Verse 188
பொய்யாருடன் பேசாமை நல்ல
அனுபோகம்
அம்பானால்
தட்டுருவி அகலப் போகும்
அவர்
வசனம் அம்புகணை அண்டம் கொல்லும்
கொம்பானால்
புளிய மரக் கொம்பு கொம்பு
கோகோகோ
முருங்கையிது கொம்போ அல்ல
சம்பாவை
பயிர்இட்டோன் முகத்தைப் போல
சாத்திரமும்
இருக்காட்டி அருளை ஈவார்
நம்பாமல்
போனாலும் அடியைப் பற்றி
நடுக்காட்டில்
தனிய வைத்துத் திட்டுவாரே
Translation:
If
it is an arrow, it can scrape through the plate and miss the target
His
statement, the weapon arrow, it will kill the universe (pierce the universe)
If
it is a branch it is the branch of a tamarind tree (special one)
O!O!
O! this is drumstick tree, not a branch
Like
the face of one who has sown the samba paddy
Sastra
and if not grace, he will bestow
If
it is not believed, holding the base
Will
chastise in the middle of the forest, in private.
Commentary:
This
verse talks about the lengths to which a good guru will go to make a worthy
person get wisdom. The words of such a wise
one is like an arrow. Even an arrow may miss its target but the words of the
wise will kill the universe (make duality disappear/ pierce the universe). His words are elaborate like a tamarind tree. It is straight like a drumstick tree bark. He
will grant the worthy person all the sastra or at least his grace. If the person does not believe what he hears,
he will take hold his base (may be muladhara? Is it foot?) he will chastise him
in private, in the middle of a forest holding him alone.
தகுதி
வாய்ந்த ஒருவர் வந்தால் ஒரு நல்ல குரு அவனுக்கு ஞானத்தை அளிக்க எந்த அளவுக்கு
முயலுவார் என்று இப்பாடல் காட்டுகிறது.
இந்த குருவின் வார்த்தை ஒரு அம்புக் கணையைப் போன்றது. அம்பாவது தனது இலக்கை அடையாமல் வழி தவறலாம்.
ஒரு குருவின் வார்த்தை ஞானம் என்னும் இலக்கைத் தவறவிடவேவிடாது. அது புளிய மரத்தின் கிளையைப் போல பரந்து
விரிந்தது. முருங்கை மரத்தைப் போல
நேரானது. அந்த குரு அம்மகனுக்கு எல்லா
சாத்திரங்களையும் அருளுவார். அது
இல்லாவிட்டாலும் தனது அருளையாவது தருவார்.
அம்மனிதன் அக்குருவையும் அவர் கூறுவதையும் நம்பாவிட்டால் அவனைத் தனியாக
அழைத்துப் போய் அறிவு ஏற்படுமாறு திட்டுவார்.
No comments:
Post a Comment