Verse 144
வேடமிட்டு
கமண்டலமும் தெண்டும் தூக்கி
விரித்த
புலித் தோல்உடுத்தி விபூதி பூசி
ஆடம்
இட்டு ருத்திராக்ஷமாலை பூண்டு
அறையில்
வெள்ளிச் செம்பிலே கொலுசு பூண்டு
நாடம்
இட்டுச் செவியில் செம்புத் தோடு பூண்டு
நான்
அறிவேன் வாதமொடு ஞானம் என்று
மாடம்
இட்ட முட்டைகளுக்குபதே சித்து
வசப்பட்டால்
தெரியாமல் சண்ணுவானே
Translation:
Adorning a garb
holding a kamandalam and a yoga stick
Wearing the
tigher skin and smearing sacred ash,
Displaying pomp,
wearing the rudraksha beads
With a chain of
silver in the waist, a copper anklet,
I know wisdom
along with breath control,
For the egg
laid in a niche, when mystical accomplishments
Occur, they
will fight without realizing it.
Commentary:
This verse is
about a false guru who is complete with all the external paraphernalia, the
water pot, the yogic stick, the tiger skin dress, sacred ash on the body, the
copper anklet, silver waist belt etc.
This person has all the trappings of a guru but lacks the wisdom. He will claim that he is an expert of breath
control and knowledge. Agatthiyar calls
him the egg laid in the niche. Just like the egg that does not know that it contains
a lifeform within this man does not know his potential, that he is Divine. He will claim that he is an expert but will
not even know it when siddhis occur to him.
He will fight without realizing it.
இப்பாடல்
ஒரு யோகி என்ற வெளி வேஷத்தைப் பூரணமாகக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிக்
கூறுகிறது. இந்த மனிதன் கமண்டலம், தண்டம்,
புலித்தோல், விபூதி, இடையில் வெள்ளி அரணாக்கயிறு, காலில் செப்பு காப்பு என பூரண வேஷம் போட்டவர். தனக்கு பிராணாயாமமும் ஞானமும் உண்டு என்று
அறிவிப்பவர். இந்த மனிதரை மாடத்தில் இட்ட
முட்டை என்கிறார் அகத்தியர். ஒரு முட்டைக்கு
தன்னுள் ஒரு உயிர் இருக்கிறது என்பது தெரிவதில்லை. இந்த மனிதருக்கும் தனக்குள் இறைமை உள்ளது
என்பது தெரிவதில்லை. இவருக்கு அரிய
சித்திகள் ஏற்பட்டாலும் அவருக்கு அது தெரிவதில்லை. அதை அறியாமலேயே அவர் பிறருடன் சண்டை
போடுகிறார்.
No comments:
Post a Comment