Sunday, 6 April 2014

141. The impatient seeker

Verse 141
காணப்பா புலத்தியனே பூசை யோனே
காட்டு முன்னே கையிலாயம் வேணும் என்பான்
ஊணப்பா விரை போட்டால் முளைத்துக் காய்க்கும்
உலுத்தனவன் விரையிருக்கக் காய்தான் கேட்பான்
காணப்பா நெய்தல் அப்போ நெய்ய வேணும்
சாண் முழமாய் ஆயிரமாய் விசாலம் காணும்
தோணப்பா இது உலகர் அறியா உண்மை
சுற்றம் ஆயிரமுழமும் தாவென்பாரே

Translation:
See Pulatthiya!  The worshipful one!
He will say first show me, I want Kailasa,
If you plant the seed it will sprout and yield the vegetable
This wastrel, will ask for the vegetable while there is only the seed
See Son!  One should weave at the right for weaving
It will expand from a palm length to thousand yards
People of this world do not know this truth
They will say give me all the thousand yards right now. 

Commentary:
The impatient disciple seems to be an appropriate title for this person.  This man is in a hurry to attain realization. He is not willing to wait for the required time.  He is also not willing to do the needful.  He wants everything on a platter, right this minute!  He asks his Guru to show him Kailayam right away.  Kailayam refers to the state of supreme consciousness.  The sahasrara and the zone above it are called Kailaya in the Siddha parlance. Agatthiyar says that one should plant the seed and wait for it to grow into a plant that fruits.  One cannot ask for the fruit right away while it is still in the seed stage.  One should be willing to do the needful, weave at the time for weaving.  Only then the experience will gradually unfold, like the cloth going from palm length to thousand yards.  Agatthiyar says that people lack the patience and the willingness to perform the effort needed for realization.


இப்பாடல் ஒரு பொறுமையற்ற சீடனைப் பற்றிக் கூறுகிறது.  நம்மில் பலர் விரைவு உணவு, விரைவுப் பேருந்து என்பதைப் போல விரைவு ஞானம் என்ற ஒன்றைத் தேடுகின்றனர்.  அவர்களுக்கு ஞானத்தைப் பெறத் தேவையான பொறுமையும் முயற்சியும் இருப்பதில்லை.  விதையை விதைத்தால் அது வளர்ந்து செடியாகிக் காய்க்கும் வரை ஒருவர் பொறுக்கவேண்டும்.  அவ்வாறில்லாமல் இப்போதே இந்த நொடியே காயைக் கொண்டு வா என்றால் நடக்குமா?  ஒரு துணியைப் பொறுமையாக நெய்யும்போது சாண் நீளம் உள்ளது ஆயிரம் முழமாகிறது.  அதைப் பெற முயற்சி தேவை.  அவ்வாறில்லாமல் இப்போதே ஆயிரம் முழத்தையும் தா என்றால் சரியா!   இவ்வாறு பொறுமையும் முயற்சியும் தேவைப்படும் ஞானத்தை காலாயத்தின் காட்சியை இப்போதே காட்டு என்று இந்த பொறுமையற்ற மனிதர்கள் கேட்கின்றனர் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment