Verse
62
பாரப்பா
புண்ணியர்க்கு நலப்பெண்டாகும்
பாவியர்க்குக்
குணம் கெட்ட மடந்தை என்றும்
சேரப்பா
அவள் தனக்குப் புதல்வன் என்றும்
செத்தவர்க்குக்
கொள்ளிகுடம் உரிமை என்றும்
பேரப்பா
கபடமதாய் வேதம் சேர்த்து
புலத்தியனே
தெரியாமல் மறைத்து வைத்தார்
ஆரப்பா
அவன் சமத்தோ உலகம் ஆச்சு
அரகரா
என் சமத்தோ அருமை தானே
Translation:
See
son, good souls will get good wives
For
the evil, wife with bad qualities
Associate
with her and you will get a son through her
Funeral
fire and the water pot for the dead
See
son, by adding the deceit as Veda
Pulatthiya!
They kept it concealed
Hey! His smartness became the world
Araharā
my smartness is special isn’t it!
Commentary:
Agatthiyar
describes other points of deceit. People
have established assumptions that good people will get good wives and those who are evil will get only evil
ones. Through a wife one gets a son who has
the sanction to perform death rites such as starting the funeral pyre with the
fire and carrying a broken pot during the funeral procession.
Agatthiyar says that people have created all these fallacies saying that these ideas are the essence of Veda, knowledge. They have smartly
concealed the truth. Their smartness is
seen as the worldly happenings while Agatthiyar’s smartness is very special.
அகத்தியர்
பிற ஏமாற்றுக்களை இப்பாடலில் கூறுகிறார். நல்லவனாக ஒருவன் இருந்தால் அவனுக்கு நல்ல
மனைவி கிடைப்பாள் அவ்வாறு இல்லாதவனுக்கு குணம் கெட்ட பெண்டாட்டி தான் அமைவாள். அதாவது "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!" அவளுடன் அவன் கூடினால் ஒரு மகன்
பிறப்பான். இந்த மனிதன் இறக்கும்போது
அம்மகன் அவனுக்குக் கொள்ளி வைப்பான் உடைந்த சட்டியை எடுத்துக்கொண்டு மயானத்துக்கு செல்வான் என்றும் எண்ணற்ற சடங்குகளை ஏற்படுத்தி, இவற்றைத்தான் வேதம் போன்ற பழம் நூல்கள் கூறுகின்றன என்று சொல்லி, உண்மையைக்
காணவிடாமல் மறைத்திருக்கின்றனர் என்கிறார் அகத்தியர். இத்தகைய தவறான கொள்கைகளின் அடிப்படையில் உலகம்
இயங்குகிறது. ஆனால் தனது சமத்து மிக விசேஷமானது என்று அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment