Sunday 23 March 2014

96. Vishuddhi cakra-1

Verse 96
இல்லாமல் போனதென்ன ஒன்றும் இல்லை
என்மகனே புலத்தியனே இயம்பக் கேளு
சொல்லாமல் சொன்னதென்ன உனக்காகத் தான்
சுருக்காகப் புகலுகிறேன் அறிவுள்ளோனே
அல்லாதவர்க்குமேல் ஐயிரண்டு
அங்குலத்தின் மேல் வீடு சுத்தி உண்டு
சல்லாபம் ஆனதொரு புஷ்பம் போல
தானுமாறு கோணமதாய் ஓங்கும் பாரே

Translation:
What is not present? Nothing!
My son, Pulatthiya!  Listen to me tell you,
I told this indirectly only for your sake
I am telling this now in a condensed form, You wise one!
For those who do not have (evil qualities), there is the house of purification (vishuddhi)
Five and two inches above
Like the flower that was pollinated
It will rise as the six angles (shatkona).

Commentary:
This verse describes the vishuddhi cakra.  Agatthiyar calls the vishuddhi as the ‘veedu suddhi’ or ‘house of purification’.  He points to its location as ten inches above the anahata.  He says that when the consciousness ascends to this cakra, the cakra will bloom like a pollinated flower and rise as six angles.  This cakra is depicted as a lotus with sixteen petals with a downward facing triangle.  However, Agatthiyar mentions that this cakra has six angles.

Among the cakras, the vishuddhi plays a very important role.  Vi means supreme, suddhi means purification.  This is the cakra where the human qualities meet divine qualities.  Vishuddhi is the junction where human qualities are purified and taken beyond their limits.  If these qualities descend to lower cakras they become poison.  If they go up they make the aspirant  divine.  Siva’s blue throat and the puranic episode of Parvathi obstructing the halahala poison from descending down Siva’s neck indicate this phenomenon.

இப்பாடல் விசுத்தி சக்கரத்தை விவரிக்கிறது.  அகத்தியர் விசுத்தியை வீடு சுத்தி அல்லது தூய்மைப்படுத்தும் வீடு என்கிறார்.  இந்த சக்கரம் அனாஹத சக்கரத்திலிருந்து பத்து அங்குல தூரத்தில் உள்ளது என்கிறார். யோகியின் விழிப்புணர்வு இந்த சக்கரத்தை அடையும்போது இந்த சக்கரம் ஒரு பூவைப்போல ஆறு கோணங்களைக் கொண்டு விரிகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.  பொதுவாக பதினாறு இதழ்களைக் கொண்ட தாமரை மலராகவும் அதனுள் கீழ் நோக்கிய முக்கோணத்தைக் கொண்டதாகவும் வரையப்படுகிறது.


சக்கரங்களில் விசுத்தி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த இடத்தில்தான் ஒருவரது மனித குணங்கள் தூய்மை படுத்தப்பட்டு இறைகுணங்களாக மாற்றப்படுகிறது.  வி என்றால் மிக உயர்ந்த, சுத்தி- சுத்தப்படுத்துதல்.  இவ்வாறு தூய்மைப் படுத்தப்பட்ட வலுப்பெற்ற குணங்கள் மேலே உள்ள சக்கரங்களுக்குப் போனால் மேலும் உயர்விழிப்புணர்வு நிலைகளைத் தருகிறது.  அவையே கீழிறங்கினால் நஞ்சாகின்றன.  சிவபெருமானின் நீல நிறமான கழுத்து, பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தப் பிடித்து ஹாலஹால விஷம் கீழே இறங்காமல் தடுத்தது என்ற புராண கதைகள் இந்த தத்துவத்தையே குறிக்கின்றன.  

No comments:

Post a Comment