Saturday 8 March 2014

67. Siddha lineage- kailaya varga and mula varga

Verse 67
தாமப்பா கைலாய வர்க்கத்தோர்க்கு
சதுர்முகன் தான் அவர்களுக்கு....
ஓமப்பா மூலவர்கச் செய்கை கேளு
ஓங்காரம் அதைப்பூரித்தா காசத் தூணி
சோமப்பா உகாரமதை  மேருக்கேத்தி
சுடர்மணியை சார்ந்ததினால் திருமூலர்தான்
காமப்பால் காணப்பால் இரண்டும் கொண்டு
கருத்திருந்தார் திருமூலர் மூணு மூணே

Translation:
For those belonging to the kailaya varga
The four-faced one is important for them
Listen to the action of those who belong to the mula varga
They attain the omkara siddhi and plant it firmly in the sky
The moon, son. Polishing the ukāra
If remained associated with the effulgent flame/jewel. Because of this Tirumular
Had in his mind the kāmappāl and kānarpāl
Tirumular remained three and three.

Commentary:
From this verse onwards Agatthiyar is describing different Siddha lineages.  Generally Siddhas are classified in various way.  One such method is to ascribe a specific lineage to them.  The three lineages or varga of Siddhas are mula varga, bala varga and kailaya varge.  Lord Siva is considered the primal guru for the kailaya varga.  Some opine that Agatthiyar is the adi guru of the kailaya varga (Dr.T.N.Ganapathy The Philosophy of the Tamil Siddha- pg 22, ICPR 1993).  Tirumular is considered the primal guru of the mula varga while Lord Muruga is the guru of the bala varga.  Dr. Ganapathy also mentions that Mr Balaramaiah opines that the mula varga should be actually called Nandivarga. However, Agatthiyar gives a different information about these lineages here.  He says that the four faced one or Brahma is important for the mula varga.  He describes the action of the mula varga without saying specifically that Tirumular is its guru. He mentions the kama paal and kaanal paal.  Kama paal is the desire due to limitations, kaanal paal is the descent of divine nectar and the experiences of chakras that are not really present and hence, called a mirage.


இப்பாடலிலும் அடுத்த பாடலிலும் அகத்தியர் சித்த வர்க்கங்களைப் பற்றி விளக்குகிறார்.  சித்தர்கள் பல விதங்களில்  வகைப்படுத்தப்படுகின்றனர்.  அவற்றில் ஒன்று அவர்கள் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவது.  சித்தர்கள் பொதுவாக பால வர்க்கம், மூல வர்க்கம், கைலாய வர்க்கம் ஆகிய மூன்று வர்க்கங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.  பால வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் முருகனைத் தமது குருவாகக் கருதுகின்றனர்.  மூல வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதி குரு திருமூலர்.  கைலாய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சிவனைத் தமது குருவாகக் கொண்டுள்ளனர் என்றும் அகத்தியரை ஆதி குருவாகக் கொண்டுள்ளனர் என்று முனைவர் திரு. டி. என். கணபதி அவர்கள் தமது தமிழ் சித்தர்கள் மரபு என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  திரு. பாலராமையா அவர்கள் மூல வர்க்கத்தை உண்மையில் நந்திவர்க்கம் என்று அழைக்கவேண்டும் என்று கூறியுள்ளதாகவும் திரு கணபதி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் இப்பாடலில் அகத்தியர் வேறொரு கருத்தை வெளியிடுகிறார்.  அவர் கைலாய வர்க்கத்தினருக்கு நான்முகனே ஆதி குரு என்று கூறுகிறார்.  மூல வர்க்கத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் மூலவர்க்கத்தினர் ஒம்காரத்தைப் பூரிக்கச் செய்து அதை ஆகாசம் என்ற தூணில் நாட்டி சோமப்பாலைக் கீழே இறங்கச் செய்து உலகமே அகார உகாரமாக இருப்பதை உணருவர் என்று கூறுகிறார்.  இவ்வர்க்கத்தைச் சேர்ந்த திருமூலர் இவ்வாறு காமப்பாலையும் கானல்பாலையும் அனுபவித்தார் என்றும் மூணு மூணான ஆறு ஆதாரங்களைக் கடந்தார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இவர் திருமூலரை ஆதிகுரு என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

காமப்பால் என்பது ஆசை அல்லது பாசத்தால் உண்டாகும் அளவுக்குட்பட்ட அனுபவங்கள்.  கானல் பால் என்பது லலாடத்திலிருந்து அமிர்தம் சுரந்து அதனால் சக்கரங்கள் வெளிப்பட்டு பெரும் அனுபவங்கள்.  இந்த சக்கரங்கள் உண்மையில் தூல உடலில் இல்லை, அவை இருப்பதைப் போன்ற ஒரு அனுபவம்தான் ஏற்படுகிறது.  அதனால் அந்த அனுபவங்களை அகத்தியர் கானல்நீர் போல உண்மையானதல்ல என்று கூறுகிறார்.


1 comment:

  1. Apadiyendral naadha nava naadha siddhargal entha pirivil varuvar?

    ReplyDelete