Thursday, 6 March 2014

66. Pranayama

Verse 66
போச்சென்று மயங்காதே புலத்தியா கேள்
பொருளான அருளதுவைப் புகலக் கேளு
பாய்ச்சென்று வாசியைநீ உள்ளே பாச்சு
பதியான பீடலிங்கம் உள்ளே தூபி
கூச்சென்று நடுமூலம் கும்பம் நீரும்
குறையாமல் எட்டோடு நாலில் சேரு
பூச்சென்ற பூச்சியெல்லாம் (பூச்செல்லாம்) வெளியாப் போச்சு
புலத்தியனே சட்டைமுனி புகலிதாமே

Translation:
Do not worry thinking everything is lost, Pulatthiya!  Listen!
Listen to me explain the grace, that which matters
You direct forcefully the vital breath (vasi) inside
The locus, the peeda lingam inside, the pillar
In the middle, the kumbam,
Without decreasing it add the four to the eight
All the coverings will became space
Pulatthiya!  This is the refuge of Sattaimuni.

Commentary:
Having dismissed alchemy and the myth that it would lead to realization Agatthiyar is now pacifying Pulatthiyar saying that he will teach him about grace, that which really matters.  He tells Pulatthiyar to direct the breath, the vital air, vāsi, inside so that the kundalini sakti stirs from its inactive state and the peetalingam or the lingam with dais will occur.  We have seen previously that this lingam is the kundalini sakti rising through the cakras.  This is called linga meni or the linga body.  The kundalini sakti remains as the pillar of fire that flows through the sushumna nadi. 

Agatthiyar talks about joining the four to the eight.  This is an important concept in breath regulation or pranayama.  Pranayama involves inhalation, exhalation and retention.  
When the breath enters the body eight measures of it go down as apana and four measures go to the head as prana.  Joining four to eight is uniting the prana with the apana and bringing a balance.  Bhagavad Gita chapter 4 sloka 29 talks about this process.  It says offer the prana to the apana and apana to prana thus bringing them both to a still position.  The prana is the inbreath, apana is the out going breath and retention is kumbaka.  joining the four and eight brings about kumbaka.  When this is achieved the ‘poocchu’- covering or the five koshas the sheaths that surround the soul will become the limitless supreme space.  Agatthiyar says that Sattaimuni did this. Tirumular says the same as
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக்கொளில் கோல அஞ்சு எழுத்தாமே

“Enter two damsels onto the dancing stage when they perform they exit twelve inches
They move back eight inches they cut short four. Add the four, it will become the beautiful five letters”  (Dr. T.N.Ganapathy et.al. Tirumandiram vol.3 mandiram 576)

ரசவாதத்தையும் புராண கதைகளையும் கண்டித்தபிறகு அகத்தியர் இப்பாடலில் புலத்தியரை, தான் அவருக்கு பொருளான அருளைப் பற்றிக் கூறுவதாகச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார்.  அவர் வாசி யோகத்தில் கூறிய மூச்சுப் பயிற்சியை உள்நோக்கி விசையுடன் செலுத்துமாறும் அதனால் பீடலிங்கம் தோன்றும் என்றும் முதலில் கூறுகிறார். பீட லிங்கம் என்பது ஆறு சக்கரங்களின் ஊடே எழும் குண்டலினி சக்தியின் வடிவைக் கூறுகிறது.  அப்போது குண்டலினி சக்தி ஒரு தூணைப்போல் அக்னிப் பிழம்பாக சுழுமுனை நாடியில் எழுகிறது. 
அதன் பிறகு அகத்தியர் நாலை எட்டுடன் சேர்க்குமாறு கூறுகிறார்.  இது பிராணாயாமத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும்.  பொதுவாக நமது சுவாசம் உள்மூச்சு வெளிமூச்சு, மூச்சை உள்ளே இருத்துதல் என மூன்று பகுதிகளைக் கொண்டது.  மூச்சு உடலினுள் வரும்போது எட்டு விரற்கடைகள் கீழ் நோக்கி அபான வாயுவாகப் பயணிக்கிறது.  நாலு விரர்கடைகள் பிராணவாயுவாக தலையினுள் பாய்கிறது.  இந்த இரண்டையும் சேர்ப்பதையே அகத்தியர் நாளுடன் எட்டிச் சேர்ப்பதாகக் கூறுகிறார்.  
பகவத் கீதை நான்காவது அத்தியாயம் 29 வது சுலோகத்தில் கிருஷ்ணர் பிராணனை அபானனுடன் சேர்க்கவேண்டும் அபானனை பிராணனுடன் சேர்க்கவேண்டும் அதுவே அந்தர் யாகம் என்று கூறுகிறார்.  
இவ்வாறு செய்தால் ஐந்து பூச்சுக்கள் அல்லது கோசங்கள் கட்டவிழ்த்து அனைத்தும் பரவெளியாகும் என்கிறார் அகத்தியர்.  பூச்சு என்பது ஒன்றைச் சுற்றி வெளியே அமைப்பது.  நமது ஆத்மாவைச் சுற்றி ஐந்து கோசங்கள் எனப்படும் உடல்கள் அமைந்திருக்கின்றன.  அவை ஆத்மாவைத் தம்முள் அடக்கி வைத்துள்ளன.  இப்பயிற்சியினால் அந்தத் தளை அகன்று ஆத்மா பரவெளியைச் சேருகின்றது.  இதைத் தான் சட்டைமுனி செய்தார் என்று அகத்தியர் கூறுகிறார்.

திருமூலர் இதை

“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக்கொளில் கோல அஞ்சு எழுத்தாமே” என்கிறார்.

இரு மங்கையர்- இடை பிங்கலை நாடிகள், பன்னிரண்டு அங்குலம் ஓடி மீளுவது நமது சுவாசம்.  அதில் எட்டு விரலளவு இருப்பதுடன் நாலைக் கூட்டினால் நமது உடல் மந்திர மேனியாக பஞ்சாட்சரமாக ஆகும் என்கிறார் திருமூலர் (முனைவர். T.N.கணபதி குழுவினர், திருமந்திரம் பாடல் 576).

No comments:

Post a Comment