Sunday 20 April 2014

165. Like a stork waiting at the threshold...

Verse 165
நூலில் பொருள் அறியவும்
அறியாமல் சஞ்சரித்து உலகத்துள்ளே
அனைவோரும் தூஷணிப்பார் அறிந்து கொள்ளு
குறியாமல் போவாயேல் குருடாய்ப் போவாய்
குருநிஷ்டை தில்லாது குருட்டு வேடம்
பிறியாமல் உலகத்தே பறை செய்யாமல்
பொய் ஒன்றும் சொல்லாமல் அருளைத் தேடு
பறிவாசல் காத்து நின்ற கொக்கு போலப்
பாடலிலே பொருள் கண்டால் பொறுக்கிக் கொள்ளே

Translation:
To get knowledge from the book
Ignorantly roaming around in the world
Everyone will heap insults, know this.
If you go without noting you will become blind
The garb of a blind without contemplation upon the guru
Without leaving it, without announcing/ telling
Without lying search for the grace
Like the stork that waits at the threshold
Pick up the meaning if you see knowledge in the song.

Commentary:
This is a great verse which tells us how to gain knowledge from meijnanam.  Previously Agatthiyar told us to not merely read this book but to process it within.  Now he tells us how to gain knowledge from it.  He tells that one should not live in the world, merely roaming around it, without knowing about this book.  Such a life will only earn dishonor and insults.  It is like the life of a blind person as he does not see that which should be seen.  Contemplating upon the guru will remove this blindness as the Guru will show the wisdom.  Agatthiyar advises that one should remain with the quest for knowledge, never go away from the book, never talk about it to another or announce his meager knowledge he gained from the book to another.  One should never tell lies but to search for grace and wisdom in the book carefully like a stork waiting for the right fish.  When one realizes the wisdom found in the book one should grab it, pick it, collect it immediately.


இப்பாடல் மெய்ஞ்ஞானம் என்னும் இந்நூலிலிருந்து எவ்வாறு ஞானத்தைப் பெறுவது என்று கூறுகிறது.  அறிவற்றவராக ஒருவர் இவ்வுலகில் சுற்றிக்கொண்டிருந்தால் உலகத்தோர் அவரைப் பழிப்பர்.  இந்த நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை அறியாவிட்டால் ஒருவர் குருடுதான்.  குரு நிஷ்டை ஒன்று மட்டுமே இந்த குருட்டுத்தனத்தை விலக்கக்கூடியது.  அதனால் ஒருவர் இந்த நூலைவிட்டுப் பிரியாமல், இதில் உள்ளவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையைவிட்டுப் பிரியாமல், இந்த நூலைப் பற்றியும் தான் எவ்வளவு அறிவு பெற்றுள்ளோம் என்பதைப் பற்றியும் பேருரை நிகழ்த்தாமல் பொய் சொல்லாமல் அருளைத்தேடவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கைப் போல இந்த நூலில் தனக்கேற்ற ஒரு கருத்து தென்பட்டால் அதை உடனே பொறுக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment