Tuesday, 4 March 2014

57. No need for Yama or Brahma

Verse 57
இட்டபடி ஏதாலே கிடந்து தென்றால்
என்பெருமை எல்லோரும் சித்தராவார்
அட்டலோகங்கள் எல்லாம் சித்தாய்ப் போனால்
அரகரா வியாசர் நூல் வீணாய்ப் போகும்
சுட்ட சட்டி விட்டாப்போல் எமன்தான் ஏது
சொல் எழுதி வரவிட்ட பிரமன் ஏது
பட்டபடி ஈசன் உத்தாரத்தாலே
பாடினான் வியாசனுந்தான் வேத நூலே

Translation:
How did it remain as  described- if asked
It will make me glorious if everyone will become a Siddha
If all the eight worlds become mystical accomplishments
Araharā! Vyasa’s book will become a waste
Like the burnt pot left (the hand). Where is Yama?
Brahma who wrote the fate- where is he?
As per Isa’s command
Vyasa sang his book, the Vedas.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that he would explain the details and if everyone becomes a siddha after hearing it, it will be his good fortune.  He says that all the eight worlds will become (a product of ) mystical accomplishments or siddhi.  This is an interesting concept.  A siddha is said to have attained ashtama siddhi or eight mystical accomplishments.  They are anima (reducing oneself to the size of an atom), mahima (increasing one's size enormously), garima (becoming heavy), lagima (becoming light), praapthi (have unrestricted access to everywhere), praakaamyam (realizing all the desires), Ishitva (having lordship), vaasitvam (power to subjugate).  Agatthiyar says that the entire world will be a manifestation of the Siddhas' mystical accomplishment.  That is, they exist so because of the siddhis.

Vyasa compiled the Vedas, wrote Mahabharata and Bhagavata.  The Vedas are books of rules.  When everyone lives the right way there is no one need for a rule book or book of knowledge.  Worldly life or the material body will leave them like a hot pot leaving the hand, no one will hold it, it is forsaken immediately.  There is a Tamil expression describing this, "satti suttadhadaa kai vittadhadaa"  The pot was hot and the hand left it.  The evolved soul will leave the material body immediately.  Hence, there is no god of death, Yama.  There is also no god of creation, Brahma who sends people into this world, writing their fate on their forehead, as nothing is created or destroyed.  

அகத்தியர் புலத்தியரிடம் தான் கூறும் விஷயங்களை அனைவரும் உணர்ந்துகொண்டால் அனைவரும் சித்தராவர் அது தனக்குப் பெருமை என்று கூறுகிறார்.  அப்போது கண்ணால் காணும் இந்த உலகம் அந்த சித்தர்களின் அஷ்டமா சித்தியின் வெளிப்பாடாக இருக்கும் என்கிறார் அவர்.  
சித்தர்கள் அணிமா (உடலை அணுவளவாக்கிக்கொள்வது), மகிமா (உடலை மிகப்பெரியதாக மாற்றுவது), கரிமா (மிகப்பாரமானதாக மாறுவது), லகிமா (எடையற்றதாக மாறுவது), ப்ராப்தி (எல்லா இடத்துக்கும் போகக் கூடிய தன்மை), ப்ராகாம்யம் (எல்லா விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொள்வது),  ஈஷித்வம் எல்லாவற்றிற்கும் தலைவனாக இருப்பது), வாசித்வம் (அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி) என்ற எட்டு சக்திகளுமே அஷ்டமா சித்திகள் எனப்படுகின்றன.  இந்த சக்தியால் உருவாக்கப்பட்டதாக இவ்வுலகம் விளங்கும், அதாவது அவர்களது சக்தியின் வெளிப்பாடாக இவ்வுலம் இருக்கும் என்கிறார் அகத்தியர்.
ல்லாம் இவ்வாறு இருப்பது அகத்தியரின் பெருமையால் என்று கூறுகிறார்.  அகத்தியரின் உபதேசத்தை ஒருவர் கடைப்பிடித்தால் அனைவரும் சித்தராகிவிடுவர், உலகமே சித்தாகும்.  அதாவது உலகில் நடைபெறுபவை அனைத்தும்  சித்தர்களின் விருப்பமாக இருக்கும். கண்ணால் காணும் இவ்வுலகம் விழிப்பு நிலையைக் குறிக்கிறது.  ஒருவர் கனவு காணும்போது வேறு பல உலகங்கள் தோன்றுகின்றன.  இவ்வாறு எவ்விதமான உலகங்கள் தோன்றுகின்றன என்பது அந்த சித்தர்களின் விருப்பமாக அவற்றின் இருப்பு அவர்களின் சித்தாக இருக்கும். 


வியாசர் வேதங்களைத் தொகுத்து அளித்தார்.  அவரே மகாபாரதம் பாகவதம் ஆகியவற்றையும் இயற்றியவர்.  வேதங்கள் ஒருவர் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கூறும் விதிகளைக் கொண்டது., இறைவனைப் பற்றிய அறிவைக் கொண்டது.  அனைவரும் சரியான முறையில் வாழ்ந்தால் விதிப் புத்தகங்களுக்குத் தேவை என்ன?  அதனால் வியாசரின் புத்தகம் தேவையற்றுப் போய்விடும்.  சட்டி சுட்டதடா கை விட்டதடா என்பதைப் போல உலக வாழ்க்கை ஒருவரை விட்டுவிடும்.  பருப்போருளால் ஆன உடல் அவரை விட்டுவிடும்.  அதனால் மரணம் எங்கே யமன்தான் எதற்கு?  இறப்பில்லாவிட்டால் பிறப்பேது பிரம்மன்தான் எதற்கு? என்று அகத்தியர் கூறுகிறார்.  

5 comments:

  1. What An Eye Opener Indeed.!! .Agahtiyan's Meijnanam..

    ReplyDelete
  2. This and your post 57 till 60, I belief, the gist of the matter is mentioned by Agathiyar again in his Agasthiyar Gnanam - Gnanam 3, Song 3 till 6.

    ReplyDelete
    Replies
    1. Shan, If possible pls post the Songs 3 till 6 on your blog...agathiyarvanam.blogspot.in.

      Delete
  3. Shan, the version of Agatthiyar jnanam 3 I have has only three songs. Actually jnanam 1 has one verse, 2 two verses etc :)

    ReplyDelete