Thursday, 10 April 2014

150. The learned donkeys

Verse 150
கழுதை குருக்கள்
போச்சப்பா தெளிந்த குரு சொல்லாதாலே
பொய்யன்றி மெய் விரும்பாப் பாவத்தாலே
ஆச்சப்பா சமைய மதம் கொண்டதாலே
அலங்காரப் பேச்சுரைத்துத் திரிந்த தாலே
பேச்சப்பா ஆணவங்கள் விரிவினாலே
பிறந்தபதி அறியாத மகிமையாலே
காச்சப்பா சிவஞானம் அறியாதாலே
கற்றும் அவர் குருக்கள் எல்லாம் கழுதை தானே

Translation:
Gurus who are donkeys

It is lost, Son, as the Gurus with clarity did not talk about it
Due to the sin of desiring fallacy over truth
It became so due to religious fanatism
Due to roaming around uttering mere decorative speech
The speech due to expansion of the ego and pride
Due to ignorance about the glory of the locus of birth
Due to not knowing Sivajnanam
Even if they are learned, those gurus are only donkeys.

Commentary:

Agatthiyar calls those who waste their lives not knowing the true knowledge as donkeys.  They never heard it from a true Guru.  They prefer fallacy, they are mad with religious fervor, they engage in empty, showy talks and have fully expanded ego and pride.  They do not know their true locus, that they are supreme space.  They do not know sivajnanam.  Hence, in spite of learning all the texts they are still ignorant donkeys whose talk is only braying.


ஞானத்தைப் பெறாமல் தமது வாழ்க்கையைத் தொலைப்பவரை அகத்தியர் கற்ற கழுதைகள் என்கிறார்.  ஒரு தகுந்த குருவிடமிருந்து அவர்கள் அறிவைப் பெறவில்லை.  பொய்யையே விரும்பும் அவர்கள் சமய மதம் பிடித்து அலைபவர்கள்.  படாடோபமான பேச்சும் மிதமிஞ்சிய ஆணவமும் கொண்டு திரியும் அவர்கள் தமது உண்மையான பதியை, தாம் பரவெளி என்பதை, பரவுணர்வே தமக்குச் சரண் என்பதை அறியாதவர்கள்.  சிவஞானமற்ற அவர்கள் கற்றும் கழுதைகள் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment