Verse 104
தேறினவர்
ரா
(நா)யனடா இவன் அல்லோ யோகிக்கெல்லாம்
நடுநின்ற
திறத்தாலே அந்த காட்சி
ரா(நா)யனடா
இவள் அல்லோ மகத்தாம் யோகி
நான்முகத்தோன்
சொன்னபடி வெளியாய்ச் சொன்னேன்
ரா(நா)யனடா
இவனல்லோ மௌன யோகி
நல்வினையும்
தீவினையும் தீர்த்த யோகி
ரா(நா)யனடா
இவனல்லோ வாசி யோகி
நடுநின்ற
சுடர்மணியின் நன்மை தானே
The expert
Translation:
He is the king, isn’t
he, for all the yogis
Because of his
capacity to remain in the middle, that scene
He is the king, isn’t
he, the supreme yogi
I revealed this, the
way that the fourfaced One told me
He is the king, isn’t
he, the yogi of silence
The yogi who has exhausted
good and bad karma
He is the king, isn’t
he, the vāsi yogi,
The good fortune of
the effulgent gemstone that remains in the middle.
Commentary:
Agatthiyar praises
a yogi who has attained the supreme state through kundalini yoga in this verse. He calls such a yogi a the king among the
yogis, the one who remains in the middle- in the middle ground free from
polarities, the one who remains in the sushumna nadi that is in the
middle. Agatthiyar says that the
four-faced one conferred this knowledge upon him. Typically Brahma is called the four faced
one. Here Agatthiyar may be referring to
Bhairava, who is usually shown with four faces.
Bhairava’s four faces represent the four states of consciousness. He may
also be referring to the five faced Sadasiva whose fifth face is not shown as
it is supposed to be formless. Agatthiyar
says that such a supreme yogi is the silent one or the one who practiced the
yoga of silencing everything, mind, body and soul. He has exhausted all his karmas, both good
and bad. It is the karma that causes
further births. This yoga has eternal
life unbound by karmic influence. He is
the yogi of vasi yogam, the goodness of the effulgent mani or gemstone that
remains in the middle.
குண்டலினி
யோகத்தின் மூலம் பரவுணர்வு நிலையை அடைந்த ஒரு யோகியை அகத்தியர் இப்பாடலில்
பெரிதும் சிலாகிக்கிறார். முந்தைய பாடலில் அவரை அரசர் என்று அழைத்த அகத்தியர் இப்பாடலிலும்
அதே அடைமொழியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.
யோகிகளுள் ராஜனான அந்த யோகி, நடுவில் இருக்கிறார் என்கிறார்
அகத்தியர். நடுவு நிலை என்பது எவ்வித
எதிர் துருவங்களும் இல்லாமல் இருப்பது, விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், போன்றவை
இல்லாமல் இருப்பது. அந்த யோகி நடுவு
நிலையான சுழுமுனை நாடியில் தனது விழிப்புணர்வை இருத்திக் கொண்டு இந்த
எதிர்துருவங்களைத் தவிர்த்தபடி இருக்கிறார்.
இந்த நிலையைப் பற்றித் தான் கூறியவை அனைத்தும் தனக்கு நான்முகன் கற்றுத்
தந்தது என்கிறார் அகத்தியர். பொதுவாக
நான்முகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும்.
ஆனால் சைவ சம்பிரதாயத்தில் பைரவர் நான்கு முகங்களைக் கொண்டவராகக்
கருதப்படுகிறார். அந்த முகங்கள் நான்கு
விழிப்புணர்வு நிலைகளைக் குறிக்கும். பரவுணர்வு நிலையை பைரவர் என்று காஷ்மீர
சம்பிரதாய ஆசார்யர் அபிநவ குப்தர் பல இடங்களில் அழைப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு குண்டலினி யோகத்தில் தேர்ந்த யோகியை
அகத்தியர் மௌன யோகி, தனது புண்ணிய பாவங்களைக் கடந்தவர் என்கிறார். கர்மங்களே ஒருவருக்குப் பிறவியைக் கொடுக்கின்றன. இவ்வாறு தனது கர்மங்களைக் கடந்த யோகி காலத்தை
வென்றவர், பிறப்பிறப்பற்றவர். இந்த வாசி யோகி பெறும் நன்மைகள் அனைத்தும் அவர்
நடுவு நிலையான சுடர்மணியில் நிலைத்திருப்பதால் ஏற்படுகின்றன என்கிறார் அகத்தியர்
பெருமான்.
where to get all this gyana in book form ?
ReplyDeleteit is not published yet
ReplyDelete