Wednesday 5 March 2014

61. Agatthiyar opposes any form of differentiation

Verse 61
தொடுத்திட்டான் அவனவளும் சாக என்று
சொன்ன விதம் ஏதென்றால் சொல்லுறேன் கேள்
அடுத்திட்ட தந்தை தாய் தமக்கை என்றும்
அசலார்கள் உத்தார்கள் வெவ்வேறென்றும்
படுத்திட்டால் சுகந்தருவாள் மடந்தை என்றும்
பல்லாலே இதழ் கோதிக் கொள்வதென்றும்
எடுத்திட்டால் இழை நூலின் இடையாள் என்றும்
இவள் சிவப்பு அவள் கறுப்பு என்று பாரே

Translation:
He pointed ‘him’ and ‘her’ towards death
Let me tell you how he has said so
Those close- as father, mother and sister
Those who are distant- as relatives, as different 
That a lady will give pleasure when copulated
“Brush the lips with the teeth and take her”
If taken, she is the lady with thread-like thin waist
She is fair and she is dark- see so

Commentary:
The above few verses show clearly that Agatthiyar is staunchly against any form of division, be it the faiths or people.  We are all one and the same, the Divine, the Supreme soul.  Agatthiyar vehemently dismisses any form of division, either in the faith or among people.  In this verse, he says that, instead of considering everyone as one, separation and individualization is brought about by assigning who is close and who is not, considering women as pleasure-giving objects, differentiating them as fair and dark.  All these are distinctions among people.  Agatthiyar opposes these segregations strongly. He says that all these will only direct people towards death.


மேற்கூறிய சில பாடல்களைப் பார்த்தால் அகத்தியர் எல்லாவிதமான பிரிவினைகளுக்கும் எதிரி என்பது புரிகிறது.  மதங்கள், நம்பிக்கைகள், சாத்திரங்கள் ஆகியவற்றில் பிரிவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மக்களிடையேயும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நமக்கு நெருங்கியவர்கள் தாய், தந்தை, தமக்கை என்றும், சற்று தூரத்தில் இருப்பவர்கள் உறவினர்கள் என்றும் ஒரு பெண்ணின் பிரயோஜனம் உடலின்பம் தருவது என்றும் இவள் சிவப்பானவள் அவள் கருப்பானவள் என்றும் மக்களிடையேதான் எத்தனை பிரிவினைகள், பாகுபாடுகள்!  இவையனைத்தும் மரணத்தை நோக்கியே ஆண்களையும் பெண்களையும் தொடுக்கின்றன என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment