Verse
109
அக்ஷரங்கோடி
மாத்தில் சமையப் பதத்தரைத் தாக்கல்
கொடிபோட்டேன்
நாகமணிக் கொடிதான் அய்யா
குருவான
உகாரமதைக் கம்பமாக்கி
அடி
போட்டேன் அகாரமதை வசமுமாக்கி
அசங்காமல்
ஓலமிட்டு ஓம்காரத்தை
தடிபோட்டேன்
அஞ்செழுத்தும் காவலாக
சமய
மதம் கொண்டோர்கள் தலையைத் தாக்க
கொடிபோட்டேன்
இந்நூல் கண்ட யோகி
கொஞ்சுவார்
இஞ்சி தின்ன குரங்கு போலே
Translation:
Attaching those who
claim to be religious
I
flew the flag, the flag of the snake jewel, Sir
With
the Guru, the ukāra as the pole
I
placed the base, the akāra, attaining it
Reciting
the omkara remaining immobile, unshaking,
I
place the stick, the five letters, as the guard
To
attack the heads of those maddened by religion
I
flew the flag. A yogi who saw this book
Will
prattle sweetly, like the monkey that ate ginger.
Commentary:
This
verse is a beautiful imagery of the kundalini yoga. The fire of kundalini that flows between the
muladhara and the sahasrara is the flag, the crown jewel. It is atop the pole, the ukāra, the letter of
the guru. The base of this pole is the
akāra. This is an interesting imagery. Among the three letters of the pranava, a, u
and ma, the akāra represents the quiescent aspect of the Divine while the ukara
represents the active part of the Divine.
Agatthiyar refers to this when he says by remainin silent and reciting
the omkara he is bringing into action both the akara and ukara which emerges
from the akara. With these as the base
and the pole, the kundalini Shakti flies gloriously high. Another interesting feature that Agatthiyar
mentions here is that he has placed the five letters namacivaya as the guard to
this primal force, as a stick. He says
that he wishes to hit the heads of those who are maddened by religious
fanatism. Agatthiyar says that yogis who
know about this work, meijnanam, will plead baring their teeth, jumping up and
down like a monkey that ate ginger. This
is a common Tamil expression which means ‘someone very excited’.
இந்தப்
பாடலில் குண்டலினியைப் பற்றிய ஒரு அழகான ஓவியத்தைத் தீட்டுகிறார். நாகமணிக் கோடி என்று அகத்தியர் குண்டலினியைக் குறிக்கிறார். அது மூலாதாரத்திலிருந்து சஹாஸ்ராரம் வரை பறக்கும்
கொடியாகும். அந்தக் கொடிக்கு கம்பம்
உகாரம் அதன் அடி அகாரம் என்கிறார் அகத்தியர்.
இது மிக அழகான உவமை. ஏனெனில் பிரணவத்தின் மூன்று எழுத்துக்களான அ உ ம
என்பதில் அ என்பது செயலற்ற நிலையில் உள்ள இறைவனையும் உ என்பது செயல்பாடுடைய
இறையையும் குறிக்கும். உகாரம் அகாரத்திலிருந்து
தோன்றியது. இந்தக் கம்பத்திற்குக் காவலாக தான் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஒரு
கம்பாக இட்டதாகவும் அது சமயம் என்னும் பைத்தியம் பிடித்தவர்களின் தலையில் அடிப்பதற்கு
என்றும் அகத்தியர் கூறுகிறார். இந்த
விவரங்களைத் தந்தபிறகு அகத்தியர் மெய்ஞ்ஞானம் என்னும் இந்த நூலைக்
குறித்துப்பேசுகிறார். இந்த நூலைப் பற்றி
அறிந்த யோகிகள் அதில் கொடுக்கப்பட்ட விஷயங்களை அறிந்தவர்கள் இஞ்சி தின்ன குரங்கைப்
போல கொஞ்சுவர் என்று அகத்தியர் கூறுகிறார்.
Explained very well..Thanks..
ReplyDeleteOm Agatheesaaya namaha
ReplyDelete