Tuesday 11 March 2014

73. Works by Konkanar

Verse 73
பரப்பினார் மூன்று காண்டம் முந்நூற்றை நூறு
பாடியதோர் நூலிலே சிரோமணிதான்
நிரப்பினார் ஐந்நூற்றில் சகல தொந்தம்
நீட்டினார் குதிரைகட்டி நிலைக்கச் சொன்னார்
அரப்பினார் அந்நூற்றில் குழந்தையாலும்
அவர் நூலைப் பார்த்திடவும் வாதம் ஞானம்
மறைப்பில்லாப் போகும் ஐயா அவர்தான் வாக்கு
மாணிக்கம் கடைந்து வைத்த மனிதனாமே

Translation:
He spread the three kāndam, three hundred and five hundred
An expert in the work he composed
Filled in the five hundred all the duality
He extended it and made it firm by tying the horse
He explained in the hundred, even a child
Who reads his book will understand vāda jnana
It will become very clear, Sir, his words
Are rubies, he is a man refined (for good qualities).

Commentary:
Some of the works by Konkanar are
Konkanavar vāda kāviyam 3000, Konkanavar mukkāndam- 1500, Kondanavar tanigunam 200, Konkanavar vaidyam 200, Vāda sutram 200, Dhandkam 120, Jnana chaitanyam 124, Sarakku vaippu 111, Karpa sutram 100, Vālaikkummi 100, Jnana mukkānda sutram 80, Jnana venba sutram 49, Ādi antha sutram 45, Muppu sutram 40, Urpatthi jnanam 21, Suddha jnana-16, konkanavar meijnanam 13, konkanavar thirumandira jnanam 12, konkanavar kshutchatherisana jnanam 6.

Agatthiyar says that Konkanar’s works are simple to understand that even a child can learn about jnana.  He is mentioning that in the five hundred verses of the mukkaandam (3X500) Konkanar has discussed the breathing techniques.  The horse referred to here is the breath.  Controlling the breath and making the inbreath longer, to twelve inches as mentioned before, is referred to as tying the horse and extending. 

கொங்கணர் இயற்றிய சில நூல்கள் கொங்கணர் வாதகாவியம் 3000, கொங்கணர் முக்காண்டம் 1500,  கொங்கணர் தனிக்குணம் 200,  கொங்கணர் வைத்தியம் 200, கொங்கணர் வாத சூத்திரம் 200, கொங்கணர் தண்டகம் 120, கொங்கணர் ஞான சைதன்யம் 109, கொங்கணர் சரக்கு வைப்பு 111, கொங்கணர் கற்ப சூத்திரம் 100, கொங்கணர் வாலைக்கும்மி 100, கொங்கணர் ஞான முக்காண்ட சூத்திரம் 80, கொங்கணர் ஞான வெண்பா சூத்திரம் 49, கொங்கணர் ஆதி அந்த சூத்திரம் 45, கொங்கணர் முப்பு சூத்திரம் 40, கொங்கணர் உற்பத்தி ஞானம் 21, கொங்கணர் சுத்த ஞானம் 16, கொங்கணவர் சூட்சதெரிசன ஞானம் 6, கொங்கணவர் திருமந்திர ஞானம் 12, கொங்கணவர் மெய்ஞானம் 13

கொங்கணரின் பாடல்கள் ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும் அளவுக்கு எளியதாக உள்ளன என்று அகத்தியர் பாராட்டுகிறார்.  இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள குதிரை பிராணனாகும்.  மூச்சுப்பயிற்சியினால் பிராணனை நீட்டிப்பதை (இதை முன்னமே பார்த்தோம்) குதிரையைக் கட்டி நீட்டிப்பதாக அகத்தியர் கூறுகிறார். 

No comments:

Post a Comment