Thursday 27 March 2014

107. Lalana or lalaata cakra- the secret cakra

Verse 107
ஆக்கினை வீடு
உண்ணப்பா ஆக்கினையில் லாட பீடம்
உத்தமனே திலகம் இடும் சாய்கை சாய்கை
பண்ணப்பா மௌனம் இட்ட பிறை ஐங்கோணம்
பதிவாக நடுவிருந்தாள் சதா நந்தி மணியும்
கண்ணப்பாஅகாரமடா அதனுள் நிற்கும்
கருத்தாக மனோன்மணியும் கண்டு கொள்ளு
எண்ணப்பா விபூதியை உத்தளமாய்ப் பூசி
இருந்திட்டால் பிசகாமல் ராஜ யோகம்

Translation:
Consume in the ajna, the lāta peetam
The supreme one, its place is the place where the mark is adorned on the forehead
Perform silence, the sign is crescent and five angles
In the middle were Sadanandi and Mani
The eye, the akāra will remain within it
See Manonmani also carefully
Think son, adorning the sacred ash as a powder
If remained, it is for sure Rajayogam.

Commentary:
In this verse Agatthiyar talks about the lalāta peetam.  Jaganmohana Tarkalankara, a great authority on the tantra says, “There is a secret cakra, the lalana cakra which is above the visuddhi in the palatine region. After leaving the visuddhi cakra the kundalini will pass through this secret cakra and reach the ajna cakra”.  Jaganmohana Tarkalankara describes this cakra to be twelve petalled and sixty four petalled.  The twelve-petalled is red in color while the sixty four petalled is shinning white in color.  There is a circular region of red color termed ghantika in the lotus within which lies the moon’s power (Chandra kala) which oozes nectar.  This region (bhumi) is called amrita sthali which shines like a million moons and full of nectar.  This region is also called the ghantika lingamularandra or uvular point.  This cakra is also known as talu cakra.  This is a very important point of concentration.  The kechari mudra or tongue lock is practiced here which makes the nectar flow down. Agatthiyar does not talk about the tongue lock but he says that one has to adorn the sacred ash powder.  Knowing that Agatthiyar is well known for his treatises on medicine one wonders if he has described a special method of preparation of the sacred ash that would accomplish this mighty feat. One also wonder whether the term ‘pidari kandam’ he uses in verse 105 refers to this kandika only.

இப்பாடலில் அகத்தியர் லலாட சக்கரத்தைப் பற்றிப் பேசுகிறார்.  ஜகன்மோகன தந்திராலங்காரம் என்னும் மிகப்புகழ் பெற்ற நூல், “விசுத்திக்கு மேல் உள்நாக்கு இருக்கும் பகுதியில் லலனா என்றொரு ரகசியமான சக்கரம் உள்ளது.  விசுத்தி சக்கரத்தை விட்டு குண்டலினி இந்த ரகசிய சக்கரத்தைக் கடந்து ஆக்ஞா சக்கரத்தை அடைகிறது” என்று கூறுகிறது.  அதே நூல் இந்த லலனா சக்கரத்தை பன்னிரண்டு இதழ்களைக் கொண்டது என்றும் அறுபத்து நான்கு சக்கரங்களைக் கொண்டது என்றும் கூறுகிறது.  பன்னிரண்டு இதழ்களைக் கொண்டதாக இது இருக்கும்போது இதன் நிறம் சிவப்பு.  அறுபத்து நான்கு இதழ்களைக் கொண்ட தாக உள்ளபோது அது ஒளியுடன் கூடிய வெண்மை நிறத்தை உடையதாக இருக்கிறது.  கண்டிகா என்னும் பெயரையுடைய இதழ்களின் மத்தியில் உள்ள தளத்தில் சந்திரனின் கலை உள்ளது.  அதிலிருந்து அமிர்தம் ஊறுகிறது.  இந்த பூமி அமிர்தஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.  ஆயிரம் நிலவுகளைப் போல ஒளிரும் இவ்விடத்தில் அமிர்தம் தோன்றுகிறது.  அதன் மற்றொரு பெயர் கண்டிக லிங்க மூலரந்த்ரா என்பது.  இந்த சக்கரம் தாலு சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த புள்ளி மனத்தைக் குவிக்க மிக முக்கியமானது.  இங்கிருந்து அமிர்தத்தை ஊறச் செய்ய கேசரி முத்திரையை ஒரு யோகி பிரயோகிக்கிறார். 


இப்பாடலில் அகத்தியர் கேசரி முத்திரையைப் பற்றிக் கூறாமல் விபூதியை நெற்றியில் பூச வேண்டும் என்கிறார்.  அகத்தியர் ஒரு தத்துவ ஞானி மட்டுமல்லாமல் சித்த வைத்தியரும் கூட.  ஒருவேளை அவர் இந்த அமிர்தத்தை ஊறச்செய்ய ஏதேனும் பஸ்ம முறையைக் கூறியிருப்பாரோ என்று தோன்றுகிறது. பாடல் 105 ல் கூறிய பிடரிக் கண்டம் என்பது இந்த கண்டிகாவைதான் குறிப்பதாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment