Tuesday 18 March 2014

89. Agatthiyar's recommendation for shodasa upachara- sixteen types of respects

Verse 89
உரைக்கிறேன் புலத்தியனே நன்றாய்க் கேளு
உள்ளபடி நாற்கோணம் நகார பீடம்
திரைக்கிறேன் சரஸ்வதியும் பிரம்மனோடு
சிவசிவா மச்ச முனி நிகண்டில் சொன்னார்
தரைக்கிறேன் எழுத்தோடு பிரம்மா சூக்ஷம்
சாற்றியே தூபமொடு தீபங் காட்டி
துறைக்கின்றேன் சோடச உபசாரத்தோடு
சொன்னதோர் பூரணத்தால் தவசு பண்ணே

Translation:
I will tell, Pulatthia, listen well,
It is a four angled square, the dais of nakāra
I am condensing it, Sarasvati along with Brahma
Siva Sivā Maccha muni told in the nigandu
I am telling you, along with the letter, the subtlety of Brahma,
Praising it, waving the lamp and the fragrance
I am surrendering. Along with sixteen acts of respect (shodasa upachara)
Perform austerities with the mentioned fully complete.

Commentary:
In this verse, Agatthiyar is not mentioning a specific name for the cakra.  The verse seems to refer to both muladhara and svadhistana cakra.  There two cakras work in unison.  Our past karmas stored in the muladhara are activated by the svadishtana cakra.  Let us see the details about both these two cakras.

The muladhara cakra is depicted as a square. 
The shat cakra nirupana gives the following details about this cakra:
The muladhara cakra is attached to the lower terminus of the sushumna.  It is below the genitals and above the anus.  It has four petals of crimson hue.  On the petals are the four letters va, sa, sha,sa.
Inside the lotus is a square.  It represents the earth element. 
 Near the mouth of the nadi called vajra, there is a lightning-like triangle called kamarupa also known as Tripura.  There is a vital air called Kandarpa which is of deep red hue and the kaama bija (kleem). 

Inside the triange is svayambhuva in the form of a linga.  He is revealed by knowledge and meditation and is of the color of a new leaf.  Over the svayambhuva lies the sleeping kundalini gently covering the mouth of the Brahma dvara with her mouth.  Like the spiral of the conch shell, her shining snake like form goes three and a half times around Siva.  She produces melodious poetry and all other compostions in prose or verse. On top of the Linga is the chit kalaa another form of Kundalini.

The four petals of the muladhara represent the four functions of the psyche: the mind, intellect, consciousness and ego.  The animal depicted in this cakra is the elephant which is a symbol of wisdom.  It has seven trunks that represent the seven dhatus. 

The word svadishtana means- sva- one’s, adishtana- locus.  This is the locus of the subconscious mind.  Evolution of human consciousness begins here.   This cakra is depicted as six petalled lotus that represent the six qualities- anger, hatred, jealousy, cruelty, desire and pride that should be overcome first. 
The animal designated is the crocodile which symbolizes laziness, insensitivity as well as tight grip.  The above mentioned qualities hold on to a person like a crocodile and never let him go.  The puranic story of Gajendra moksa where the crocodile holds on to the foot of the elephant represent the karma of a person, elephant, being held as a captive by the crocodile, the qualities in svadhishtana.  When the Lord, divine consciousness, descents, the crocodile is cut up, the hold of the samskaras are removed and the birth cycle stops.
 The element of svadhistana cakra is water.  The Divinity of this cakra is Brahma, the creator and Sarasvati, the goddess of wisdom and fine arts.  The color of this cakra is orange which symbolizes the rising consciousness.   Yogins opine that all the nadis branch off from svadishtana.  The Pothigai that Agatthiyar refers to is this cakra from which the river Tampraparani, the nadis, branch off.

            Agatthiyar advises Pulatthiyar to perform austerities at the muladhara cakra by showing sixteen types of respects or ‘shodasa upachara’.  They are: offering of seat, asking permission to offer respects, washing the feet, lustration, offering flowers, fragrance, incense, lamp, fragrant water to wash hands, bathe with fragrant water, wiping the body with soft cloth, offering garment, upper garment, sacred thread, food, water to drink, betel leaves, offering all the above to the demigods in his presence, paying obesience, offering gold or silver and final salutation with flowers.

            இப்பாடலில் அகத்தியர் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தின் பெயரைக் கூறவில்லை.  இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து மூலாதாரம் சுவாதிஷ்டானம் ஆகிய இரண்டு சக்கரங்களைக் குறித்தும் அவர் பேசுவதாகத் தோன்றுகிறது.  மூலாதாரத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நமது கர்மங்கள்/சம்ஸ்காரங்கள் சுவாதிஷ்டான சக்ரத்தினால் செயல்படத் தொடங்குகின்றன. 

