Verse 161
தேறப்பா
புலத்தியனே நூலைக் கண்டால்
சீவன்போல்
காத்திரு நீ இந்த நூலை
கோறப்பா
காவியம்தான் இதுதான் ஐயா
குருநூலும்
இந்தநூல் கொள்ளைபோல
வேறப்பா
நூல் இல்லை கண்டு தேறு
வீணருடன்
சொல்லாதே மெய்தப்பாதே
தாறப்பா
கதலைகுலை கீழ்க்கண் போல
சகலசித்தும்
கைவசமாகும் காணே
Translation:
Become an expert Pulatthiya! When
you see this book
Protect it as your life /soul, you
seek
This book. This is the epic, this is it, Sir
This book is also gurunool/book of
wisdom, like a theft
There is no other book, see it and
become an expert
Do not talk to wastrels do not miss
the truth
Like the bunch of the kadali banana
turning downward
All the mystical accomplishments
(siddhi) will come under control, See.
Commentary:
Agatthiyar emphasizes the
importance of this book by telling Pulatthiyar to protect it like his
life. He says this is the epic, the complete
work, there is no other book like this, the book of wisdom. The next line may be ‘sellaadhe’ which means
do not go with them, or ‘sollaadhe’ do not tell it to the wastrels. Another interpretation is that even the words
of the wastrels cannot miss this truth, it is so clear, no one can twist
it. Agatthiyar mentions a down turned
bunch of banana fruit. The sahasrara is
depicted as a banana bunch by many siddhas.
This also refers to the pineal gland which secrets the divine nectar
which grants all the mystical accomplishments or siddhis.
இந்த
புத்தகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்தப் புத்தகத்தை அவரது உயிரைப்போல காக்கவேண்டும் என்று புலத்தியரிடம்
அகத்தியர் கூறுகிறார். இந்த நூல் ஒரு
காவியம் என்றும் இதைப்போல இன்னொரு நூல் இல்லை என்றும் இதுவே குரு நூல், ஞான நூல்
என்றும் அகத்தியர் கூறுகிறார். இதனை
அடுத்த வரிக்குப் பல பொருட்களைக் கூறலாம்.
‘செல்லதே’ என்பதை செல்லாதே (தப்பாதே யுடன் சேர்ந்திசைகிறது) என்று கொண்டால் வீணருடன் தொடர்பை
வைத்துக்கொள்ளாதே என்று பொருள். சொல்லாதே என்று
கொண்டால் அவர்களுக்குச் சொல்லாதே என்று பொருள்.
அல்லது வீணறது சொல் அதே மெய் தப்பாதே என்று கொண்டால் வீணரது சொற்களும்கூட
இதில் கூறுப்பட்ட உண்மையை மாற்றிக் கூற முடியாது,
இதில் குறிப்பிட்டவை அவ்வளவு தெளிவாக உள்ளன என்று பொருள். கீழ்காணும் கதலைகுலை என்பது கதலிவாழையின் குலை
என்று பொருள்படும். சஹாராரத்தை வாழைக்குலை
என்று பல சித்தர்கள் பாடியுள்ளனர். அந்த
சக்கரம் கீழ்நோக்கித் திரும்பி அமிர்தத்தை வடிக்கும். இந்த அமிர்தம் எல்லா சித்திகளையும்
அருளும். இதையே அகத்தியரும்
குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment