Monday 24 March 2014

100. Brilliance of million suns- koti surya prakasa

Verse 100
வீடப்பா அதற்குமேல் பன்னிரெண்டங்குலந்தான்
விசாலமாய்ச் சக்கரம்போல் இரண்டிதழாய் நிற்கும்
தேடப்பா ஆக்கினையாம் பூமி தன்னில்
தெரிசிக்க அகாரம் என்ற அக்ஷரத்தில்
நீடப்பா சதாசிவனும் மனோன்மணியுந்தாயும்
நீங்காமல் வாசமதாய் இருப்பார் பாரு
கூடப்பா அவர்கள் நிறம் ஏகம் ஆகும்
கோடானுகோடி ரவி வீசும் பாரே

Translation:
There is a house above, son, at twelve inches
Like a wide wheel, it will remain with two petals
Search, Son, to attain the vision in the land of ajna,
In the letter akara
It is the place of Sadasiva and Mother Manonmani
They will remain there forever, as their residence
Merge with them, their colour is unison (samarasa)
It will shine like millions of Sun.

Commentary:
This verse paints a beautiful picture about the ajna cakra.  Agatthiyar says that the ajna cakra is very wide, like a wheel with two petals.  It is the residence of Sadasiva and Manonmani who is none other than Kundalini Sakti.  Agatthiyar advises Pulatthiyar to contemplate upon the akara, to search in the akara, to attain their divine vision.  He says that their hue is one, or they both have the same hue. Agatthiyar may be referring to the absence of any form of duality at this cakra.  Agatthiyar adds that their effulgence is like the brilliance of millions of suns.

Shyam Sundar Goswami’s book Laya yoga has a detailed explanation of kundalini, the cakras and the yoga.  He mentions the names that Kundalini sakti attains when she passes through different cakras in the body.

Kundalini that lies dormant in the muladhara with three and a half coils is called kula kundalini.  When she extends from muladhara to anahata, shining like molten gold is called fire kundalini.  When she extends from anahata to ajna shining like the brilliance of million suns, she is called sun kundalini.  When she extends from ajna to the end of sushumna with the luster of millions of moons, she is called moon kundalini.  The kundalini beyond the sahasrara is the state of supreme consciousness.  She is then the turiya kundalini.

இந்த அழகான பாடல் ஆக்கினை என்னும் ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கிறது.  புருவ மத்தியில் உள்ள இச்சக்கரத்தை அகத்தியர் விசாலமான சக்கரம் என்கிறார்.  அது இரு இதழ்களைக் கொண்ட தாமரை மலராகக் குறிக்கப்படுகிறது.  அதன் அதிதேவதைகள் சதாசிவனும் அன்னை குண்டலினி சக்தியும் ஆவர்.  அகத்தியர் இந்த சக்கரத்தில் அவர்கள்இருவரது தரிசனத்தையும் பெற அகார அக்ஷரத்தை தியானம் செய்யுமாறு, அவர்களை அதில் தேடுமாறு, கூறுகிறார். அகத்தியர் அவர்கள் இருவரும் ஒரே நிறத்தை உடையவராக அல்லது ஒரே நிறத்தைக் கொண்டவராக இருப்பர் என்கிறார்.  ஆக்ஞா சக்கரத்தில் எல்லாவித இருமைகளும் விடைபெற்றுவிடும்.  இடை மற்றும் பிங்கலை நாடிகள் காலத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை,  இந்த இரு நாடிகளும் இந்த சக்கரத்தில் முடிவதால் இந்த சக்கரத்தை அடைந்த யோகி காலத்தைக் கடந்துவிடுகிறார்.  அவர்களது தேகம் யோக தேகத்திலிருந்து சித்த தேகமாகிவிடுகிறது. 

ஷியாம் சுந்தர் கோஸ்வாமி என்பவர் எழுதிய லய யோகம் என்னும் புத்தகத்தில் குண்டலினி எங்கே இருக்கிறாள் என்பதைப் பொருத்து அவளுக்குப் பலவிதமான பெயர்கள் உள்ளன என்கிறார்.  அவள் மூலாதாரத்திலிருந்து அனாஹதம் வரை நீளும்போது அக்னி குண்டலினி எனப்படுகிறாள்.  அனாஹதத்திலிருந்து ஆக்ஞா வரை நீளும்போது சூரிய குண்டலினி எனப்படுகிறாள்.  அவள் அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் இருக்கிறாள்.  அவள் அங்கிருந்து சஹஸ்ராரம் வரை நீளும்போது சந்திரனின் தண்மையைக் கொண்டவளாக சந்திர குண்டலினி எனப்படுகிறாள்.  சஹாஸ்ராரத்தைக் கடந்து தூய விழிப்புணர்வாக அவள் விளங்கும்போது அவள் துரிய குண்டலினி என்ற பெயரைப் பெறுகிறாள். 

No comments:

Post a Comment