Sunday 16 March 2014

85. People propagate hypocrisy, Agatthiyar's sarcasm

Verse 85
தேசத்தோர்க்கிது வேணும் இல்லாவிட்டால்
சிவசிவா சமையத்தோர் பிழைக்கமாட்டார்
பூசித்தால் பார்த்திலிங்கம் பூஜை செய்வார்
பொல்லாத பசிவந்தால் சமையம் வேண்டார்
ஆசித்தால் மங்கையர்மேல் ஆசை கொள்வார்
அயல்வீட்டில் பிறந்தவளே வாடி என்பார்
ஓசித்தால் உள்வீட்டுப் பெண்கள் என்பார்
ஓஓஓ சமைய மதம் உலகத்தோரே

Translation:
The people of the land need this. Otherwise
Sivasivā! Those who call themselves religious will not survive
They will worship the Lingam when they wish so
When they are afflicted with  horrible hunger, they will shun religion
When desire arises they will lust women
They will call, “Hey! The one born in another’s house, come here”
If they do not agree, they will say, “females of the inner house”
O!O!O! The worldly people crazed by religion.

Commentary:
Agatthiyar very sarcastically says that people propogate these misconceptions because only then those who peddle religion will survive.  People think of religion when they are satisfied.  However, when they are hungry, when they long for a benefit, they will casually forget all about worship.  When desire arises they will lust women who are not from their family.  If the women complain they will say, “these must be women from austere houses”.  Agatthiyar laments with disgust about the worldly people who are so crazed by religion.


மேற்கூறிய தவறான கருத்துக்கள் உலகோருக்கு வேண்டியிருக்கின்றன.  இல்லாவிட்டால் சமயத்தைக் காப்பவராகத் தம்மை அறிவித்துக்கொள்வோருக்கு வேலையில்லாமல் போய்விடும் என்று அகத்தியர் நையாண்டி செய்கிறார்.  பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பதைப் போல தனது எல்லாத் தேவைகளும் தீர்ந்தபோது மக்கள் பூஜைகள் செய்வர்.  பசி வந்திட்டால் லிங்கத்தை மறந்துவிடுவர்.  ஆசை மேலெழுந்தால் “வாடி” என்று அடுத்த வீட்டுப் பெண்ணைக் கூப்பிடுவார்.  அவர் வராது முறைத்தால் அவர்கள் “ஆசார வீட்டுப் பெண்கள் போலும்” என்று சமாதானம் கூறுவார். அல்லது அவர்களை வீட்டினுள் அடக்கிவைப்பர்.  சமயத்தினால் மதம் பிடித்த உலகத்தோரின் இத்தகைய செய்கைகளை அகத்தியர் மனவருத்தத்துடன் பரிகாசிக்கிறார்.

2 comments:

  1. Can You Kindly Expand the English Translation what Agatthiyar meant by saying.1).those who call themselves Religious will not survive.(translation)
    2)...Because only those who Peddle Religion will survive...(Commentary).

    ReplyDelete
  2. Agatthiyar says that those who perform religious services saying that they can make people get certain benefits will not survive or exist. for example a priest will promise that by performing a special service one will get a male child. Such people will not survive or lose their livelihood if people realize the truth about how a person gets a male child or a female child.

    ReplyDelete