனம் போனபடி தானும் நடந்துகொள்வார் பிறரையும் நடக்கச் சொல்வார். தற்காலத்தில் இத்தகைய குருக்கள் மலிந்து
கிடப்பதைப் பார்க்கிறோம். பிறர் அவருக்கு
குண்டலினி யோகத்தைப் பரிந்துரைத்தாலும் அவருக்கு அதில் விருப்பம்
இருப்பதில்லை. “இது ஒன்றுமில்லை, அல்பம்,
இதைவிட பெரியது உள்ளது,” என்று அவர் கூறுவார்.
தமது மனதுக்குத் தோன்றியதை எல்லாம் சாதனை என்ற பெயரில் பிறரைப் பயிலச் சொல்வார். பெரியோர் இவர்களைக் கேள்வி கேட்டால் தனது
வாக்குத் திறத்தால் அவர்களது மனத்தைக் கூட மாற்றக் கூடிய திறம் படைத்தவர்கள் இந்த
குருக்கள். தற்காலத்தில் படித்த,
சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இத்தகைய குருக்களின் பின் போவதை நாம்
காண்கிறோம். இதுதான் அகத்தியர் கூறும்
கலியின் கொடுமை போலும்! இத்தகைய
மக்களைவிட்டு தூரப் போகும்படி அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
No comments:
Post a Comment