Sunday 9 March 2014

69. The rare feat of Konkanar in Agatthiyar's words

Verse 69
கடினமடா வெகுகடினம் கண்டிப் பையா
காற்றில் இட்ட பஞ்சில் அனல் கலக்கு மாப்போல்
துடினமடா அவர் துடுக்கைச் சொல்லப் போமோ
சொரூப மணிக் குளிகை செய்த திறத்தினாலே
அடினமடா அண்டரண்டம் ஆடித் தீர்ந்தால்
அகாரமுடன் உகாரமதால் அடங்கித் துள்ளும்
குடினமடா கொங்கணர்க்குக் குறிப்போ மெத்த
கூறரிது கூறரிது கூறினோமே

Translation:
Hard, very hard for sure Son!
Like the fire mixing with the cotton placed in the wind
It is so fast, is it possible to talk about his speed?
Due to his ability of the sorupa mani kuligai/the magical potion of mani                                                                                                                    of the original form.
When the play of all the universes is completed
They will abide by akara and ukara and jump.
It is under the command of Kongana
Difficult to recount, difficult to recount, I still spoke about it.

Commentary:
Agatthiyar says that the speed with which Konkanar accomplished his feat of vāsi yogam was like that of cotton placed in air catching fire.   It is instantaneous.  He achieved it with the help of the a magical potion, the sorupa mani kuligai (sorupa- original form, mani- gem, kuligai- potion).  When Konkanar attained this siddhi he realized that the entire manifested world is the expression of akara and ukara, the Supreme Being and his power to create.  With this siddhi a yogin travels through all the universes by a method called "kevuna maargam".  He sees that everything abides in the akara and ukara.  Thus everything was under Konkanar’s control.  Agatthiyar remarks that experience is very difficult to be verbalized, to recount.


கொங்கணர் எவ்வாறு வாசியோக சித்தியை அடைந்தார் என்று கூறும் அகத்தியர் அதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.  எவ்வாறு காற்றில் வைக்கப்பட்ட பஞ்சு நெருப்புப் பற்றுகிறதோ அதைப்போல கொங்கணர் தனது பிராணனை வாசி யோகத்தின் மூலம் சுழுமுனையில் செலுத்தி மீண்டார்.  அதன் பயனாக உலகம் முழுவதும் அகார உகாரத்தால் ஆனது, அனைத்தும் அகார உகாரத்தில் அடங்குகிறது என்பதை உணர்ந்தார்.இந்த சித்தியால் ஒரு யோகி எல்லா அண்டங்களுக்கும் கெவுன மார்க்கமாகப் பயணித்துத் திரும்புகிறார். அனைத்தும் அவரது விருப்பத்துக்குக் கீழ்ப்படிபவையாகின்றன.  அதை வார்த்தைகளால் கூறுவது கடினம் ஆனாலும் தான் அதை விளக்கியுள்ளேன் என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment