Verse 156
கெடுதியப்பா
புலத்தியனே இன்னங் கேளு
கேட்காமல் மறந்தை என்றால் சொல்வேன் ஐயா
படுதியப்பா
கலப்பானால் நெருப்புக் கூறு
பார்த்தவருக்கு வெகுசுளுவு இந்த நூலில்
தொடுதியப்பா
தொடுகுறியும் இதுவே காட்டும்
சுருட்டி வைத்த பாய் விரித்துப் போடும் இந்நூல்
அடுதியப்பா
பத்தியமும் கருவும் சொல்லும்
அரகரா வாதமொடு கவிதான் சொல்லே
Translation:
It is harmful Son,
Pulatthiya, listen some more
If you forget to
hear I will tell you
If it mixes it is
difficult son, it becomes the fire part.
It is easy for
those who have seen it in this book
It will show the
implied meanings also,
This work will
spread it out like a mat that was kept rolled
It will say the
essence and the food control
Arahara! Vãdam and poem, verily the words.
Commentary:
Agatthiyar says
that releasing the semen is harmful and it is bad for the ascension of the fire
of kundalini. Agatthiyar says that the
meijnanam reveals all these esoteric philosophies clearly as if spreading the
mat that was kept rolled up. It talks
about the central theme or the essence, about food control, breath control and
greatness of words which are poems.
அகத்தியர்
விந்துவை வெளிவிடுவது யோகிக்கு மிகக் கெடுதல் அது குண்டலினி அக்னியையும் எழவிடாது
என்கிறார். இதையும் இது போன்ற பல
விஷயங்களையும் மெய்ஞ்ஞானம் கூறுகிறது என்றும் அது எல்லாவற்றையும் சுருட்டி வைத்த
பாயை விரிப்பதைப் போல விவரிக்கிறது என்றும் கூறும் அகத்தியர் இந்த நூலிலிருந்து
ஒருவர் கருப்பொருள், உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி கவி ஆகியவற்றை அறியலாம்
என்றும் கூறுகிறார்.
No comments:
Post a Comment