Thursday, 27 March 2014

106. Path of the whorl

Verse 106
சுழி வழி
பாரப்பா இவருடைய பெருமை கேளு
பதியான ஆறுதலம் வெளியாய்க் காட்டும்
தேரப்பா சிங்காரம் போலே அல்லோ
தெருக்கூட்டி மணல் பரப்பி வீசி ஆடும்
ஊரப்பா இவருடைய ஒளிதான் என்ன
உத்தமனே ஒரு தீபம் ஏக தீபம்
ஆரப்பா அறிவார்கள் சுழியில் ஊணி
அழுத்தினால் சுழிதிறக்கும் அமிர்தம் உண்ணே

Translation:
Way of the whorl
See son, hear about their glory
It will reveal the locus the six sites
Become an expert, it is like love
It will sweep the street, spread the sand and dance
Locus, what brilliance!
The supreme one, one lamp, the only lamp
Who will know it, pressing within the whorl
If you push down, the whorl will open, consume the nectar.

Commentary:
Agatthiyar is continuing about the bindu cakra.   He also says that the lamp seen there is the one and only lamp.  The whorl or the cakra if pressed down will open and make the divine nectar flow.  The bindu cakra is connected to the thalu cakra which makes the divine nectar flow down.  Agatthiyar is advising Pulatthiyar to consume this nectar.
  
பிந்து சக்கரம் சக்கரம் ஆறு ஆதாரங்களையும் காட்டும் என்று அகத்தியர் மீண்டும் இப்பாடலில் கூறுகிறார்.  அங்கு காணும் தீபம் ஒரே தீபம், ஆத்மாவின் ஒளி என்கிறார் அவர்.  இந்த சக்கரத்தை அழுத்தினால் அது திறந்து மேலிருந்து மேலிருந்து அமிர்தம் ஒழுகும் என்றும் கூறுகிறார் அவர். இந்த பிந்து சக்கரம் தாலு சக்கரம் என்னும் மற்றொரு சக்கரத்துடன் தொடர்புடையது.  இந்த தாலு சக்கரத்திலிருந்து அமிர்த தாரை கீழே வழிகிறது.  இதையே உண்ணுமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.


No comments:

Post a Comment