Monday 3 March 2014

54. Experience offered by Siva yogam

Verse 54

காரப்பா இதுவல்லோ வாசி போதை
கருநெல்லிக் கனிவுண்ட மதத்தினாலே
சீரப்பா கானல்ப்பால் மதத்தினாலே
சிவசிவா வாமப்பால் திறத்தினாலே
ஊரப்பா மனம் உறைந்து உற்றதாலே
ஓஓஓ ஜடம் எல்லாம் லயத்தினாலே
பாரப்பா சிவயோக மகிமையாலே
பார்த்தோர்க்கு வெகு சுளுவு பரிந்து காணே

Translation:
See son! Isn’t this the intoxication of vāsi?
The inebriation due to consumption of the black gooseberry fruit.
Intoxication due to the consumption of the kānal pāal
Due to the expertise of the vāmappāl
The town reached due to the mind freezing 
O O O see, due to laya (merging) of all the matter
See it due to the glory of Sivayogam (union with the state of super consciousness)
It is very easy for those who see it, see it with interest.

Commentary:
In the previous verse Agatthiyar talked about siva bodham. It means knowledge about sivam or super consciousness.  Here he explains the Sivayogam or union with the super consciousness. The yogi performs vāsi yogam or raising the prapancha prana sakthi, consciousness and mind through the sushumna, consumes the divine nectar, reaches the nadha bindhu state and returns to his body consciousness.  This produces enchantment which is due to the consumption of the kaanal paal or the fruit of mirage or fire.  kaanal means fire as well as mirage.  There is no real fruit existing here.  The juice of the fruit is consumed due to the fire of kundalini.  It is also due to vaama paal or the kundalini yoga through breath regulation.  The mind is "frozen" or stilled during this process, so that it does not waver.  At the ajna the five elements and their modifications abide or merge.  The elements and their modifications do not possess consciousness.  Hence, Agatthiyar is calling them "jadam".  Yogam means joining together.  Siva yogam is joining together of all the insentient entities.  It is also the joining together of the state of limited consciousness and that of supreme consciousness.

Siddhas mention the "muppaal" or three types.  It means the three nadi or energy channels, ida, pingala and sushumna.  It also means kaama paal or desires, kaanal paal or the fruit of mirage or fire, and vaama paal or the fruit of pranayama.  In the previous verse Agatthiyar mentioned that a yogin eradicates all his mala.  The mala cause worldly desires.  Thus the yogin consumes the kaama paal by eradicating fruits of desires.  In this verse Agatthiyar talks about kaanal paal which is the fruit of raising consciousness to ajna and vaama paal or the fruit of pranayama.  

Siddhas give great importance to the mind.  The mind is a collection of thoughts, desires and emotions.  By stilling the mind a yogin goes beyond the dualities, distinctions and reaches a state of singularity.  The mind is closely associated with breath.  By stilling the breath the mind is stilled.  

முந்தைய பாடலில் அகத்தியர் சிவபோதத்தைப் பேசினார்.  அது சிவத்தைப் பற்றிய ஞானம், உணருணர்வைப் பற்றிய அறிவு.  இப்பாடலில் அகத்தியர் சிவயோகத்தைக் கூறுகிறார்.  ஒரு யோகி வாசி யோகம் செய்து பிராணன், மூச்சு, மனம், உணர்வு ஆகிய நான்கை, வாசியை, சுழுமுனை நாடியில் ஏற்றுகிறார்.  அதனால் அவர் நாத பிந்து நிலையை அடைந்து மீண்டும் உடலுக்குத் திரும்புகிறார். இந்த வழிமுறை கானல் பாலினால், வாமப் பாலினால் ஏற்படுகிறது என்கிறார் அகத்தியர்.  கானல் என்றால் இல்லாத ஒன்று இருப்பதாகக் காட்சியளிப்பது.  கானல் நீர் என்றால் உண்மையில் இல்லாத நீர் இருப்பதைப் போலத் தோன்றுவது.  வாமப் பால் என்றால் பிராணாயாமத்தின் பலன்.  லலாடத்திலிருந்து ஊறும் அமிர்தம் உண்மையில் ஒரு இடத்திலிருந்து தோன்றுவதல்ல, அது ஒரு அனுபவமே.  இவ்வாறு இது கானலாக உள்ளது.  இவ்வாறு இது இறங்குவது குண்டலினி அக்னியால் ஏற்படுகிறது.  இவ்வாறும் அது காலனின் பழமாக இருக்கிறது.  இந்த வழிமுறை பிராணாயாமத்தால் நடைபெறுவதால் அது வாமப்பால் ஆகிறது.  இந்த பயிற்சியில் மனம் ஸ்திரப்படுத்தப்படுகிறது. ஆக்ஞையில் ஐம்பூதங்களும் அவற்றின் மருவுகளும் லயமடைகின்றன. அந்த தத்துவங்களுக்கு உணர்வு இல்லை அதனால் அவற்றை அகத்தியர் ஜடம் என்கிறார்.  

யோகம் என்றால் சேருவது என்று பொருள்.  இங்கு ஐம்பூதங்கள் லயமடைகின்றன.  அளவுக்குட்பட்ட ஜீவநிலை பரத்தில் லயமடைகிறது.  இவ்வாறு இது சிவயோகமாகிறது.

 சித்தர்கள் முப்பால் என்பதைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றனர்.  இது மூன்றுவித நாடிகளான இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்றையும் காமப்பால், கானல்பால், வாமப்பால் என்ற மூன்றையும் குறிக்கும். வாசி யோகத்தால் யோகி அமிர்தத்தைப் பருகி சொக்குகிறார்.  இது உலக அனுபவங்களில் அவருக்குள்ள விருப்பத்தை இறைவனைக் காணவேண்டும் என்ற விருப்பமாக மாற்றுகிறது.  அகத்தியர் இதை காமப்பால் கானல் பாலாக மாறுகிறது என்கிறார்.  வாமப்பால் என்பது குண்டலினி யோக அனுபவங்கள்.  அது பிராணாயாமத்தில் இவருக்குள்ள திறமையைப் பொறுத்து அனுபவிக்கப்படுகிறது.  அப்போது உலகில் உள்ள ஜடப்பொருட்கள் அனைத்தும் லயமடைந்து ஒன்றாய் இருப்பது தென்படுகிறது.  இதுவே சிவயோகம் தரும் அனுபவமாகும். சிவ யோகம் என்பது சிவனுடன் சேர்த்தல், அதாவது பரவுணர்வு நிலையை அடைதல் என்று பொருள்படும்.  இதை அனுபவிக்கும் யோகி பிரகிருதியின் லயத்தைப் பார்க்கிறார்.  அதுவே பலவாகத் தென்படும் உலகின் உண்மை நிலை. 

சித்தர்கள் மனத்துக்குப் பெருமதிப்பளிக்கின்றனர்.  மனம் என்பது குரங்கைப் போல தாவுவது.  அதை நிலைநிறுத்தினால் ஒருமை நிலையை அடைகிறது.

No comments:

Post a Comment