Verse
60
இல்லை
என்று போனதினால் தன்நூல் தன்னை
இருத்தினான்
வேதமொழி தவரொட்டாமல்
தொல்லை
என்ற கர்மம் என்றும் தர்மம் என்றும்
சுற்றனாய்ப்
பிறப்பன் என்றும் சிலது கோடி
தில்லையிலே
பேறுபெற்றார் மூவர் என்றும்
சிவசிவா
அறுபத்து மூவர் என்றும்
சொல்லையிலே
வெகுவிதமாய் விநோதங் காட்டி
சுகங்காட்டி
லீலையிலே தொடுத்திடானே
Translation:
As
there was no one to question them, he established his book
The Veda, without fail
As
dharma and the troublesome karma
As
millions would be born repeatedly
As the
triad got the boon in Thillai
Siva
sivā! as sixty three men (nayanmar)
Expressing
such unusal and strange things
Showing
the pleasure he directed them towards play.
Commentary:
Agatthiyar
says that Vyasa and others spread several stories about what is dharma, what is
karma, who gets liberation and several such vague and strange things. Thus they made people engage in worldly life, the play, as no one was inquiring the purpose and the principles that their books conveyed. As no one was interested in their essence, all the knowledge became texts on karma, dharma, causes for birth, as the holy triad, their episodes, as the nayanmars their life history, etc. They lost their significance and became mere play.
உட்பொருளை அறிந்துகொள்ள விருப்பம் கொண்ட ஒருவரும் இல்லாததால் வேதநூல்கள் உலகில் எது தர்மம், எது தொல்லை தரும்
கர்மம், பிறப்பு எவருக்கு, எவ்வாறு எதனால் ஏற்படுகிறது, யார் தில்லையில் பேற்றைப் பெறுவார், அறுபத்து மூவர் யார் அவர்களைப் பற்றிய கதைகள் என்று வெறும் கதைப் புத்தகங்களாக மாறிவிட்டன. விளையாட்டுப் பொருட்களாக லீலைகளாக மாறிவிட்டன. அவற்றின் உட்பொருளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, அவற்றை அறிந்துகொள்ள முயலுவதில்லை. அதனால் அவை வெறும் கதைப் புத்தகங்களாயின என்கிறார் அகத்தியர்.
Vanakkam aiyya.. agathiyar kootrin padi mahabharatham, ramayanam anaithum thathuvangala? Unmaiyil nadanthavaigal ilaya? Ade pol arubathu moondru naayan maar kathaiyum thathuvangal thaano?
ReplyDeleteஅகத்தியர், இராமாயணம் மகாபாரதம் ஆகியவை கதைகள் மட்டுமே என்று கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ராமாயணத்தில் ஒரு அகத்தியர் காணப்படுகிறார். அவர் நர்மதா ஆற்றங்கரையில் ஒரு ஆஸ்ரமத்தில் யாகங்களை செய்துகொண்டிருந்தார். இங்கு அகத்தியர் கூறுவது என்னவென்றால் ராமாயணத்தை ஒருவர் பல நிலைகளில் புரிந்துகொள்ளலாம். உலக அளவில் அது தசரத புத்திரனைப் பற்றிய கதை. எவ்வாறு உலக வாழ்வை வாழ்வது என்பதற்கான வழிமுறையைக் காட்டுவது. மனதளவில் இராமாயணம் வேறொரு பொருளைக் குறிக்கிறது. தசரதன் என்பவன் பத்து இந்திரியங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். ராமன் என்பவன் பரவுணர்வு. அவனைப் பிரிந்து சீதை காட்டில் இருப்பது என்பது சிவனை பிரிந்த சக்தி மூலாதாரத்தில் இருப்பது. அனுமன் குருவின் நிலையில் இருப்பவன். அவன் சீதையை ராமனுடன், அதாவது சக்தியை சிவத்துடன் சேர்க்கிறான். அல்லது ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைக்கிறான். இவ்வாறு இந்த ராமாயணத்தின் உட்பொருளையும் ஒருவர் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை வெறும் கதையாகப் படித்துவிட்டுப் போகக் கூடாது என்று அகத்தியர் கூறுகிறார்.
ReplyDeleteநாயன்மார்களின் வரலாறு அவ்வாறு அல்ல. அவர்கள் சிவ பக்தர்கள், சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்.
மிக்க நன்றி
ReplyDelete