மூலாதார சக்கரம் நாற்கோணமாக வரையப்படுகிறது.  ஷாட் சக்கர நிரூபணம் என்னும் நூல் மூலாதார சக்கரத்தைப் பற்றி கீழ்க்காணும் விவரங்களைத் தருகிறது.  மூலாதார சக்கரம் சுழுமுனை நாடியின் வாயில் உள்ளது.  அது பிறப்புறுப்புக்களுக்குக் கீழும் குதத்துக்கு மேலேயும் உள்ளது.  அதனுள் நாற்கோணமான தாமரை மலர் உள்ளது.  அதன் நான்கு இதழ்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களைக் குறிக்கின்றன.  மூலாதாரம் பஞ்ச பூதங்களில் நிலத்தைக் குறிக்கிறது.  அதன் நடுவில் யானைகளின் தலைவனான ஐராவதம் ஏழு தும்பிக்கைகளைக் கொண்டு காணபடுகிறது.  இந்த ஏழு தும்பிக்கைகளும் ஏழு தாதுக்களைக் குறிக்கும்.

இங்குள்ள வஜ்ர நாடியின் வாய்க்கருகில் மின்னலைப் போன்ற காமரூபம் எனப்படும் முக்கோணமும் கந்தர்ப்பம் என்னும் பிராணனும் காணப்படுகின்றன.  அதன் நிறம் சிவப்பு.  அங்குள்ள காம பீஜம் க்லீம்

இந்த முக்கோணத்தின் உள்ளே லிங்க உருவில் ஸ்வயம்புவா இருக்கிறார்.  அவர் ஞானத்தினாலும் தியானத்தினாலும் வெளிப்படுகிறார்.  அவரது நிறம் இளம் தளிரின் நிறம்.  இவரைச் சுற்றி குண்டலினி பாம்பைப் போல மூன்றரைச் சுற்றுக்களைக் கொண்டு பிரம்மத்வாரத்தைத் தனது வாயினால் மூடியபடி இருக்கிறாள்.  அவள் இனிமையான சங்கீதத்தையும் பாடல்களையும் புனைகிறாள்.  அந்த சுற்றுக்கு மேல் குண்டலியின் மற்றொரு வடிவான சித் கலா இருக்கிறாள்.

சுவாதிஷ்டானம் என்றால் தனது இடம், (ஸ்வ+அதிஷ்டானம்).  இதுவே விழிப்புணர்வின் பதி. இது ஆறு இதழ்களைக் கொண்ட கோபம், வெறுப்பு, பொறாமை, கொடூரம், ஆசை, தற்பெருமை என்று வெல்லவேண்டிய ஆறு குணங்களைக் குறிக்கும். இந்த சக்கரத்துக்கான விலங்கு முதலை,  அது சோம்பேறித்தனம், விழிப்பின்மை ஆகியவற்றைக் குறிக்கும்.  இந்த சக்கரத்தின் அதிபதி பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவர்.  இந்த சக்கரத்தின் நிறம் சூரியோதய நிறம்.  அது விழிப்புணர்வின் எழுச்சியைக் குறிக்கும்.  நாடிகள் அனைத்தும் இவ்விடத்திலிருந்துதான் பிரிந்து உடல் முழுவதும் பரந்து விரிகின்றன என்று யோகிகள் கூறுவார்.  அகத்தியர் இவ்விடத்தைத்தான் பொதிகை என்றும் இங்கிருந்து தாமிரபரணி ஆறு, நாடிகள், ஓடுகின்றது என்று குறிப்பிடுகிறார்.


அகத்தியர் இவ்விடத்தை சோடசோபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களைச் செய்து வழிபடுமாறு புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார்.  சோடசோபசாரம் என்பவை: ஆசனம் (அமர இடம்), ஸ்வாகதம் (வரவேற்பு), அனுமானம் (உபசாரத்தைப் பண்ண அனுமதிபெறுதல்), பாத்யம் (கால்களைக் கழுவ நீர் தருதல்), ஆசமனம் (வாய் கழுவ நீர் தருதல்), புஷ்பம் (பூ), கந்தம் (மணம்), தூபம் (ஊதுபத்தி முதலியன), தீபம் (விளக்கு தீபாராதனை), அர்க்யம் ( கை கழுவ நீரை விடுதல்), ஸ்நானம் (குளியல்), ப்லோதம் (உலர்ந்த மெல்லிய துணியால் உடலைத் துடைத்தல்), வஸ்திரம் (ஆடைகளை அணிவித்தல்), உத்தரீயம் (மேலாடையைத் தருதல்), யக்ஞோபவீதம் (பூணூல், மேல்துணி), ஹவிஸ் (உணவு), பாநீயம் (குடிக்க நீர் தருதல்), தாம்பூலம் (வெற்றிலை பாக்கு), பலி (அவர் முன்னிலையில் மற்ற சிறிய தேவதைகளுக்கு உணவளித்தல்), பிரணாமம் (வணங்குதல்), தட்சிணை (பொன்னோ, வெள்ளியோ தருதல்), புஷ்பாஞ்சலி (பூக்களைக் கொண்டு வணங்குதல்).

No comments:

Post a Comment