Wednesday 5 March 2014

59. Ramayana and Mahabharata- Agatthiyar's lament

Verse 59
பாடினான் புலத்தியா குபேர வர்க்கம்
பரமகிரி எடுத்த ராவணன் தான் என்றும்
நாடினான் சரசதர்க்கு ராமன் என்றும்
நன் காட்டில் ஊடுருவி சூர்ப்பனகை மூக்கைத்
தேடினான் அரிந்துவிடக் கொம்மையுந்தான்
திரள் பரிய மானதுவும் உயர்ந்து மெத்த
சாடினான் கஞ்சனுக்காய் மாயோன் என்றும்
சண்ணிவிட்டான் ஒருவனுந்தான் கேட்பாரில்லை

Translation:
Pulathiya! He sang that Ravana who lifted the Paramagiri (Himalayas)
Belonged to the lineage of Kubera-
He sought Rama, the Dasaratha's (son)
Penetrating the good forest, he searched for
Surpanaka’s nose, to cut it and her breasts
As Māyōn (Krishna) He fought against the tall big horse
For the sake of Kamsa
He spread stories, there was no one to question it.

Commentary:
In this verse Agatthiyar dismisses the stories found in Bhagavadam and Ramayanam.  He says that several stories were created in these epics such as, that Ravana who lifted the Himalayas was of the same family as Kubera, the god of wealth, that the Lord came as Rama, Dasaratha's son and cut off the nose and breast of the asura Surpanaka, that he fought with the horse Kesi sent by Kamsa when he incarnated as Krishna.  Agatthiyar dismisses all these stories as lies and Vyasa has spread these stories as there was not one to question them. 
Agatthiyar is not dismissing the epics here.  He says that they have remained only as stories.  People do not attempt to find the esoteric principles these stories convey.  For example, the soul is controlled by the ten senses- senses of knowledge and action.  Dasaratha refers to one who can control these senses instead of being controlled by them.  Ravana who is said to have ten heads is one who is buffeted by the senses.  Rama refers to super consciousness that is born from control of senses.  Surpanaka refers to vanity.  Cutting her nose and breasts means cut away one's pride and ego.  Saying that Ravana is the son of Kubera the god of wealth, means man who is under the control of his senses belongs to the lineage of wealth, those who seek worldly pleasures, the distractions that the world of wealth provides. His many heads refer to the control that worldly pleasures exert on a soul. 

Similarly, Krishna fighting with the various asuras that Kamsa consigned refers to the various distractions, worldly pleasure that one has to fight with to reach the super conscious state.  Agatthiyar laments that no one has explained these principles behind the various characters and the stories in the puranas.  Instead, people are taking them literally and spreading them as mere stories.  Puranas were created to house various geological events and principles.  Over time their real purpose has been lost.  They have become mere story books.    

இப்பாடலில் அகத்தியர் பாகவத்தில் காணப்படும் கதைகள் அனைத்தும் உண்மையல்ல என்று கூறுகிறார்.  வேதத்தை வகைப்படுத்திய வியாசரே பாகவதத்தையும் இயற்றினார்.  அங்கு கொடுக்கப்பட்டுள்ள ராமாவதாரம், கிருஷ்ணாவதார கதைகள் அனைத்தும் தட்டிக் கேட்க ஒருவரும் இல்லாததால் பரப்பட்டன என்கிறார் அகத்தியர்.
இதனால் அகத்தியர் புராணங்களை மறுக்கிறார் என்று பொருளல்ல.  இராமாயணம் மகாபாரதம் என்ற இரு காவியங்களும் எதற்காக இயற்றப்பட்டன என்பதை அனைவரும் மறந்துபோய்விட்டனர்.  இந்த காவியங்கள் மிக உயர்ந்த கருத்துக்களை எளிதாக நினைவில் கொள்வதற்காக கதைவ டிவில் இயற்றப்பட்டன.  உதாரணமாக ஆத்மாவை பத்து ரதங்களான கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் ஓட்டுகின்றன.  தசரதன் என்பவன் இந்த பத்து ரதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.  அவ்வாறு கட்டுப்பாட்டை உடையவனிடம் பிறப்பது ராமன் என்ற உயருணர்வு.  சூர்பனகை ஆத்மாவின் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கிறாள்.  அவளது மூக்கையும் மார்பையும் அறுப்பது என்பது இந்த இரு வெளிப்பாடுகளையும் அறுப்பது.  குபேரனின் மகன் ராவணன் என்பது செல்வத்தினால் பிறக்கும் அகங்காரத்தைக் குறிக்கும்.  ராவணனின் தலைகள் இந்த அகங்காரங்கள் நமக்குள் ஏற்படுத்தும் விகாரங்களை, நாம் தலை சுத்தி ஆடுவதைக் குறிக்கும்.

அதேபோல் கம்சன் அனுப்பிவைத்த அசுரர்களை கண்ணன் கொன்றான் என்றால் இறைவன் அகங்காரம் அனுப்பிவைக்கும் தீய தன்மைகளை கொன்று குவிக்கிறார் என்று பொருள். 

 இந்த தத்துவங்களைப் பற்றி அறியாமல் நமது காப்பியங்கள் வெறும் கதைப்புத்தகங்களாகிவிட்டன, மக்களும் அந்த கதைகளை அவற்றின் பொருளறியாமல் பரப்பி வருகின்றனர் என்று புலம்புகிறார் அகத்தியர். 

