Verse
81
ஒன்றாகி
இரண்டாகி மூன்றும் ஆகி
ஒரு
நாலும் ஓரைந்தும் ஓராறாகி
என்றாகி(ஏழாகி)
எட்டாகி நவமும் ஆகி
இன்ப
நவம் தசம் ஆகிப் பன்னொன்றாகிப்
பண்டாகிப்
பன்னிரண்டாய் பன்மூன்றாகிப்
பதிநாலாய்
பதினைந்தாய் பதினாறாகி
அண்டாகி
ஐம்பத்தோர் எழுத்து மாகி
அண்டசரா
சரம் ஆகி ஐஞ்சுள்ளாச்சே
Translation:
Becoming
one, two, and three
A
four, five and six
Becoming
seven, eight, nine
The
pleasurable nine becoming ten and eleven
Becoming
the ancient twelve and thirteen
As
fourteen fifteen and sixteen
As
the universe, as the fifty one letters
Becoming
all the universes, they became so within the five.
Commentary:
In
this verse Agatthiyar talks about creation of letters. The fifty one letters mentioned here form the
Sanskrit alphabet. The order of creation
is said to be Siva, Sakti, nada and bindu.
Nada is the primordial sound and bindu is the primordial form. From nada emerged the letters. According to tradition, the letters of the
Sanskrit alphabet emerged from the sound of Siva’s drum that he sounded during
his Tandava or Divine dance. They are
presented as 14 principle sutras called Siva Sutra or Mahesvara sutra. Nandikesvara interpreted them in the context
of creation while Patanjali interpreted them as ashtadyayi, the basis of
Sanskrit grammar.
Please
refer to the posting in scribd.com for a detailed explanation of the same given
under the title nandikesvara kasika translation. A brief summary is given below:
a-brahman,
i- chitkala or consciousness, by their association u- all pervasiveness.,
ru
lru- the divine is indicated by these letter to show maya is only a mental
tendency
e
o- union between maya and Lord. He is the witness of all beings.
Ai,
au c- ai is the primal energy, au- the supreme being who is consciousness and
variegated by maya.
The
long forms represent the manifested form or Sakti. Joining of the first letter
a and the last letter ha produced aham- the transition of supreme being to
supreme siva (paramasiva), aha-visarga is the manifested world.
Ha,
ya, va, ra- space, air, water, fire
La-
is earth, the substratum of everything
Jna,
ma, nga, Na, na- sound, tourch, form, taste, smell
Jha,
bha- speech and hands. gha, Dha, dha- feet, anus and generative organs (five
sense organs)
Kha,
pha, cha, Ta, tha, ca, ta, tha- five prana, mind, intellect and ahamkara.
Ka,pa-
purusha and prakriti.
Śa,
sha, sa,- sattva, rajas and tamas
The
sutras end with the saying, “The lord Sambhu disappeared stating , transcending
the principles, I am the Supreme, the witness, embodiment of grace,the Supreme
Soul, represented by the term hal).
Agatthiyar
says that all these letters abide within the five letters namacivaya.
Another post will point out how the five letters of namacivaya corresponds to all the above mentioned principles.
Another post will point out how the five letters of namacivaya corresponds to all the above mentioned principles.
இப்பாடலில்
அகத்தியர் எவ்வாறு எழுத்துக்களும் (அதனைத் தொடர்ந்து வார்த்தைகள், வாக்கியங்கள்
ஆகியவை) தோன்றின என்றும் அவையனைத்தும் ஐந்தெழுத்தான நமசிவாயத்தில் அடங்குகின்றன
என்று கூறுகிறார். ஒன்றிலிருந்து பதினாறு எழுத்துக்கள் என்பவை சம்ஸ்கிருத
உயிரெழுத்துக்களையும் ஐம்பத்தொரு எழுத்துக்கள் என்பவை அவற்றைத் தொடர்ந்த மெய்
எழுத்துக்களையும் குறிக்கின்றன. இந்த
எழுத்துக்கள் சிவபெருமான் தனது தாண்டவத்தை ஆடும்போது தனது கையில் கொண்டிருந்த
உடுக்கையை அடித்தபோது தோன்றின என்று கூறப்படுகின்றன. அவை பதினான்கு சூத்திரங்களைக் கொண்ட மகேச்வர
சூத்திரம் அல்லது சிவசூத்திரம் எனப்படுகின்றன.
இந்த சூத்திரங்களை பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருத இலக்கணமாகவும் நந்திகேஸ்வரர்
எனப்படும் ஆதி சித்தர் உலக உற்பத்தியை விளக்குவதாகவும் பொருள்கூறியுள்ளனர்.
இந்த
சூத்திரங்களின் ஆங்கில விளக்கம் நந்திகேச்வர காசிகா என்ற பெயரில் scribd.com என்னும்
தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதன்
சுருக்கத்தைத் தமிழில் தருவது கடினம் ஏனெனின் தமிழில் க வர்க்கம் ச வர்க்கம் என்று
எழுத்துக்கள் இல்லை. இதன் தமிழ்
விளக்கத்தை வேண்டுவோர் இந்த பிளாக்கில் கூறினால் அதனைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.
வணக்கம்!
ReplyDeleteதங்களின் இச்சேவையானது மகத்தானது. எனது நன்றிகள் பல தமக்கு உரித்தாகுக.
நானும் எனது நண்பர்கள் சிலரும் சில காலமாக இந்தசூத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 51 மெய்யெழுத்துக்களை அறிய முயன்று கொண்டுள்ளோம். தாங்கள் இந்த சூத்திரத்துக்கான தமிழ் விளக்கத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் மிகுந்த உதவியாக இருக்கும்.
நன்றி!
தங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. இந்த ஐம்பத்தொரு எழுத்துக்கள் சம்ஸ்கிருத ஐம்பத்தொரு எழுத்துக்களைக் குறிக்கும். இதைப் பற்றிய ஒரு விளக்கத்தை ஆங்கிலத்தில் நந்திகேசகாஸிகா என்று பெயரில் scribd.com என்ற தளத்தில் வெளியிட்டுள்ளேன். முனைவர் கணபதி அவர்கள் நமசிவாய என்ற ஐந்தெழுத்துகளுக்கு அவற்றிற்கான எண்களைக் கூட்டினால் ஐம்பத்தொன்று வருகிறது என்று கூறுகிறார். அகத்தியர் தமிழின் தந்தை ஆனால் சித்தர்கள் தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்றிருந்தனர். சம்ஸ்கிருத எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் ஆறு சக்கரங்களுடனும் தொடர்புடையவை. அவற்றை சமஸ்கிருதத்தில் மாத்ருகா மாலா என்பர். அந்த எழுத்துக்கள் பீஜ வடிவில் கங், சங் என்பது போல சக்கரத்தின் இதழ்களில் குறிப்பிடப்படுகின்றன. அவை முறையே ஐம்புலன்கள், ஐம்பூதங்கள், தன்மாத்திரைகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என்று நீங்கள் நந்திகேச காசிகாவில் காணலாம். அந்த பதிப்பை படித்துவிட்டு கேள்விகள் எழுந்தால் தொடர்பு கொள்ளவும், தெரிந்த அளவுக்கு பதிலளிக்கிறேன். ஓம் அகத்தீசாய நம:
ReplyDelete