Sunday 9 March 2014

70. Agatthiyar the one within, அகத்தியனே அகத்துள்ளோனே!

Verse 70
கூறினோம் என்றுரைத்தீர் குருவே ஐயா
கும்பமுனிக் கவதரித்த குழந்தையோ நான்
தேற்றினோம் என்றுரைத்தால் என்செய்வேன் நான்
சிவசிவா என்குருவே செப்பொண்ணாதோ
வீற்றியோம் அவர் ஞானம் எந்தக் கூறோ
வெள்ளி பொன்னோ இரண்டல்லால் வேறும் உண்டோ
போற்றியோம் என்குருவே அகத்துள்ளோரே
புலத்தியர்க்கு இவ்வார்த்தைப் பேசுவீரே

Translation:
You said you told us
Am I the child born for Kumbamuni?
You told me that you pacified, what will I do?
Siva sivā my guru, is it not to be mentioned?
His wisdom- what is its type
Is it silver or gold or is there something other than these two?
We praise you, My Guru!  The one who is within the heart
You will talk about this to Pulatthiyar.

Commentary:
This verse is Pulatthiyar’s part of the conversation.  He asks Agatthiyar whether he is Agatthiyar’s baby for Agatthiyar to pacify him.  He wonders about the nature of Konkanar’s wisdom.  He asks whether it is gold or silver or anything other than these two.  Silver and gold represent evolved states. 
Silver represents the soma or the divine nectar descending from the sahasrara.  Gold represents the yogin’s body, every hair follicle, turning gold, which a mystical accomplishment when he attains siddhi.  Siva, the primal yogi is called “ponnār meniyane” the one with a golden body.  This is one of the deha that the yogi acquires, similar to mantra deha etc.  Silver also represents the semen the male reproductive fluid and gold the female reproductive fluid.  These two are the cause for a life form to emerge into this world.  Controlling these two means controlling the cycle of births and deaths
Thirumular talks about this when he describes the paryanga yoga as preventing the silver from melting and flowing towards the gold.

Pulatthiyar addresses Agatthiyar as the one within the heart.  The guru can be external or internal in nature.  The disciple holds the guru within his heart and this grants him wisdom.

இப்பாடல் புலத்தியரின் உரையாடலாக அமைந்துள்ளது.  அகத்தியர் அவரைத் “தேற்றினேன்” என்று கூறியதனால் தான் அவரது குழந்தையா என்று புலத்தியர் கேட்கிறார்.  கொங்கணரின் ஞானத்தைப் பற்றிக் கேட்கும்போது அது தங்கமா வெள்ளியா இவை இரண்டும் இல்லாத மற்றொன்றா என்கிறார் புலத்தியர்.  வெள்ளி என்பது சோமன் அல்லது சந்திரனைக் குறிக்கும்.  இது சஹாஸ்ராரத்திலிருந்து கீழே இறங்கும் சோமப்பாலைப் பருகுவதைக் கூறுகிறது.  தங்கம் என்பது ஓர் யோகி பொன்மேனியைப் பெறுவதைக் குறிக்கிறது.  சித்தி பெற்ற ஒரு யோகியின் ஒவ்வொரு மயிர்க்காலும் பொன்னிறமாகக் காட்சியளிக்கும்.  ஆதி யோகியான சிவன் “பொன்னார் மேனியனே” (தங்கம் போன்ற மேனியை உடையவனே) என்று அழைக்கப்படுகிறார். மந்திரமேனி போன்ற மேனிகளைப் போல இதுவும் யோகத்தின் ஒரு நிலை.  உச்ச நிலை.  புலத்தியர் அகத்தியரிடம் கொங்கணர் பெற்றது இவ்விரண்டு சித்திகளுமா அல்லது வேறொன்றா என்று வினவுகிறார்.  இதையே திருமூலர் வெள்ளி உருகி பொன் வழி ஓடாமல் தடுப்பது என்று பர்யங்க யோகத்தை விளக்குகிறார்.

புலத்தியர் அகத்தியரை அகத்துள் உள்ளோனே என்கிறார். குரு என்பவர் வெளியில் இருப்பவராகவோ உள்ளத்தில் இருக்கும் அந்தர்யாமி குருவாகவோ இருக்கலாம்.  ஒரு சீடன் குருவைத் தனது மனத்துள் இருத்தும்போது அவர் அவனுள்ளிருந்து ஞானத்தை அளிக்கிறார்.

4 comments:

  1. Prayer song of our Ashram...Sri Agathiyar and Sri Murugan Gnana Peedam...kallar....

    Arul Jnana Jyothiye...Aagathin Jyothi.

    Thani Perum Kadavule....Agatheesar Aavaar...

    Tavayogi Thangarasan Adigal always Refers to Agathiyan as......Aagthin Ulle Eesan.....WHICH HE IS...

    ReplyDelete
  2. Our Ashram's name.....Sri Agathiyar Sri Thava Murugan Gnana Peedam....

    ReplyDelete
  3. Tamil translation of the worship song:
    அருள் ஞான ஜோதியே அகத்தின் ஜோதியே
    தனிப்பெரும் கடவுளே அகத்தீசர் ஆவார்.

    கல்லார் ஸ்ரீ அகத்தியர் தவ முருகன் ஞான பீடத்தில் உள்ள தவயோகி தங்கராசன் அடிகள் அகத்தியரை அகத்தில் உள்ள ஈசன் என்று குறிப்பிடுகிறார்

    ReplyDelete