Verse 151
தான்
என்றீர் என்குருவே அகத்திய மூர்த்தி
சந்து
நடு விழுந்தான் என்றேசிப் போட்டீர்
வான்
என்ற சிவஞானம் ராச யோகம்
வந்தோர்கள்
இருந்ததனால் தவம்தான் போச்சே
ஊன்
என்ற உடம்பெடுத்தால் எல்லாம் உண்டே
உடல்
ஒழிந்துப் போனாக்கால் எல்லாம் போச்சு
காண் என்றீர் என்குருவே இந்த வார்த்தைக்
கடைபோட்டு
விபரமாய்க் காட்டுவீரே
Translation:
You talked about
Self, My Preceptor, Agatthiyar moorthy,
You chided him
saying, “He fell in the gap”
The Sivajnanam-the
sky, Raja yogam
As those who occurred
remained, they were lost,
Everything is
available if a body is taken up
When the body
perishes everything is lost
You said, "See", my preceptor,
Please explain it
in detail as if spreading a shop.
Commentary:
Pulatthiyar
mentioned that Agatthiyar has so far described about different types of people,
how they lose themselves going after insignificant benefits including physical
pleasures with a woman and erroneous worship rituals. He has said that
Sivajnana and Rajayoga are lost for them.
Then, Pulatthiyar
brings up a very interesting point. He
says that Agatthiyar has told briefly that tapas, Sivajnanam and Raja yogam
are possible only when there is the physical body. It is lost if the body is lost. This brings an important point about birth
into this world and the karma theory.
This material world is called karma bhoomi or the land where one can
work out his karma. For that one has to
take up a physical form. It is said that
even the celestials are jealous of people in this world as they have a chance
to enact their karmic results. When one
leaves this physical world one is locked up in a subtle form and one can only
enjoy the benefits of one’s previous karma. One
cannot do anything about it, one cannot amend it or expiate it. Pulatthiyar
reflects this sentiment about karma in this verse. He requests Agatthiyar to
elaborate upon this concept.
இதுவரை
அகத்தியர் பலவித மக்களைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு, தற்பெருமை, உடல் இன்பம் போன்ற
அல்பப் பலன்களைத் தேடியவராக தமது தவம்
சிவஞானம் ராஜயோகம் ஆகியவற்றை இழந்துவிடுகின்றனர் என்று கூறியுள்ளதாக புலத்தியர்
சொல்கிறார். இதனை அடுத்து புலத்தியர் ஒரு
மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார். அது கர்ம வினையும் இவ்வுலகில்
பிறப்பும் என்பது.
பருப்போருளால்
ஆன இந்த உலகம் கர்ம பூமி எனப்படுகிறது. ஏனெனில் இங்கு பிறவி எடுத்தால்தான்
ஒருவரால் தமது கர்மச் சுமையைக் குறைத்துக்கொள்ளவும் அவற்றிற்குப் பரிகாரம்
செய்யவும் இயல்கின்றது. அதனால்,
தேவர்களும் மானிடரைக் கண்டு பொறாமை கொள்வர் ஏனெனில் தேவர்களால் தமது கர்மப்
பயனைத்தான் அனுபவிக்கமுடியும் அவற்றை மாற்றி அமைக்க முடியாது. அதற்கு அவர்கள் மீண்டும் இவ்வுலகில் ஒரு
பிறவியை எடுக்கவேண்டும் என்பர்.
புலத்தியரும் இந்த கர்ம தத்துவத்தைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார். உடல் எடுத்தால்தான் ஒருவரால் தவம் புரிந்து
சிவஞானத்தைப் பெற முடியும். ராஜயோகத்தை
மேற்கொள்ள முடியும். இந்த உடல்
அழிந்துவிட்டால் எல்லாம் போச்சு என்கிறார் அவர்.
இதனைப் பற்றி விரிவாகக் கூறுமாறு புலத்தியர் அகத்தியரை வேண்டுகிறார்.
No comments:
Post a Comment