Wednesday 12 March 2014

76. Pulatthiyar's lament- 2

Verse 76
ஆச்சையா பிடவை என்றால் ரவிக்கை என்றீர்
அரகரா காமி என்றால் ஞானி என்றீர்
பேச்சையா பெண் என்றால் மண்ணே என்றீர்
பேர்கேட்டால் பெண் என்றால் மண்ணே என்றீர்
பேர் கேட்டால் அதற்கு நெடும் கதைதான் சொன்னீர்
கூச்சையா குடிசை என்றால் மேடை என்றீர்
குறும்பன் என்றால் குணவான்றான் இவனே என்றீர்
காச்சையா தணல் என்றால் தண்ணீர் உள்ளம்
கையிலைந்து கொண்டைவைத்த கதை சொன்னீர்

Translation:
When said, “sari” you said, “blouse”
When said, “ araharā! a person with desire”, you said, “a wise one”
If it said, “talk about the lady” you said "it is soil".
When asked, “what is the name” you told "a lady is soil only".
When the name was asked, you told a long story for that also.
When said, “hut” you said,”a dais”
When said, “a naughty one” you said, “he is the one with supreme qualities”
When said,”boil with kindling the fire” you told the story about
Holding the water in the palm and the doubt.

Commentary:
Through different similies Pulatthiyar laments that Agatthiyar did not answer his questions.  Pulatthiyar says that when he asked Agatthiyar about a lady he talked about "soil".  In the Siddha parlance the woman is considered as the soil the ground in which the the seed, the sperm, germinates.  The male is referred to as vinnor, the one who has the sky or the space and the lady as mannor, or the landed.  The boiling of the water refers to raising the fire of kundalini and removing the distinctions.  Water represents the five elements, the distinctions of which are removed by kundalini yoga. 


முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இப்பாடலில் புலத்தியர் தான் கேட்ட கேள்விகளுக்கு அகத்தியர் நேரிடையாக பதிலளிக்கவில்லை என்று புலம்புகிறார்.  இப்பாடலில் புலத்தியர் தான் “பெண்ணைப்” பற்றிக் கேட்டால் அகத்தியர் “மண்ணைப்” பற்றிக் கூறினார் என்கிறார்.  சித்தர்கள் பெண்ணை மண் என்பர். ஏனென்னில் மண்ணில் இடப்பட்ட விதை, விந்து, முளைத்து, செடியாக, ஒரு மனித உருவமாக வெளிவருகிறது.  சித்தர்கள் ஆணை விண்ணோர் என்றும் பெண்ணை மண்ணோர் என்றும்  குறிப்பிடுகின்றனர்.  இது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உயர்வு தாழ்வைக் காட்டுவதல்ல, அவர்களது செயலைக் குறிப்பது.  தான் நீரை எவ்வாறு காய்ச்சுவது என்று கேட்டால் அகத்தியர் உள்ளங்கையில் ஐந்து கொண்டையை வைத்திருப்பதைக் கூறினார் என்கிறார் புலத்தியர்.  இது குண்டலினி யோகத்தினால் உடலினுள் இருக்கும் அனலை எழுப்புவதைக் குறிக்கிறது. தண்ணீர் என்பது ஐந்து பூதங்களை அதாவது வேறுபட்ட உலகைக் குறிக்கிறது.  குண்டலினி யோகம் இந்த வித்தியாசங்களை விலக்குகிறது,  ஒருமை நிலையை அடையச் செய்கிறது.  கொண்டை என்பது கொண்டு+ ஐ அல்லது சந்தேகம் வேறுபாடு என்று பிரிகிறது.

No comments:

Post a Comment