Wednesday 12 March 2014

74. Agatthiyar praising Pulatthiyar's Vaada kaviyam

Verse 74
நாமப்பா அவர்பெருமை கூறவென்றால்
நாவடங்கா தாயிரமும் கொள்ளாதப்பா
தாமப்பா அவர் நூறு உற்றுப் பாரு
சகல சித்தும் தோணுமடா தவறொன்றில்லை
போமப்பா வெகுதூரம் வாதத்தாட்டம்
பொன்மேரு உலகோர்க்கு வெளியில் போட்டார்
சேமத்தில் வைத்ததெல்லாம் வெளியில் போட்டார்
சிவசிவா அவர் ஞானம் செய்கை தானே

Translation:
His glory, if we try to recount it
Even thousand tongues cannot contain it
See his hundred carefully
All the mystical accomplishments will appear, there are no mistakes
The dance of vādam (alchemy) will go very far,
He revealed the golden meru to the people of the world
He revealed all that was kept in safekeep
Siva sivā, it is only an action of wisdom.

Commentary:
Agatthiyar is probably talking about Konkanar’s works on vādam or alchemy.  There are two works that have been listed, the vāda kāviyam and sutram.  He says that these works will reveal all the esoterics of alchemy and they are free of any fault.  Agatthiyar says that Konkanar revealed all the wisdom that was kept a secret till date.



அகத்தியர் இப்பாடலில் கொங்கணரின் வாத காவியத்தையும் சூத்திரத்தையும்  பற்றிப் பேசுகிறார்.  இந்த நூல்களில் எவ்வித தவறும் இல்லை, இவற்றின் பெருமையை விளக்க ஆயிரம் நாக்குகள் போதாது என்று அகத்தியர் கூறுகிறார்.  வாதகாவியத்தில் உள்ள நூறு பாடல்கள் மிக முக்கியமானவை என்கிறார் அவர்.  இதுவரை ரகசியமாக வைத்திருந்தவற்றை கொங்கணர் வெளியிட்டுள்ளார் என்றும் மேரு மலையை ஒத்த பெருமையும் உயர்வையையும் சூட்சுமத்தையும் உடைய விஷயங்கள் அதில் கூறப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறுகிறார். 

No comments:

Post a Comment