Saturday 1 March 2014

51. Lingodbhavam-2

Verse 51
செய்யென்றால் புலத்தியனே செப்பக் கேளு
திருமாலும் அயன்தேடிக்  காணா நேர்மை
ஐ என்ற அடிமுடியும் அறிய வேண்டி
அந்த நாள் தான் இருந்து தவங்கள் செய்து
மெய்யென்ற அடி முடியும் கண்டிடாமல்
மெய்மறந்து அவரவர்தான் பத்தியில் சென்றார்
வை என்ற போதை என்ன மௌன போதை
மகத்தானக் கால் என்ன வாசி தானே

Translation:
Pulatthiya! Hear me explain the procedure
That which Brahma and Vishnu could not see
Wishing to know the top and bottom of ‘ai’
They performed several austerities
Not seeing the top and bottom of the body/the truth
They went in their own way forgetting themselves
The knowledge of ‘vai’ is the knowledge of silence
The glorious ‘leg’ (air) is only vāsi, isn’t it!

Commentary:
Agatthiyar describes the events connected with lingodbhavam.  When Lord Siva appeared as the column of fire, Brahma and Vishnu tried to find his top and bottom.  Agatthiyar calls this as the ‘mei’ which means both truth and body.  The ultimate state or maha karana sareera is said to be that of a flame.  Siva appearing as column of fire signifies this.  This is the state beyond manifestation.  Vishnu and Brahma represent manifestation.  Vishnu is under the influence of four mala while Brahma is under the influence of the five mala, anava, karma, maya, mayeya and thirodhayi.  It is not possible to perceive the ultimate while being under the influence of mala.  Hence both the divinities went their own way, not being able to perceive the Lord.  ‘patthi’ means way as well as bhakti or devotion.  Agatthiyar exclaims that the way to ‘know’ Siva, the knowledge about the Supreme, only through silence.  The mighty air that confers this knowledge is vāsi yogam.

This verse has the letters 'ai' and 'vai'.  Nandikesakashika, a book that describes the philosophy behind the Maheswara Sutras, the sounds that emanated from Siva's drum when he performed his Tandavam says that 'ai' indicates that everything is contained within Siva. 'ai' is made up of aa+ee.  aa indicates Adisakti and ee represents the Divine's desire to manifest.  'vai' contains v+ ai. v represents vanni or fire. vai indicates that the Absolute appeared as vanni or fire.  Hence, the puranic episode of Siva appearing as a column of fire before Brahma and Vishnu.

லிங்கோத்பவத்தை முந்தைய பாடலில் குறிப்பிட்ட அகத்தியர் இதை இங்கே மேலும் விளக்குகிறார்.  தீப்பிழம்பாகத் தோன்றிய சிவபெருமானின் தலையையும் காலையும் அறிய விரும்பிய பிரம்மாவும் விஷ்ணுவும் எவ்வளவு முயன்றும் அந்த உண்மையைக் காணமுடியவில்லை.  மெய் என்பது உண்மை, உடல் என்று இரு பொருட்களைக் கொண்டது.  ‘பத்தி’ என்பது வழி மற்றும் பக்தி என்று பொருள்படும்.  இந்த உண்மையை அறியக்கூடிய ஒரே வழி மௌனம்தான் அதைத் தருவது மூச்சுப் பயிற்சியான வாசியோகம்தான்.

இப்பாடலில் அகத்தியர் இறைவனைக் குறிக்க ஐ மற்றும் வை என்ற எழுத்துக்களைக் கூறுகிறார்.  சிவபெருமான் தாண்டவமாடியபோது அவரது உடுக்கையிலிருந்து நாதம் 14 சூத்திரங்களாக, மகேச்வர சூத்திரங்களாக வெளிப்பட்டன.  அதை விளக்கும் நந்திகேச காசிகா ஐ என்னும் எழுத்து இறைவன் ஆதிசக்தியைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது என்கிறது.  ஐ என்னும் எழுத்து ஆ+ஈ என்று பிறந்து சங்கல்ப சக்தியைக் கொண்ட பரம்பொருள் என்று கூறுகிறது.  அதேபோல் வை என்னும் எழுத்து வ்+ஐ என்று பிரிந்து வன்னி அல்லது அக்னி வடிவில் அந்த ஆதிசக்தியைக் கொண்ட பரம்பொருள் தோன்றியது என்று குறிப்பிடுகிறது.  இதைத் தான் லிங்கபுராணம் சிவபெருமான் நெருப்புத் தம்பமாகத் தோன்றினார் என்று கூறுகிறது.

No comments:

Post a Comment