9 comments:

  1. Startling Revelation Indeed!! Thank you so much for your lucid translation
    .
    I used to request Agathiyan IN MY PRAYERS AGAIN And again,,, that I wanted to read and know all the "Pearls of Wisdom penned By Him."

    I am Extremely grateful to Agathiyan for having heard my Sincere Prayers and Request and to You...my dear Friend and Divine Soul .....for doing this Yeoman Service to our FATHER..AGATHIYAN.
    This is the "Wisdom Transmitted directly form the Source."

    Stay Blessed..!.

    ReplyDelete
  2. Thank you so much Jnana Jyothi amma. I am truly blessed to be able to enjoy the meanings that Agatthiyan shows me through these verses.

    ReplyDelete
    Replies
    1. You have Agathiyan's and the Siddhas Blessings in Abundance.
      Translating Agathiyan's works in to Tamil itself ..I was told ..is an Arduous Task...and Into English....it is still more Arduous....Many many Devotees of Agathiyan who are cannot read Tamil,...like me for Instance.... are being Benefited by your Divine Service.
      I have no words to Express my Happiness..I HAVE UNDERSTOOD A LOT....REALLY A LOT...This was my life's wish and Desire to Know many a TRUTH.....Directly from Agathiyan.Truely Mind Blogging Revelations.!!
      All I can say is ...".The Old Order Changeth, Yielding Place To New ."

      Delete
  3. "The Old Order Changeth, Yielding Place to New". Beautifully said. Thats the reason we have God coming down as Avatars.

    ReplyDelete
  4. Thanks Jyothi amma for clearing what you meant by this expression. Yes, old myths are being cleared and replaced by the truth

    ReplyDelete
  5. அம்மா,

    தெளிவான உண்மையை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!

    இதுவரை காலமும் ராமாயணம் உண்மை என்றே நம்பி இருந்தேன் இப்போது தெளிந்து விட்டேன்.

    அனுமன் என்று யாரைக் குறிப்பிட்டு உள்ளனர்? மந்திரங்கள் கூட அனுமனுக்கு சித்தர்கள் இயற்றி உள்ளனரே ?

    ReplyDelete
  6. 60
    ஆவது பொருளில் நீங்கள் பின்னூட்டத்தில் பதில் அளித்துள்ளதை இப்போது தான் கவனித்தேன் அனுமன் என்று குருவை கூறி உள்ளார்கள்.

    நன்றி

    ReplyDelete
  7. சென்னையில் உள்ள அயக்கிரிவா பதிப்பாளர்கள் போன மாதம் இராமாயணத்தின் தத்துவங்களை விலக்கி ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அமர கவி சித்தேஸ்வரர் என்பவரின் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகம் படிப்பதற்கு மிகச் சுவையாக உள்ளது.
    இராமாயணம் உண்மையல்ல என்று அகத்தியர் கூறவில்லை. அதன் உட்பொருளை ஒருவர் உணர வேண்டும் என்றே கூறுகிறார். உண்மையில் ராமர் என்று ஒருவர் இருந்திருக்கலாம், ஒரு யுத்தம் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அதை ஒரு கதை என்ற நிலையோடு நின்றுவிடாமல் அதன் உட்பொருளை ஒருவர் உணர வேண்டும்.

    ReplyDelete
  8. ராமாயணத்தைப் பற்றிய இன்னொரு சுவையான கருத்து- ராமர் என்பது பரவுணர்வு, சீதை ஜீவாத்மா. ஜீவாத்மா ராவணன் என்ற நமது பத்து இந்திரியங்களால் சிறை வைக்கப்பட்டுள்ளாள். அவள் இருக்கும் இடத்தை அனுமன் என்ற குரு வெளிப்படுத்துகிறார். ஜீவாத்மாவின் ஆற்றாமையைக் கண்ட பரமாத்மா அல்லது பரவுணர்வு தான் இலங்கைக்கு- லம் என்பது பூமியின் பீஜ அட்சரம், மூலாதாரத்தில் குறிக்கப்படுவது, வருகிறது. அது நீர் தத்துவத்தின் இடமான சுவாதிஷ்டானத்தை மெல்லிய பாலமான நாடியின் மூலம் கடந்து ஜீவாத்மாவை மேலே கொண்டுவருகிறது. அந்த ஜீவாத்மா மணிபூரகம் என்ற அக்னிப் பிரவேசத்தை செய்துவிட்டு வாயுவின் மூலமாக, அனாஹத சக்கரத்தின் மூலமாக ஆகாய வழியில், விசுத்தியைக் கடந்து (விசுத்தி ஆகாய தத்துவம்) ஆக்னையை அடைகிறது, பிறகு அதிலிருந்து மேலே சென்று சஹாஸ்ராரத்தில் பரவுணர்வுடன் கலந்து பட்டாபிஷேகம், அல்லது தானே பரவுணர்வு என்று முடிசூட்டிக் கொள்கிறது! இவ்வாறு இராமாயணம் என்பது மூலாதாரத்திலிரிந்து சஹஸ்ராரத்தை ஜீவன் அடைவதைக் குறிப்பதாகப் படுகிறது!

    ReplyDelete