Wednesday 9 April 2014

148. When the leg circles the head...

Verse 148
வீண் பிறப்பு
காணப்பா இவன் கிரியை குருக்கள் ஆச்சு
கால் தலையை சுற்றறியாப் பாவத்தாலே
தோணப்பா இன்னம் ஓர் குருக்கள் செய்கை
சொல்லுகிறேன் புலத்தியனே சுளுவாய்க் கேளு
ஆணப்பா பிறந்தக்கால் இந்தக் கல்வி
அரிதரிது கற்கிறது கன்ம மெத்த
வீணப்பா உலகத்தில் பிறந்தும் என்ன
மெய்யான பதி அறிந்தால் முத்தி தானே

Translation:
                                                    Useless birth

See his action, Son, he became a guru
Due to the sin of not knowing the vital air circulating in the head
See the action of another guru’s action
I will tell you Pulatthiya, listen comfortably
I swear son, attaining this education
Is rarest of rare. All the karma
Are waste son.  What is the point in being born in this world?
If the true locus is known only liberation, isn’t it!

Commentary:
The term ‘kaal’ which means leg in normal expression means the prana or vital air.  Talai which means head in colloquial Tamil means sahasrara.  Thus, in line two, Agatthiyar refers to the vital air circulating through the sahasrara. He says that talking about karma and rebirth will then become a waste as the one who has attained this knowledge, one who knows his true locus will attain mukti.


இப்பாடலின் இரண்டாம் வரியில் உள்ள கால் என்பது பிராணனையும் தலை என்பது சஹாஸ்ராரத்தையும் குறிக்கும்.  கால் தலையைச் சுற்றுவது என்பது பிராணன் சஹாஸ்ரார்த்துக்குச் சென்று வருவதைக் குறிக்கிறது.  இந்த சித்தியை அடைந்தவர், உண்மையான அறிவைப் பெற்றவர், தனது உண்மையான இடத்தை அறிந்தவர் இனி பிறப்பது இல்லை. அவருக்கு முக்திதான் என்கிறார் அகத்தியர்.  

No comments:

Post a Comment