Tuesday 25 March 2014

102. Signs along the way..

Verse 102
தடக்குறி

நடுநின்று வாசியை நீ நோக்கிப் பாரு
நாட்டமெல்லாம் நடுமனையில் நாட்டம் காணும்
கடுகின்ற  கடுந்தீயோ கானத்தீயோ
காரணமோ கோடி ரவி கண்ணே கூசும்
கொடு நின்ற கொடு நதியில் புகுந்த யோகி
கூரறியோம் கூரறியோம் இவர்தன் செய்கை
அடுநின்ற அக்கினியாம் ஏக தீபம்
அண்டரண்ட சாகரமும் அணுவும் தானே

Translation:
You concentrate on the vāsi that remains in the middle
All the focus and interest in the middle house
It is the all pervasive intense fire? The fire of the forest?
The cause? Million suns, there will be glare in the eyes
The yogi who entered the river
We do not know, we do not know, his action
The fire that remains near, the singular lamp
All the universes, oceans and atoms only, isn’t it?

Commentary:
This verse describes the jyoti form of the Lord.  Agatthiyar says that if one focusses on the breath that flows in the middle house, the sushumna, the fire of kundalini will rise.  He wonders whether this fire is the intense , all pervasive heat, the fire of the forest, the universal cause, the one that has the brilliance like million suns.  He says that one’s eyes will glare due to its brilliance.  Agatthiyar calls the divine the all pervasive fire.  It is the fire , or the right temperature that makes the world exist.  We need the right temperature for all the life processes in this world.  If this heat is absent, then the world will freeze and die out.  The forest fire consumes everything in its path.  The kundalini consumes all the principles in her way and absorbs them within her.  It is the universal cause, the reason for the cosmic activity.  This is the river into which a yogin who practices kundalini yoga enters.  One cannot understand his actions as they are beyond the comprehension of the limited consciousness.  Agatthiyar says that the fire of the kundalini, the singlet lamp, the lamp of consciousness is the cause for the macrocosm as well as the microcosm.

இப்பாடல் இறைவனின் ஜோதி உருவைக் குறித்து உள்ளது.  ஒருவர் தனது வாசியை நடுவீடான சுழுமுனையில் செலுத்தினால் குண்டலினி விழித்தெழும்.  அந்த தீ மிகத்தீவிரமான எங்கும் பரந்துள்ள தீயா, அனைத்தும் தன்னுள் ஏற்றுக்கொண்டும் கபளீகரம் செய்யும் காட்டுத் தீயா அனைத்துக்கும் காரணமா என்று அகத்தியர் வினவுகிறார்.  அதன் ஒளி ஆயிரம் சூரியன் களின் சோபையைப் போல உள்ளது என்கிறார் அவர்.  அதைக் கண்டவர்களின் கண்கள் கூசும் என்று மேலும் கூறுகிறார். 
அகத்தியர் இறைவனை எங்கும் நிறைந்த தீ என்கிறார்.  இந்த உலகம் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இருப்பதனால் தான் இயங்குகிறது.  அந்த சூடு சிறிது குறைந்தாலும் உயிர்கள் அழிந்துவிடும்.  அதனால் இறைவனே தீயாக இருந்து இவ்வுலகைக் காக்கிறான். அந்தத் தீயே நம்முள் ஜாடராக்னியாக இருந்து உணவைச் செரிக்கச் செய்கிறது.  அதுவே படபாக்னியாக இருந்து கடல் மட்டம் உயராமல் காக்கின்றது என்று மறைகள் கூறுகின்றன.  இவ்வாறு இறைவனே காட்டுத் தீயாக அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்பவனாக உலகிற்குக் காரணமாக இருக்கிறான்.

இந்த தீயை உணர ஒரு யோகி நதிக்குள் புகுகிறார் என்கிறார் அகத்தியர்.  அந்த நதி சுழுமுனை நாடியில் ஓடும் குண்டலினி ஆகும்.  அந்த யோகியின் செயல்கள் பிறருக்குப் புரியாது. ஏனெனின் அவை அளவுக்குட்பட்ட விழிப்புணர்வின் எல்லையைக் கடந்தவை.  இவ்வாறு குண்டலினியின் அக்னி ஒரு தீபமாக, தீயாக, அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் காரணமாக இருக்கிறது. 

No comments:

Post a Comment