Wednesday, 19 March 2014

91. Manipurakam, according to Agatthiyar

Verse 91
தானான மணிபூரம் பிறையாம் கோணம்
தார்க்கடலில் பள்ளி கொள்ளும் மாயோன் ஆட்டம்
பானான பிறைநடுவே அகார பீடம்
பாங்கான லக்ஷிமிப்பெண் பக்ஷ மாக
கோனாகக் கொலுவிருப்பார் அவர்க்குப் பூசை
கொங்கணர்தான் கடைக் காண்டம் கூறிப் போட்டார்
மானான பூசைவிதி நன்றாய்ச் சொன்னார்
மகத்தான வாசிக்கு நிலை சொன்னாரே

Translation:
The self, the manipuram has the crescent as its angle.
The dance of the Mayōn who rests in the beautiful ocean,
In the middle of the partial moon is the akāra peetam
With the beautiful woman Lakshmi by his side
He will remain there as a king, worship for him
Konkanar explained it in his last kāndam
He described the glorious puja vidhi well
He explained the state for the magnificient vāsi.

Commentary:
This verse explains the manipuraka cakra.  It is depicted as a crescent.  This cakra confers clarity, self-confidence, bliss, self assurance, knowledge, wisdom and the ability to make correct decisions.   This cakra attracts the prana from the cosmos.
This manipuraka cakra is depicted as a lotus with ten petals that represent the ten pranas.  They are prana (in the heart), apana (in the anus), samana (solar plexus), udana (throat cakra), vyana (sacral cakra, moves throughout the body), nana (for burping), kurma (for opening eyes), krikara (for hunger and thirst), devadatta (for yawning) and dhananjaya (for hiccups).  The divinity of this cakra is Vishnu along with his consort Lakshmi.  Goddess Lakshmi represents spiritual prosperity. 

Agatthiyar says that this cakra is the seat of ‘akara’.  One wonders if there is a scribal error in this verse and it means makāra instead akāra as a latter verse mentions another cakra as the locus of akāra.  Agatthiyar says that Konkanar has described the rules for worship at this locus and also the state for the magnificient vasi yogam in his kadaikkāndam.
                                      
மூலாதாரம் ச்வாதிஷ்டானத்தை அடுத்து இப்பாடலில் அகத்தியர் மணிபூரக சக்கரத்தை விளக்குகிறார்.  இந்த சக்கரம் பிறைவடிவில் உள்ளது.  அது மனத்தெளிவு, தைரியம், ஆனந்தம், புத்தி, ஞானம், சரியான முடிவுகளை எடுத்தல் போன்ற பல சக்திகளை அளிக்கிறது.  இந்த சக்கரம் பிரபஞ்சத்திலிருந்து பிராணனைக் கவர்ந்திழுக்கிறது.  இந்த சக்கரம் பத்து இதழ்களைக் கொண்ட தாமரை மலராக வரையப் படுகிறது.  இந்த பத்து இதழ்கள் பத்து வித பிராணனைக் குறிக்கும்.  அவை பிராணன் (இதயம்), அபானன் (குதம்), சமானன் (நாபி), உதானன் (தொண்டை), வியானன் (உடல் முழுவதும்), நாகன் (ஏப்பம்), கூர்மன் (கண்ணைத் திறக்க), க்ரிகரன் (பசி தாகம்), தேவதத்தன் (கொட்டாவி) தனஞ்சயன் (விக்கல்).
இந்த சக்கரத்துக்கு அதிபதி விஷ்ணுவும் அவரது துணைவியுமான லக்ஷ்மியும்.  லக்ஷ்மி தேவி ஆன்மீக செல்வத்தை அளிக்கிறாள்.


அகத்தியர் இந்த சக்கரம் அகார பீடம் என்கிறார்.  இது படிவேடுக்கும்போது ஏற்பட்ட தவறோ என்று தோன்றுகிறது.  ஏனெனில் பின்னே உள்ள பாடல் ஒன்றில் அவர் மற்றொரு சக்கரத்தை ஆகாரத்தின் பீடம் என்கிறார்.  நகாரத்தை அடுத்து வருவது மகாரமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.  இந்த சக்கரத்தை எவ்வாறு வழிபடுவது என்று கொங்கணர் தனது கடைக்காண்டத்தில் கூறியுள்ளதாக அகத்தியர் சொல்கிறார். அவர் பெருமை பெற்ற வாசிக்கான நிலையையும் கூறியுள்ளதாக அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment