Thursday 6 March 2014

64. Vadam- alchemy for the worldly-1

Verse 64

கேளப்பா வாதம் என்றால் அவன் நூல் கேட்கும்
கெடியாக  உண்டுடுத்தி மாளப்பண்ணும்
வாளப்பா மங்கையர் மேல் விருப்பங் காட்டும்
மாதையர்க்குப் பணிதன்மகள் சேரப்பண்ணும்
வேளப்பா எறிந்தோனை நினைக்கொட்டாது
மெய்ஞ்ஞானம் வந்தாலும் கசிந்து காட்டும்
பாளப்பா பண்ணுமடா வாதப் பாம்பு
பரஞானம் வந்தாலும் தள்ளு மகனே

Translation:                                   
Listen son, vādam according to his book
Is dressing up and eating well, it will lead one to death
It will show the sword- desire on women
It will make submit his daughter to serve such women/people
It will not allow one to think about the king who burnt (sins)
Even when wisdom occurs it will only reveal it as a trickle
The snake, the vāda, will spoil everything
Even when parajnanam occurs through it, push it away son!

Commentary:
Vādam generally refers to alchemy or rasavādam.  While ordinary alchemy is transforming base metals into superior ones, vada according to Siddhas is transforming the material body into siddha deha.  Vada siddhi also refers to breath control.  While both alchemy and breath control can lead one to the ultimate state, the super conscious state, it grants various benefits en route.  This includes wealth, a luxurious life, company of women, several other worldly benefits including the ashta ma siddhi or eight mystical accomplishments.  These accomplishments will make one steer away from the path of the truth.  They will distract a seeker from his goal.  Hence, Aatthiyar calls it a snake.  Even though this method will ultimately lead to the truth it is fraught with danger.  Hence, Agatthiyar advises a seeker to avoid it at all cost.   


வாதம் என்பது பொதுவாக ரசவாதத்தைக் குறிக்கும். சித்தர்கள் வாதத்தை வகார வித்தை என்று கூறுவார்.  ‘உலக வழக்கில் வாதம் என்பது தாழ்ந்த உலோகங்களை தங்கம் போன்ற உயர்ந்தவையாக மாற்றுவது.  ஆனால் சித்தர்கள் வழக்கில் வாதம் என்பது பருப்பொருளால் ஆனா மானுட தேகத்தை சித்த தேகமாக மாற்றுவது.  வாத சித்தி என்பது பிராணாயாமத்தையும் குறிக்கும்.  இரசவாதமும் பிராணாயாமமும் முடிவில் பரவுணர்வை ஈந்தாலும் வழியில் பல கவனச்சிதரல்களை ஏற்படுத்தும்.  செல்வம், பெண்கள் உறவு, புகழ் போன்ற வற்றை இவை தத்து ஒரு யோகியை அவரது பாதையிலிருந்து வழி தடுமாறச் செய்பவை.  அதனால் இந்த முறைகளால் பயன் ஏற்பட்டாலும் அவற்றை விலக்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  அவற்றை பாம்பு என்கிறார். 

No comments:

Post a Comment