Verse 162
காணப்பா
கருக்கடையும் குருக்கடைகள் எல்லாம்
காட்டுமடா
இந்த நூல் களங்கம் இல்லை
தோணப்பா
ஆயிரத்தைப் பந்தனம் பண்ணு
துன்மார்க்க
பிள்ளைகளை அடுத்திடாதே
சாணப்பா
வீண் அளக்கும் பயல்களோடே
சரியாக
நீ வசனம் சாற்ற வேண்டாம்
பாணப்பா
பானமதம் கொண்டோர் உண்டு
பார்த்து
நீ உருத்தெரிந்து அடுத்திடாயே
Translation:
See son, the shop of birth and the shop of guru
This book will show. There are no faults.
Think about it, process the thousand.
Do not go near evil people
Move finger span from those who talk about
unnecessary things
You do not have to correct them with a speech
There are those who are crazy about food and
drink
Seeing their true nature you refrain from
associating with them.
Commentary:
The terms ‘karukkadai’ means the shop of birth,
the muladhara from which one gets all kinds of life forms. It is said that one’s karma and samskara are
stored in the muladhara that creates various situations and experiences for the
one born. ‘Gurukkadai’ is the shop of
the guru or realization. This site is
the ajna that offers a variety of experiences for the yogi.
Agatthiyar tells Pulathiyar, “Process the
thousand”. The term used is ‘padanam’. This
is a special method of preparation where materials are incubated and allowed to
undergo transformation. Agatthiyar does
not want us to merely read the book but to let it get undergo processing within
us, that is, we should contemplate upon the topics and realize their
ramifications.
Then he tells Pulatthiyar to go away from evil people at least to a finger span length, ‘saan’. He tells Pulatthiyar to not waste his time arguing or talking with them trying to convince them what is right. Such people are not interested in knowing the truth. They are interested only in argument for argument sake. He also tells Pulatthiyar to go away from those interested in only food. ('paan' means bread, this term is used in Srilankan Tamil frequently. 'paanam' means drink). They also waste their lives in insignificant pursuits.

முதல்
வரியில் காணப்படும் ‘கருக்கடை’ மூலாதாரத்தைக் குறிக்கும். நமது கர்மங்களும் சம்ஸ்காரங்களும் மூலாதாரத்தில்
சேர்த்துவைக்கப்பட்டுள்ளன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இவையே நமக்கு பிறவியையும் வாழ்க்கையின்
அனுபவங்களையும் அளிக்கின்றன. குருக்கடை என்பது
ஆக்ஞா சக்கரம். அங்கு ஒருவருக்கு பல்வேறு
அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஒரு யோகி
பல்வேறு சித்திகளைப் பெறுகிறார். இந்த
ஆயிரம் குற்றமற்ற பாடல்களைப் படித்து பதனம் பண்ணுமாறு அகத்தியர் கூறுகிறார். பதனம் என்பது ஒருவிதமான தயாரிப்பு முறை. நாம் இந்தப் பாடல்களைப் படித்தால் மட்டும்
போதாது, அதை நினைவில் எப்பொழுதும் வைத்து அது நம்மை மாற்ற அனுமதிக்கவேண்டும்,
அதில் தரப்பட்டுள்ள விஷயங்களின் உட்பொருளை நாம் அறியவேண்டும். இதனை அடுத்து அகத்தியர் புலத்தியரிடம் வீண்
வம்பர்கள், தீயவர்கள், உணவே பிரதானம் என்று இருப்பவர்கள் ஆகியோருடன் தொடர்பு
வைத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார். (பாண் என்னும் சொல் ரொட்டியைக் குறிக்கும். பானம் என்பது திரவ உணவு)அது
வெட்டிப் பேச்சு, தீய குணங்கள், அல்ப விஷயங்களைத் தேடுதல் ஆகியவற்றை வளர்க்கும்.
No comments:
Post a Comment